என் மலர்
கணினி
2021 ஜூலை மாதம் வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் இப்படி தான் நடக்கும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க 2020 முதல் பாதியில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்படுவதாகவும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையிலான அறிவிப்பினை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் 2021 ஜூலை வரை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்போருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை மைக்ரோசாஃப்ட் கூர்ந்து கவனித்து வருகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் கால அட்டவணையை மாற்றியமைத்து வருகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஜூலை 2021 வரை டிஜிட்டல் முறையில் நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் மற்றும் ப்ளிப்கார்ட் கூட்டணி அமைத்துள்ளன.
உபெர் நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. முன்னதாக உபெர் நிறுவனம் பிக் பாஸ்கெட் உடன் இணைந்து மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
இந்த சேவைக்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என எபெர் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுக்க ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என உபெர் தெரிவித்து இருக்கிறது.

முந்தைய பிக் பாஸ்கெட் டெலிவரிக்களை போன்றே புதிய கூட்டணியிலும் உபெர் நிறுவனம் அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் என தெரிவித்துள்ளது. சேவையில் பங்கேற்கும் அனைத்து ஓட்டுனர்களும் அதிக பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுவர் என உபெர் தெரிவித்துள்ளது.
முதறகட்டமாக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருக்கும் சேவை டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் அமலாகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் ஆகும்.
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் முன்னணி பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரியல்மி பிராண்டு ஆடியோ சாதனங்கள் மற்றும் அக்சஸரீக்களை அறிமுகம் செய்துள்ளது.
தற்சமயம் ரியல்மி பிராண்டு தொலைகாட்சி சந்தையில் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு அளவுகளில் ரியல்மி டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தரத்திற்கான சான்றளிக்கும் பி.ஐ.எஸ். தளத்தில் ரியல்மி டிவி43 பெயரில் எல்இடி டிவி ஒன்று சான்று பெற்று இருக்கிறது. இது புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி வருவதை உறுதி செய்து இருக்கிறது. இதே மாடல் நம்பர் JSC55LSQL பெயரில் உருவாகியிருக்கிறது. இந்த 55 இன்ச் டிவி புதிய ரியல்மி டிவி சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய டிவி சீரிஸ் இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை தவிர, புதிய டிவி மாடல் பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. தற்சமயம், நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்த காலக்கெடுவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த ஆண்டிற்குள் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இது தள்ளிவைக்கப்பட்டது.
ரியல்மி டிவி சீரிஸ் சிறப்பம்சங்கள் அறியப்படவில்லை என்றாலும், இவற்றில் அல்ட்ரா ஹெச்டி மாடல்கள் ஹெச்டிஆர் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இவை கஸ்டரம் யூசர் இன்டர்பேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ரெட்மி பிராண்டின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலர் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. பிளக் இன்டகிரேஷன் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் பேண்ட் கலர் டிஸ்ப்ளே, ஃபிட்னஸ் டிராக்கிங் வசதி, இதய துடிப்பு சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் பேண்ட் 4 மற்றும் ஹானர் பேண்ட் 5ஐ போன்று புதிய ரெட்மி பேண்ட் சாதனத்திலும் யு.எஸ்.பி. பிளக் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டையல் ஃபேஸ் ஆப்ஷன்கள், நான்கு ரிஸ்ட்பேண்ட் வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன.
முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரெட்மி பேண்ட் விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இதன் இந்திய வெளியீட்டு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ரெட்மி பேண்ட் 1.08 அங்குல கலர் டிஸ்ப்ளே, ஐந்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரெட்மி பேண்டில் 70-க்கும் அதிகமான பிரத்யேக டையல் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் நான்கு வித ரிஸ்ட்பேண்ட் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.
யு.எஸ்.பி. கனெக்டர் கொண்டிருக்கும் ரெட்மி பேண்ட் பில்ட் இன் பேட்டரி மூலம் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும். ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருப்பதால், ரெட்மி மற்றும் எம்.ஐ. தவிர மற்ற மாடல்களிலும் பயன்படுத்த முடியும்.
புதிய ரெட்மி பேண்ட் விலை CNY 99 (இந்திய மதிப்பில் ரூ. 1100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளங்களில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் பயனர்கள் எளிதில் வீடியோ சாட் மேற்கொள்ள முடியும்.
முன்னதாக சூம் போன்ற வீடியோ கால் செயலிகள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை தொடர்ந்து ஃபேஸ்புக் தனது செயலியின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து உலகின் பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், வீடியோ சாட் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

