என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட் டி.வி.
    X
    ஸ்மார்ட் டி.வி.

    ஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிறங்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் பிராண்டு

    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிங்கியிருக்கும் நிலையில், மற்றொரு சீன நிறுவனமும் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    ஒப்போ நிறுவனம் சமீபத்தில் ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் இந்தியாவில் ஒப்போ என்கோ ஃபிரீ டி.டபுள்யூ.எஸ். இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.

    அந்த வரிசையில், ஒப்போ பிராண்டின் முதல் ஸ்மார்ட் டி.வி. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட் டி.வி. பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இது 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒப்போ

    ஒப்போவின் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், மோட்டோரோலா மற்றும் நோக்கியா டி.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சியோமி தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் டி.வி. சந்தையில் புதிதாக களமிறங்கி இருக்கின்றன.

    புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் செட் டாப் பாக்ஸ் இணைப்பு மட்டுமின்றி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி இணையத்தில் பிரவுஸ் செய்யலாம். மேலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் பல்வேறு இதர சேவைகளை இயக்க முடியும். மேலும் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், இவற்றை குரல் வழியே இயக்க முடியும்.
    Next Story
    ×