என் மலர்tooltip icon

    கணினி

    ரெட்மி பிராண்டின் புதிய 98 இன்ச் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டின் ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் டி.வி. சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மியின் மிகப்பெரும் டி.வி. மாடலாக வெளியாகி இருக்கும் ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் 98 இன்ச் அளவில் உருவாகி இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 98 இன்ச் 4K ஸ்கிரீன் ஹெச்.டி.ஆர். வசதி, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் MEMC மோஷன் கம்பென்சேஷன் தொழில்நுட்பம், அம்லாஜிக் 12 நானோமீட்டர் டி972 சிப்செட் கொண்டிருக்கிறது. பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. மேலும் டால்பி + டி.டி.எஸ்., 4 யூனிட் பெரிய கேவிட்டி ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. 

    ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ்

    ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் 98 இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 98 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
    - 1.9 ஜிகாஹெர்ட்ஸ் அம்லாஜிக் கார்டெக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 டி972 பிராசஸர்
    - மாலி-G31 MP2 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - பேட்ச் வால்
    - வைபை 802.11 ac, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., S/PDIF, ஈத்தர்நெட்
    - H.264, Real, MPEG1/2/4, வசதிகள்
    - 2 × 8வாட் ஸ்பீக்கர், டி.டி.எஸ். ஆடியோ, டால்பி ஆடியோ

    ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் 98 இன்ச் மாடல் விலை 19999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 2,15,390) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    அந்த இயங்குதளத்தில் இந்த பிரச்சினை இருப்பதை ஆப்பிள் நிறுவனம் அப்பட்டமாக ஒப்பு கொண்டு இருக்கிறது.



    ஐஒஎஸ் 13 மற்றும் ஐபேட் ஒஎஸ் 13 இயங்குதளங்களில் உள்ள பெர்சனல் ஹாட்ஸ்பாட் அம்சத்தில் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இணைப்பு கோளாறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி ஆப்பிள் சர்வீஸ் மையங்களை நாடுவர் என ஆப்பிள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்காலிகமாக பெர்சனல் ஹாட்ஸ்பாட் அம்சத்தை ஆஃப் செய்து பின் மீண்டும் ஆன் செய்ய ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஐஒஎஸ் 13.4

    புதிய கோளாறினை ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஐஒஎஸ் 13.4 பதிப்பில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய செய்தி குறிப்புகளில் பெர்சனல் ஹாட்ஸ்பாட் சரி செய்யப்பட்டுள்ளதாக எவ்வித தகவலும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சினை ஹார்டுவேர் சார்ந்தது இல்லை என்றும் பயனர்கள் தங்களது சாதனங்களை அப்டேட் செய்து கொள்ள வலியுறுத்தி இருக்கிறது. இதுவரை புதிய மென்பொருள் கோளாறு சரி செய்வது பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
    இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் அந்த அம்சமும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.



    இன்ஸ்டாகிராம் செயலில் புதிய அம்சம் ஒன்று சோதனை செய்யப்படுகிறது. ஸ்னாப்சாட் செயலியில் உள்ள ஸ்டோரீஸ் அம்சம் போன்று புதிய அம்சம் இருக்கும். இது இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் மற்றொருவர் படித்ததும், குறுந்தகவல் தானாக மறைந்து போக செய்யும்.

    ரிவர்ஸ் என்ஜினியரிங் பொறியாளரான ஜேன் மன்சுன் வொங் என்பவர் இந்த அம்சத்திற்கான குறியீடுகளை கண்டறிந்து இருக்கிறார். 'ஸ்பீக் நோ ஈவில்' எமோஜி எனும் பெயரில் உருவாகி வரும் புதிய அம்சம் பல்வேறு சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிறது.

    புதிய அம்சத்தை உறுதிப்படுத்தும் வீடியோவினை வொங் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பயனர் அனுப்பும் குறுந்தகவல் தானாக மறையும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய அம்சம் முதற்கட்ட சோதனைகளில் உள்ளதாக வொங் தெரிவித்து இருக்கிறார். 