நேரடியாக சந்திக்காமல் இருப்பதால், மக்கள் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெஸ்க்டாப் பிரவுசர் கொண்டு ஆடியோ, வீடியோ காலிங் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்து இருக்கிறது. மேக் ஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் மெசஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி இலவச க்ரூப் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என மெசஞ்சர் பிரிவு துணை தலைவர் ஸ்டான் சன்னோவ்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷன் பற்றிய திட்டத்தை ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. மெசஞ்சர் செயலியை தனி நிறுவனமாக மாற்றும் பணிகளின் போது இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றிய இதர தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டன.
விண்டோஸ் இயங்குதளத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷனை மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்தும், மேக் வெர்ஷனை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்லலாம்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.110 பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெலீட் மெசேஜஸ் அம்சத்தினை பெயர் மாற்றுவது, பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்வது மற்றும் ஸ்டேட்டஸ் வீடியோ அளவை குறைப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அவற்றை மறைந்து போக செய்யும் அம்சத்தினை வாட்ஸ்அப் தனது பீட்டா செயலியில் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தினை முதலில் டிஸ்-அப்பியரிங் மெசேஜஸ், டெலீட் மெசேஜஸ் என இரு பெயர்களை மாற்றி தற்சமயம் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் என அழைக்கிறது.

முதற்கட்டமாக இந்த அம்சம் குரூப்களில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் இது அனைத்து சாட்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் அம்சத்தை செயல்படுத்தி இருக்கும் சாட்களை குறிக்கும் இன்டிகேட்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது சாட் பட்டியலில் காணப்படும்.
இதைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் பல சாதனங்களில் லாக்இன் செய்யும் அம்சத்தினை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என வெவ்வேறு சாதனங்களில் ஒரே அக்கவுண்ட்டிற்கு லாக் இன் செய்யலாம். இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது,
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ அளவினை 30 நொடிகளில் இருந்து 15 நொடிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாட்ஸ்அப் சர்வெர் ஓவர்லோடு ஆவதை தடுக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பதற்ற நிலை முழுமையாக சரியாகும் வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டித்து இருப்பதோடு இலவச அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் பயனர்களுக்கு வேலிடிட்டியை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 17 வரை வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு இருப்பதோடு, 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.



முன்னதாக ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புடன் இலவச டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்தில் வழங்குவதாக அறிவித்தது. இத்துடன் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத காரணத்தால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர ஏடிஎம், யுபிஐ, கால், எஸ்எம்எஸ் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே யுபிஐ, மொபிகுவிக், ஃபிரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
மேலும் எஸ்எம்எஸ் மூலம் ரீசார்ஜ் செய்ய ரிலையன்ஸ் ஜியோ ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது மொபைல் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இன்கமிங் அழைப்புகள் வரும். இந்த சலுகை மார்ச் 22 ஆம் தேதிக்கு பின் வேலிடிட்டி நிறைவுற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலிடிட்டி நீட்டிப்பு தவிர ஊரடங்கின் போது டாக்டைம் தீர்ந்து போன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் சிம் கார்டு சேவை ஏப்ரல் 20 வரை நிறுத்தப்பட மாட்டாது, மேலும் ரூ. 10 இலவச டாக்டைம் இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏழை மற்றும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்" என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், தொழில்நுட்ப சந்தையின் முன்னணி நிறுவனங்களான ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் ஹூவாய் உள்ளிட்டவை தங்களது சாதனங்களுக்கான வாரண்டி சலுகை காலம் நீட்டிக்கப்படும் என அறிவித்தன. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்டவை கொரோனா வைரஸ் சந்தேகங்களை போக்கிக் கொள்ள புதிய சேவையை துவங்கின.
முன்னதாக பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் "Work@Home" சலுகையின் பேரில் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக அறிவித்தது. இந்த சலுகை வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்காக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாள்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் டு ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இதனை ரிலையன்ஸ் ஜியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது. ரிலைன்ஸ் ஜியோ அறிவிப்பின் படி ஜியோ ஃபைபர் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருமடங்கு டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியின் மை வவுச்சர்ஸ் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில தினங்களில் ஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகைக்கான அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.

