என் மலர்
கணினி
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான நிலையில், இவை முதற்கட்டமாக ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பி.எஸ்.என்.எல். ரூ. 247 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (தினமும் 250 நிமிடங்கள்), 3 ஜி.பி.டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ரூ. 247 சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 998 சலுகை வேலிடிட்டியினை 240 நாட்களில் இருந்து 270 நாட்களாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய வேலிடிட்டி விளம்பர நோக்கில் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. ரூ. 998 பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு மாதங்களுக்கு இரோஸ் நௌ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில், தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
எனினும் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதன் வேலிடிட்டி 425 நாட்கள் ஆகும். இந்த சலுகையினை பயனர்கள் மார்ச் 31 வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கிட்ஸ் மோட், ஸ்லீப் டிராக்கிங் என பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒ.எஸ். 7 மற்றும் வாட்ச் சீரிஸ் 6 மாடல் இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஐ.ஒ.எஸ். 14 இயங்குதள குறியீடுகள் இணையத்தில் லீக் ஆகியிருந்தன. அவற்றில் ஸ்லீப் டிராக்கிங், டேக்கிமீட்டர், வாட்ச் ஃபேசை பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வாட்ச் ஃபேஸ்களை பொருத்தவரை ஆப்பிள் இரண்டு அப்டேட்களை வழங்க இருக்கிறது. இதில் முதல் அம்சம் பயனர் தங்களின் ஐபோன் வாட்ச் ஆப் கொண்டு வாட்ச் ஃபேஸ்களை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது. இவற்றை ஃபைல்ஸ் செயலியில் பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மற்றொரு அம்சம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளை வாட்ச் ஃபேஸ் ஆக பதிவு செய்ய அனுமதிக்கிறது.
வாட்ச் ஒ.எஸ்.7 தளத்தில் பயனர்கள் ஒரே ஐபோன் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்பிள் வாட்ச்களை குழந்தைகள் பயன்படுத்தும் போது பிரத்யேக அம்சங்களை இயக்க அனுமதி வழங்க முடியும். இதனால் குழந்தைகள் பயன்படுத்தும் ஆப்பிள் வாட்ச்சினை மற்றொரு ஐபோன் மூலம் இயக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இத்துடன் ஸ்லீப் டிராக்கிங் மற்றும் இன்ஃபோகிராஃப் ப்ரோ என இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் ஸ்லீப் ஆப் கொண்டு பயனர் உறங்கும் முறைகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இன்ஃபோகிராஃப் ப்ரோ அம்சத்தில் டேக்கிமீட்டர் விவரங்கள் வாட்ச் ஃபேசில் இடம்பெற்று இருக்கும்.
ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிங்கியிருக்கும் நிலையில், மற்றொரு சீன நிறுவனமும் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் சமீபத்தில் ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் இந்தியாவில் ஒப்போ என்கோ ஃபிரீ டி.டபுள்யூ.எஸ். இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில், ஒப்போ பிராண்டின் முதல் ஸ்மார்ட் டி.வி. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட் டி.வி. பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இது 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போவின் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், மோட்டோரோலா மற்றும் நோக்கியா டி.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சியோமி தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் டி.வி. சந்தையில் புதிதாக களமிறங்கி இருக்கின்றன.
புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் செட் டாப் பாக்ஸ் இணைப்பு மட்டுமின்றி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி இணையத்தில் பிரவுஸ் செய்யலாம். மேலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் பல்வேறு இதர சேவைகளை இயக்க முடியும். மேலும் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், இவற்றை குரல் வழியே இயக்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் அளவில் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு நோட்புக் மாடல்களை மினி எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளேவுடன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில எல்.சி.டி. மாணிட்டர்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி பேக்லிட் டிஸ்ப்ளே வழங்கும் என கூறப்படுகிறது. எனினும், இவை ஐமேக் / ஐமேக் ப்ரோ அல்லது ஸ்டான்ட் அலோன் டிஸ்ப்ளே என எந்த சாதனத்தில் வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் ஆறு சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இவை 2021 ஆண்டு இறுதியில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, 10.2 இன்ச் ஐபேட், 7.9 இன்ச் ஐபேட் மினி, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, 14 இன்ச் மேக்புக் ப்ரோ, 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் என அவர் தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 3டி சென்சிங் வசதி கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு கால்கட்டத்தில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. புதிய ஆப்பிள் சாதனங்களில் 3டி சென்சிங் வசதி பின்புற கேமரா மூலம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் டைம் ஆஃப் ஃபிளைட் சிஸ்டம் பயன்படுத்தி 3டி மேப்பினை உகுவாக்கும் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய மேக்புக் மாடலில் ஆப்பிள் நிறுவனம் செராமிக் மூலம் உருவாக்கப்பட்ட 5ஜி ஆன்டெனா போர்டினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் முதல் ஃபிட்னஸ் பேண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி பேண்ட் 0.96 இன்ச் ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், 9 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் வசதியும் பில்ட் இன் சார்ஜிங் போர்ட் வசதியும் கொண்டிருக்கிறது. இதில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி பேண்ட் சிறப்பம்சங்கள்:
- 0.96 இன்ச் 160x80 பிக்சல் எல்.சி.டி. கலர் டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 4.2 LE
- ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதன் பின் வெளியான தளங்களுடன் ரியல்மி லின்க் ஆப் மூலம் இயங்கும்
- 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர்
- 9 ஃபிட்னஸ் மோட்கள், செடன்ட்டரி ரிமைன்டர்
- பிபிஜி இதய துடிப்பு சென்சார்
- அழைப்பு மற்றும் குறுந்தகவல் நோட்டிஃபிகேஷன்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 90 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- பில்ட் இன் யு.எஸ்.பி. கனெக்டர்
ரியல்மி பேண்ட் பிளாக், கிரீன் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி பேண்ட் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 9-ம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.
ஜாப்ரா நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய வாட்டர் ப்ரூஃப் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
ஜாப்ரா நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி என அழைக்கப்படுகிறது. IP57 தரச்சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இரண்டு வருட வாரண்டியுடன் வருகிறது.
புதிய இயர்போன்கள் 22 சதவீதம் சிறியதாக இருக்கிறது. இது காதுகளில் கச்சிதமாக பொருந்துகிறது. இது முந்தைய மாடலான ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65டி மாடலை விட கூடுதலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது இது 28 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இயர்பட்ஸ்-ஐ ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், தொடர்ச்சியாக 7.5 மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இன் இயர் வடிவமைப்பு கொண்டிருப்பதால், இதில் பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதி இருக்கிறது. மேலும் வெளிப்புற சத்தத்தை பயனர் விரும்பும் போது கேட்டுக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜாப்ரா நிறுவனம் மைகண்ட்ரோல்ஸ் எனும் மென்பொருள் அப்டேட் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை கொண்டு இயர்பட்ஸ் வலது மற்றும் இடதுபுற கண்ட்ரோல்களை பயனர் விரும்பும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி சிறப்பம்சங்கள்
- காம்பேக்ட் இயர்பட்ஸ் - காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வடிவமைப்பு
- ஜாப்ரா மைசவுண்ட் (இரண்டாவது காலாண்டில் அப்டேட் வழங்கப்படுகிறது)
- ஜாப்ரா மைகண்ட்ரோல்ஸ் (இரண்டாவது காலாண்டில் அப்டேட் வழங்கப்படுகிறது)
- தொடர்ச்சியாக 7.5 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது
- சார்ஜிங் கேஸ் உள்பட 28 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்
- நான்கு மைக்ரோபோன் தொழில்நுட்பம்
- யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங்
- ரிலையபிள் ட்ரூ வயர்லெஸ் கனெக்டிவிட்டி
- IP57 தரச்சான்று பெற்ற டியூரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
புதிய ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இயர்பட்ஸ் டைட்டானியம் பிளாக், கிரே, சியெனா மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 11-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களை பயன்படுத்துவோருக்கு டார்க் மோட் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் அம்சம் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சத்திற்கான சோதனை துவங்கப்பட்டது. மேலும் ஐ.ஒ.எஸ். தளத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது.
