search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jabra"

    ஜாப்ரா நிறுவனத்தின் எலைட் 45இ வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    ஜாப்ரா நிறுவனம் இந்தியாவில் சாஃப்ட் நெக்பேன்ட் ஹெட்செட் அறிமுகம் செய்துள்ளது. ஜாப்ரா எலைட் 45இ என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்செட் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகளான அமேசான் அலெக்சா, சிரி மற்றும் கூகுள் நௌ உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்கிறது.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் ஜாப்ரா எலைட் 45இ மியூசிக்-ஐ கஸ்டமைஸ் செய்யக்கூடிய EQ செட்டிங்ஸ் மூலம் இயக்க வழி செய்கிறது. இத்துடன் IP54 சான்று பெற்ற வடிவமைப்பு, இரண்டு ஆண்டுகள் தண்ணீர் மற்றும் தூசு மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கான வாரன்டி வழங்கப்படுகிறது.

    ஜாப்ரா எலைட் 45இ ஹெட்செட் மூலம் அழைப்புகளின் போது மிக துல்லியமான ஆடியோவை பயனர்கள் அனுபவிக்க முடியும். இந்த ஹெட்செட்-இல் வழங்கப்பட்டுள்ள ஜாப்ரா தொழில்நுட்பம் வெளிப்புற சத்தங்களை குறைத்து சீரான ஒலியை வழங்குகிறது. ஜாப்ரா சவுன்ட் பிளஸ் ஆப் ஈக்வலைசர் ப்ரோஃபைல்கள் மற்றும் செட்டிங்களை பயனர் விருப்பப்படி மாற்றியமைக்க வழி செய்கிறது.



    முன்னணி நிறுவனங்களின் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யும் ஜாப்ரா எலைட் 45இ வாய்ஸ் கமான்டு மூலம் வானிலை விவரங்கள், அருகாமையில் நடைபெறும் நிகழ்வுகள், உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை படிக்கச் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள பயன்படுத்த முடியும்.

    டைட்டானியம் பிளாக், காப்பர் பிளாக் மற்றும் கோல்டு பெய்க் என மூன்று நிறங்களில் கிடைக்கும் ஜாப்ரா எலைட் 45இ இந்தியாவில் ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் ஜாப்ரா எலைட் 45இ ஹெட்செட்-ஐ அமேசான் வலைத்தளத்தில் வாங்கிட முடியும்.
    ×