    குறுந்தகவல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். இந்த அம்சம் முதற்கட்ட சோதனைகளில் உள்ளது. என இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக ட்விட்டர் தளத்திலும் இதேபோன்ற அம்சம் ஃபிளீட்ஸ் எனும் பெயரில் சோதனை செய்ய துவங்கியது. ஸ்னாப்சாட் மூலம் பிரபலமான மறைந்து போகச் செய்யும் அம்சம் தற்சமயம் முன்னணி தளங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உதவும் நோக்கில் 5 ஜி.பி. இலவச டேட்டாவினை வழங்குகிறது.



    இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை சவாலாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். நாடு முழுக்க இதே நிலை தான் நீடித்து வருகிறது.

    வீட்டில் இருந்து பணியாற்றும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. 

    போன் பயன்பாடு

    புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். ‘Work@Home’ என அழைக்கிறது. இது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வழங்கும் 5 ஜி.பி. டேட்டா முற்றிலும் இலவசம் ஆகும். 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு நொடிக்கு 1 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

    புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும்.

    கொரோனா வைரஸ் பாதிப்படைந்து உலகளவில் இதுவரை சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆட்-ஆன் சலுகைகளில் இருமடங்கு பலன்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018 ஆண்டில் ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 400 எம்.பி., 1 ஜி.பி., 3 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    அதன்படி ஆட்-ஆன் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் 800 எம்.பி., 2 ஜி.பி., 6 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகின்றன. இதுதவிர ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்கு அதிகமாக வழங்கப்படுகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ ஆட்-ஆன் சலுகை

    அந்த வகையில் இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு 75, 200, 500 மற்றும் 1000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகின்றன. இவற்றில் வேலிடிட்டி வழங்கப்படவில்லை என்பதால், வழக்கமான ரீசார்ஜ் சலுகைக்கான வேலிடிட்டி இருக்கும் வரை இதற்கான வேலிடிட்டி இருக்கும்.

    இந்த சலுகைகளில் உள்ள டேட்டா, வழக்கமான சலுகையில் உள்ள டேட்டா தீர்ந்து போனதும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் எத்தனை வவுச்சர்களை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். முதலில் ரீசார்ஜ் செய்த சலுகைக்கான டேட்டா தீர்ந்ததும் அடுத்த சலுகை பயன்படுத்தப்படும்.
    மேஜிக் கீபோர்டு, இருமடங்கு வேகமான பிராசஸருடன் மேம்பட்ட மேக்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் சாதனத்தை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மேக்புக் ஏர் மாடல் மேஜிக் கீபோர்டு, இருமடங்கு அதிக மெமரி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் பேஸ் மாடலில் 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய மேக்புக் ஏர் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது. இது இருமடங்கு வேகமான சி.பி.யு., 80 சதவீதம் வரை வேகமான கிராஃபிக்ஸ் வழங்குகிறது. இதில் 13 இன்ச் ட்ரூ டோன் ரெட்டினா டிஸ்ப்ளே, டச் ஐ.டி. மற்றும் ஒரு நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேஜிக் கீபோர்டு பயன்படுத்தும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    மேக்புக் ஏர்

    ஆப்பிள் மேக்புக் ஏர் 2020 சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 2560x1600 பிக்சல் 227 PPI ரெட்டினா டிஸ்ப்ளே ட்ரூ டோன்
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் 
    - இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ்
    - 8 ஜி.பி. 3733MHz ரேம்
    - 256 ஜி.பி. / 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி
    - மேக் ஒ.எஸ். கேட்டலினா
    - மேஜிக் கீபோர்டு, டச் ஐ.டி.
    - ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைடு ஸ்டீரியோ சவுண்ட், டால்பி அட்மாஸ் பிளேபேக்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
    - 2x தண்டர்போல்ட் 3 போர்ட்கள், டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட்
    - யு.எஸ்.பி. 3.1
    - வைபை 802.11ac டூயல் பேண்ட், ப்ளூடூத் 5.0
    - 49.9‑வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
    - 30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்