அந்த வரிசையில் வாட்ஸ்அப் டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் லைட் மற்றும் டார்க் தீம்களில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம். டார்க் தீம் முழுமையான கருப்பு நிறத்திற்கு மாற்றாக சற்றே சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது.
சாட் பாக்ஸ் இருள் சூழ்ந்த பேக்கிரவுண்டு கொண்டிருக்கும் நிலையில், குறுந்தகவல்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. டார்க் மோட் அம்சத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்தியதாக வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

ரீடபிலிட்டி: ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் சிஸ்டம் டீஃபால்ட்களுக்கு நிகராகவும் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாத நிறங்களையும் டார்க் மோடில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தகவல்களுக்கு முன்னுரிமை: பயனர்கள் ஒவ்வொரு திரையிலும் சீரான கவனம் செலுத்த உதவ வேண்டும். இதற்கு நிறம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டு மிகமுக்கிய தகவல்கள் தனியே தெரியும்படி உருவாக்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் புதிய டார்க் மோட் அம்சத்தினை சிஸ்டம் செட்டிங்களில் செயல்படுத்திக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கும் முந்தைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் வாட்ஸ்அப் செட்டிங் -- சாட்ஸ் -- தீம் -- டார்க் போன்ற ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இருமடங்கு டேட்டா வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன.
மேலும் இவற்றில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டன. தற்சமயம் கூடுதலாக 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடிகளை செலுத்துவதில் வோடபோன் ஐடியா கடும் நெருக்கடி சூழலை சந்தித்து வரும் நிலையில், வோடபோன் ஐடியா புதிய சலுகையை அறிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா வலைதளங்களில் உள்ள விவரங்களின் படி, கூடுதல் டேட்டா தினமும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ. 399 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, 56 நாட்களுக்கும், ரூ. 599 சலுகையில் 3 ஜி.பி. டேட்டா 84 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.
இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
புதிய இருமடங்கு டேட்டா குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் சரியான வேலிடிட்டி பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் என்கோ ஃபிரீ புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போனில் 13.4 எம்.எம். டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தில் சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது.
இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. டூயல் மேக்னெடிக் சர்கியூட் டிசைன் மற்றும் அல்ட்ரா டைனமிக் ஸ்பீக்கர்கள் கொண்ட உலகின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இது என ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டூயல் மைக்ரோபோன்கள் கொண்ட புதிய ஒப்போ இயர்போன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய்ஸ் ரிடக்ஷன் வழங்குகிறது. இத்துடன் வால்யூம் மற்றும் பாடல்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வழங்கப்பட்டுள்ள இயர்டிப்களில் பயனருக்கு கச்சிதமாக பொருந்தும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டிருக்கும் ஒப்போ என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது 25 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.

ஒப்போ என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் சிறப்பம்சங்கள்:
- ப்ளூடூத் 5.0
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணைந்து இயங்கும்
- 13.4 எம்.எம். டிரைவர்
- வால்யூம், கால் கண்ட்ரோல் மற்றும் பாடல்களை மாற்ற டச் கண்ட்ரோல் வசதி
- டூயல் மைக்ரோபோன்
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 120ms லோ-லேடென்சி
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
- 31 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- யு.எஸ்.பி. டைப்-சி
ஒப்போ என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் தனது மீடியாபேட் எம்5 லைட் மாடலின் புதிய வெர்ஷனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் தனது மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் சாதனத்தினை அந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த டேப்லெட்டின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலினை ஸ்பேஸ் கிரே நிறத்தில் ஹூவாய் வெளியிட்டுள்ளது.
