என் மலர்

  தொழில்நுட்பம்

  ரியல்மி
  X
  ரியல்மி

  இணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.  சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் முன்னணி பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரியல்மி பிராண்டு ஆடியோ சாதனங்கள் மற்றும் அக்சஸரீக்களை அறிமுகம் செய்துள்ளது.

  தற்சமயம் ரியல்மி பிராண்டு தொலைகாட்சி சந்தையில் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு அளவுகளில் ரியல்மி டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்திய தரத்திற்கான சான்றளிக்கும் பி.ஐ.எஸ். தளத்தில் ரியல்மி டிவி43 பெயரில் எல்இடி டிவி ஒன்று சான்று பெற்று இருக்கிறது. இது புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி வருவதை உறுதி செய்து இருக்கிறது. இதே மாடல் நம்பர் JSC55LSQL பெயரில் உருவாகியிருக்கிறது. இந்த 55 இன்ச் டிவி புதிய ரியல்மி டிவி சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

  ரியல்மி டிவி

  புதிய டிவி சீரிஸ் இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை தவிர, புதிய டிவி மாடல் பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. தற்சமயம், நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்த காலக்கெடுவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  எனினும், இந்த ஆண்டிற்குள் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இது தள்ளிவைக்கப்பட்டது.

  ரியல்மி டிவி சீரிஸ் சிறப்பம்சங்கள் அறியப்படவில்லை என்றாலும், இவற்றில் அல்ட்ரா ஹெச்டி மாடல்கள் ஹெச்டிஆர் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.  இத்துடன் இவை கஸ்டரம் யூசர் இன்டர்பேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
  Next Story
  ×