    புதிய மேக்புக் ஏர் யுனிபாடி வெட்ஜ் டிசைன் கொண்டிருக்கிறது. இது கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் கோர் ஐ3, 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 92,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கோர் ஐ5, 512 ஜி.பி. மாடல் விலை 1299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 96,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆப்பிள் மேக் மினி சாதனமும் அப்டேட் செய்யப்பட்டு இருமடங்கு மெமரியுடன் கிடைக்கிறது. இதன் பேஸ் வெர்ஷனான 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 74,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 1,04,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இ.கியூ.8 ஆடியோ நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    இ.கியூ.8 ஆடியோ நிறுவனத்தின் முதல் ஆடியோ சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இ.கியூ.8 இயர்பட்ஸ் என அழைக்கப்படுகிறது. 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் குவால்காம் ஆப்ட்எக்ஸ் ஆடியோ தொழில்நுட்பம், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ளூடூத் 5.0, சி.வி.சி. 8.0 தொழில்நுட்பம், IPX5 சான்று உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது. இ.கியூ.8 இயர்பட்ஸ் குறைந்த எடையில், சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் சார்ஜிங் கேஸ் வெளிப்புறம் ஸ்டோன் பிளாக் ஃபேப்ரிக் கொண்டிருக்கிறது. இவை குவால்காம் 3020 சிப்செட், ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, ஏ.ஏ.சி. ஆடியோ டீகோடிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஹைஃபை சவுண்ட், தலைசிறந்த பேஸ் மற்றும் 6 எம்.எம். நியோடிமியம் கிராஃபைன் டிரைவர்களை கொண்டிருக்கிறது.

    இ.கியூ.8 இயர்பட்ஸ்

    ஆட்டோ பேரிங் மற்றும் ஆட்டோ சார்ஜிங் அம்சம் கொண்ட இ.கியூ.8 ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் கண்ட்ரோல்கள், டூயல் மைக்ரோபோன்களை கொண்டிருப்பதால் ஆழைப்புகளை மேற்கொள்வது, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதிகளை வழங்குகிறது.

    ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக ஏழு மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் சார்ஜிங் கேஸ் பயன்படுத்தினால் கூடுதலாக 40 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும். 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் இ.கியூ.8 யு.எஸ்.பி. டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. இதனை 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் பயன்படுத்த முடியும்.

    இந்தியாவில் இ.கியூ.8 இயர்பட்ஸ் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் இ.கியூ. அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.
    கோடக் நிறுவனத்தின் புதிய சி.ஏ. சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    கோடக் நிறுவனம் சி.ஏ. சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சி.ஏ. சீரிஸ் டி.வி.க்கள் 43, 50, 55 மற்றும் 65 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் 4K ஸ்கிரீன் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் ஹெச்.எல்.ஜி. வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் கேடக் சி.ஏ. சீரிஸ் டி.வி.க்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும், கூகுள் குரோம்காஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது. பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய கோடக் டி.வி.க்கள் மெட்டல் ஸ்டான்ட் உடன் வருகிறது. மேலும் இதனை சுவரில் மாட்டிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    கோடக் சி.ஏ. சீரிஸ் டி.வி.

    கோடக் சி.ஏ. டி.வி. சிறப்பம்சங்கள்

    - 43 / 50 /55 இன்ச் 3840x2160 பிக்சல் எல்.இ.டி. டிஸ்ப்ளே
    - குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர்
    - மாலி – 450 டூயல்-கோர் GPU
    - 1.75 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 
    - குரோம்காஸ்ட் பில்ட் இன்
    - வைபை 802.11 b/g/n 2.4GHz, ப்ளூடூத் 5.0, IR
    - 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட், ஆக்ஸ் போர்ட்
    - ரிமோட்டில் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே ஹாட் கீ
    - 30வாட் பாக்ஸ் பாட்டம் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட்

    கோடக் சி.ஏ. டி.வி. சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 23,999 என்றும் 50 இன்ச் மாடல் ரூ. 27,999 என்றும் 55 இன்ச் மாடல் ரூ. 30,999 என்றும் டாப் எண்ட் 65 இன்ச் மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கோடக் டி.வி. மாடல்களின் விற்பனை மார்ச் 19-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
    சியோமி Mi வயர்லெஸ் பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சியோமி இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் 10000 எம்.ஏ.ஹெச். Mi வயர்லெஸ் பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10 வாட் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கியூ.ஐ. சான்று பெற்ற பவர் பேங்க் டூ-வே ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18 வாட் வையர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. மேலும் இதில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது. புதிய பவர் பேங்க் சர்வதேச கியூ.ஐ. தரத்தில் உருவாகி இருக்கிறது.