இதில் ஹார்மன் கார்டன் பிராண்டின் குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது டேப்லெட்டின் ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள எம் பென் லைட் ஸ்டைலஸ் 2,048 லேயர்களில் பிரெஷர் சென்சிடிவிட்டி கொண்டுள்ளது. ஹூவாய் மீடியாபேட் எம்5 லைட் மாடலில் கண்களுக்கு வசதியான பிரைட்னஸ் வழங்க ஐந்து வித மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் இன்டெலிஜண்ட் லைட் அட்ஜஸ்ட்மென்ட், புளூ ரே ஃபில்ட்டர் மற்றும் யுசேஜ் டைம் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.
ஹூவாயின் ஹிஸ்டன் 5.0 ஆடியோ தொழில்நுட்பம் வெளிப்புற சத்தத்தின் அளவினை குறைத்து, சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த டேப்லெட்டினை சக்தியூட்ட 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஹூவாயின் குவிக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மீடியாபேட் எம்5 லைட் சிறப்பம்சங்கள்:
- 10.1 இன்ச் 1920x1200 ஃபுல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஹைசிலிகான் கிரின் 659 பிராசஸர்
- ARM மாலி-T830 MP2 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) மற்றும் EMUI 8.0
- 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, f/2.0
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹார்மன் கார்டன் குவாட் ஸ்பீக்கர்கள்
- ஹூவாய் ஹிஸ்டன் சவுண்ட் எஃபெக்ட்
- கைரேகை சென்சார்
- 4ஜி எல்.டி.இ., வைபை 802.11 ac (2.4/5 ஜிகாஹெர்ட்ஸ்), ப்ளூடூத் 4.2 LE, GPS
- யு.எஸ்.பி. டைப்-சி
- 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹூவாய் மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் ஸ்பேஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் மார்ச் 6-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த அச்சம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஃபேஸ்புக் எஃப்8 நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் மே 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற திட்டமிட்டு இருந்தது.
அடுத்த மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் நிகழ்வினை அந்நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்தது. எனினும், மே மாத வாக்கில் சியாட்டில் நகரில் தனது டெவலப்பர் நிகழ்வில் நடத்த தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.

எஃப்8 நிகழ்வுக்கு மாற்றாக உள்ளூர் நிகழ்வுகள், வீடியோக்கள் மற்றும் நேரலையில் தகவல் பரிமாற்றங்களை நடத்த ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனத்தின் பிளாட்ஃபார்ம் கூட்டணிகளுக்கான நிர்வாக இயக்குனர் கான்ஸ்டான்டினோஸ் பாபமில்டியாடிஸ் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அலுவல் ரீதியிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அந்நிறுவன அதிகாரிகளுக்கு ஃபேஸ்புக் அறிவுறுத்தி இருப்பதாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக ஃபேஸ்புக் மட்டுமின்றி பல்வேறு இதர நிறுவனங்களும் தங்களது நிகழ்வுகளை ரத்து செய்வதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றன. முன்னதாக பார்சிலோனாவில் நடைபெற இருந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது வலைதளத்தில் கொரோனா வைரஸ் சார்ந்த விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்வது மற்றும் வராமல் தடுக்கக் கோரும் தகவல்கள் அடங்கய விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக ஃபேஸ்புக் இன்க் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் இதுவரை சுமார் 2700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஃபேஸ்புக் தளத்தில் பரவும் போலி தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்கக்கோரி அந்நிறுவனம் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் விழிப்புணர்வோடு செயல்பட வலியுறுத்தும் எச்சரிக்கை தகவல்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் வெளியிட்டு வருகிறது.
கடந்த மாதம் கொரோனா வைரஸ் பற்றிய போலி தகவல்களை நீக்குவதாக அறிவித்தது. இதேபோன்று டிக்டாக் மற்றும் பின்டிரெஸ்ட் போன்ற தளங்களும் போலி தகவல்களை நீக்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டன.






