என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
புதிய ஏர்பாட்ஸ், மேம்பட்ட மேக்புக் ப்ரோ உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்
Byமாலை மலர்20 April 2020 10:45 AM GMT (Updated: 20 April 2020 10:45 AM GMT)
ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய ஏர்பாட்ஸ், மேம்பட்ட மேக்புக் ப்ரோ, ஐபேட் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதய சாதனங்கள் பற்றிய தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ், புதிய ஐபேட் ஏர், 12 இன்ச் மேக்புக் மற்றும் ஆப்பிள் கேம் கண்ட்ரோலர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தற்சமயம் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடலை மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. எனினும், ஆப்பிள் நடத்த இருந்த மார்ச் மாத நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல் தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஓவர் இயர் ஹெட்போன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹெட்போன் ஏர்பாட்ஸ் எக்ஸ் என அழைக்கப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ஆப்பிள் புதிய மேக்புக் ப்ரோ மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய ஐபேட் ஏர் மாடலும் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அன்டர்-ஸ்கிரீன் டச் ஐடி சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது மினி எல்இடி டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை ஐபேட், சிறிய ஹோம்பாட், ஆப்பிள் கேம் கண்ட்ரோலர், ஐபோன் 12 உள்ளிட்டவற்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.
Next Story
×