நாட்டில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் டேட்டா பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும். முன்னதாக ஜியோ பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்து ஒவ்வொரு சலுகையிலும் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து இருந்தது.
ஜியோ ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. இருமடங்கு டேட்டா தவிர ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ ஸ்மார்ட்வலாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.39 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் ஏ1 அணியக்கூடிய சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ மாடலில் ஹூவாய் நிறுவனம் பிளட் ஆக்சிஜன் சாட்யூரேஷன் மானிட்டரிங் அம்சத்தினை வழங்கி இருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், பிரெஷர் லெவல் மானிட்டரிங் மற்றும் உறக்கத்தை கண்காணிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ மாடலில் 15 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது 190 வகையான தகவல்களை இயக்கி பயனர்களுக்கு சரியான விவரங்களை வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆறு உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ சிறப்பம்சங்கள்:
- 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் ஏ1 சிப்
- ப்ளூடூத் 5.1 வசதி
- ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9.0 இயங்குதளங்களுடன் இயங்கும் வசதி
- ஹூவாய் லைட் ஒஎஸ்
- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- ஜிபிஎஸ் வசதி
- 4 ஜி.பி. மெமரி
- ப்ளூடூத் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
- 15 உடற்பயிற்சி மோட்கள்
- பல்வேறு சென்சார்கள்
- இதய துடிப்பு, உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
- அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ கிராஃபைட் பிளாக், லாவா ரெட், மின்ட் கிரீன் மற்றும் ஐசி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இகன் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,720) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ 42 எம்.எம். ஃபிராஸ்டி வைட் மற்றும் செஸ்ட்நட் ரெட் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை முறையே 229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18,860) மற்றும் 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 20,500) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. சீரிஸ் மாடல்கள் இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் Mi டி.வி. பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக Mi டி.வி. இந்திய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பட்ஜெட் ரக டி.வி.க்களை வெளியிட்டு Mi டி.வி. பிராண்டு பிரபலமானது.
ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலமானதை தொடர்ந்து சியோமி பிராண்டு டி.வி. சந்தையில் களமிறங்கியது. விற்பனை மைல்கல் கடந்து இருப்பதை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் முதல் Mi டி.வி. மாடல் 2018 பிப்ரவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. இதில் சியோமி Mi டி.வி. 4 சீரிஸ் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இது உலகின் மெல்லிய எல்.இ.டி. டி.வி. என்ற பெருமையுடன் வெளியிடப்பட்டது. இதன் 55 இன்ச் மாடல் ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் 64 பிட் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ட் ஏ53 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. சீரிசை தொடர்ந்து Mi டி.வி. பிராண்டு Mi டி.வி. 4ஏ சீரிஸ், Mi டி.வி. 4சி சீரிஸ் மற்றும் Mi டி.வி. 4எக்ஸ் சீரிஸ் மாடல்களை வெளியிட்டு இருக்கிறது.
இதில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலாக 2020 சியோமி Mi டி.வி. 4எக்ஸ் 55 மாடல் கிடைக்கிறது. இது ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ மாடல் ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 இயங்குதளங்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஒஎஸ் 13 இயங்குதளத்தினை அறிமுகம் செய்தது. பின் 2019 டிசம்பர் வாக்கில் ஐஒஎஸ் 13.3 பதிப்பினை வெளியிட்டது.
அந்த வரிசையில் தற்சமயம் ஐஒஎஸ் 13.4 மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 இயங்குதளங்களை ஆப்பிள் வெளியிட்டு வருகிறது. புதிய வெர்ஷன்களில் ஒன்பது புதிய மெமோஜி மற்றும் அனிமோஜி ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெயில் செயலியில் புதிய டூல்பார் வழங்கப்பட்டுள்ளது.

ஐபேட் ஒஎஸ் 13.4 பதிப்பில் டிராக்பேட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட நேவிகேஷன் மற்றும் தலைசிறந்த பிரெசிஷன் கொண்டருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் புதிய மேஜிக் கீபோர்டினை வெளியிட இருக்கிறது. இது 2018 மற்றும் 2020 ஐபேட் ப்ரோ மாடல்களில் சீராக இயங்கும்.
மேலும் இதில் மேஜிக் மவுஸ், மேஜிக் மவுஸ் 2, மேஜிக் டிராக்பேட், மேஜிக் டிராக்பேட் 2 மற்றும் மூன்றாம் தரப்பு யு.எஸ்.பி. மற்றும் ப்ளூடூத் மவுஸ் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது.
இவைதவிர டிவி ஒஎஸ் 13.4 மற்றும் ஹோம்பாட் ஒஎஸ் 13.4 இயங்குதளங்களையும் ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ச் ஒஎஸ் 6.2 பதிப்பில் இன் ஆப் பர்ச்சேஸ், மியூசிக் பிளேபேக், வைபை டூ ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.






