search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐஒஎஸ்
    X
    ஐஒஎஸ்

    புதிய மெமோஜி ஸ்டிக்கர் மற்றும் அம்சங்களுடன் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 வெர்ஷன் வெளியீடு

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 இயங்குதளங்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.



    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஒஎஸ் 13 இயங்குதளத்தினை அறிமுகம் செய்தது. பின் 2019 டிசம்பர் வாக்கில் ஐஒஎஸ் 13.3 பதிப்பினை வெளியிட்டது.

    அந்த வரிசையில் தற்சமயம் ஐஒஎஸ் 13.4 மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 இயங்குதளங்களை ஆப்பிள் வெளியிட்டு வருகிறது. புதிய வெர்ஷன்களில் ஒன்பது புதிய மெமோஜி மற்றும் அனிமோஜி ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெயில் செயலியில் புதிய டூல்பார் வழங்கப்பட்டுள்ளது.

    ஐஒஎஸ் 13

    ஐபேட் ஒஎஸ் 13.4 பதிப்பில் டிராக்பேட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட நேவிகேஷன் மற்றும் தலைசிறந்த பிரெசிஷன் கொண்டருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் புதிய மேஜிக் கீபோர்டினை வெளியிட இருக்கிறது. இது 2018 மற்றும் 2020 ஐபேட் ப்ரோ மாடல்களில் சீராக இயங்கும்.

    மேலும் இதில் மேஜிக் மவுஸ், மேஜிக் மவுஸ் 2, மேஜிக் டிராக்பேட், மேஜிக் டிராக்பேட் 2 மற்றும் மூன்றாம் தரப்பு யு.எஸ்.பி. மற்றும் ப்ளூடூத் மவுஸ் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. 

    இவைதவிர டிவி ஒஎஸ் 13.4 மற்றும் ஹோம்பாட் ஒஎஸ் 13.4 இயங்குதளங்களையும் ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ச் ஒஎஸ் 6.2 பதிப்பில் இன் ஆப் பர்ச்சேஸ், மியூசிக் பிளேபேக், வைபை டூ ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.
    Next Story
    ×