என் மலர்
தொழில்நுட்பம்

பி.எஸ்.என்.எல்.
ரூ. 247 விலையில் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான நிலையில், இவை முதற்கட்டமாக ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பி.எஸ்.என்.எல். ரூ. 247 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (தினமும் 250 நிமிடங்கள்), 3 ஜி.பி.டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ரூ. 247 சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 998 சலுகை வேலிடிட்டியினை 240 நாட்களில் இருந்து 270 நாட்களாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய வேலிடிட்டி விளம்பர நோக்கில் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. ரூ. 998 பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு மாதங்களுக்கு இரோஸ் நௌ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில், தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
எனினும் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதன் வேலிடிட்டி 425 நாட்கள் ஆகும். இந்த சலுகையினை பயனர்கள் மார்ச் 31 வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Next Story