    சியோமி Mi பவர் பேங்க்

    இந்தியாவில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் இதுவரை சியோமி ஸ்மார்ட்போன் வெளியிடப்படவில்லை. எனினும், சர்வதேச சந்தையில் அந்நிறுவனத்தின் Mi 10 மற்றும் Mi9 ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய 10000 Mi வயர்லெஸ் பவர் பேங்க் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்.



    மைக்ரோசாஃப்ட் நிர்வாக குழுவில் இருந்து துணை நிறுவனர் பில் கேட்ஸ் விலகிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    நிறுவனத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்து பில் கேட்ஸ் ஏற்கனவே விலகி தன் மனைவியுடன் இணைந்து துவங்கிய அறக்கட்டளை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் பின் 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக பில் கேட்ஸ் இருந்து வந்தார்.

    "கடந்த ஆண்டுகளில் பில் கேட்ஸ் உடன் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பில் கேட்ஸ் இந்த நிறுவனத்தை மென்பொருள் ஆற்றலை ஜனநாயகப்படுத்தும், சமுதாயத்தின் பெரும் சவால்களை தீர்க்க வழி செய்யும் நம்பிக்கையில் துவங்கினார்" என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாடெல்லா தெரிவித்து இருக்கிறார். 

    மைக்ரோசாஃப்ட்

    ‘தொழில்நுட்ப ஆலோசகரான பில் கேட்ஸ் அறிவுரைகளை கேட்டு மைக்ரோசாஃப்ட் பயன்பெறும் என நாடெல்லா மேலும் தெரிவித்தார். பில் கேட்ஸ் உடனான நட்புக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து 2000 ஆண்டு பில் கேட்ஸ் விலகினார்.
    சாம்சங் நிறுவனத்தின் ஃபன்பிலீவபிள் டி.வி. சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.



    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஃபன்பிலீவபிள் சீரிஸ் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் ஹெச்.டி. மற்றும் 43 இன்ச் FHD ஸ்மார்ட் டி.வி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய டி.வி. சீரிஸ் பர்சனல் கம்ப்யூட்டர் மோட், கன்டென்ட் கைடு, மியூசிக் சிஸ்டம், இண்டர்நெட் பிரவுசிங் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் ஃபன்பிலீவபிள் சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் இல்லாத வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

    சாம்சங் டி.வி.

    இந்தியாவில் சாம்சங் ஃபன்பிலீவபிள் சீரிஸ் துவக்க விலை ரூ. 12,990 என துவங்குகிறது. புதிய டி.வி.க்கள் இரண்டு வருட வாரண்டியுடன் வருகிறது. இவை சாம்சங் ஸ்மார்ட் பிளாசாக்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
    வு பிராண்டின் புதிய பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



    வு நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வு ஸ்மார்ட் டி.வி.க்கள் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K மாடல்களில் அறிமுகமாகி இருக்கின்றன.

    இவற்றில் ஏ பிளஸ் கிரேடு பேனல், 400 பிளஸ் நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 வசதி, டால்பி ஆடியோ மற்றும் 30 வாட் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம், பெசல் லெஸ் டிசைன், வி.ஒ.டி. அப்ஸ்கேலர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆண்ட்ராய்டு 9.0, பில்ட் இன் குரோம்காஸ்ட், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவற்றுக்கு ரிமோட்டில் ஹாட் கீ வழங்கப்பட்டு இருக்கிறது.

    வு ஸ்மார்ட் டி.வி.

    வு பிரீமியம் டிவி. (43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச்) சிறப்பம்சங்கள்:

    - 43 / 50 /55 இன்ச் 3840x2160 பிக்சல் எல்.இ.டி. டிஸ்ப்ளே
    - குவாட்கோர் பிராசஸர், டூயல் கோர் GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு டி.வி. 9.0
    - பில்ட் இன் குரோம்காஸ்ட், ஸ்கிரீன் மிரரிங்
    - வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0, IR, 3 x ஹெச்.டி.எம்.ஐ
    - 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட், AUX போர்ட்
    - நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவற்றுக்கு ரிமோட்டில் ஹாட் கீ
    - 30 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர், ட்ரூபாஸ் HDX, ட்ரூசரவுண்ட் X, டால்பி ஆடியோ

    புதிய வு பிரீமியம் டி.வி 43 இன்ச் மாடல் விலை ரூ. 24,999, 50 இன்ச் மாடல் ரூ. 27,999 மற்றும் 55 இன்ச் மாடல் ரூ. 31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    ×