search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ
    X
    ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ

    1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

    ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ ஸ்மார்ட்வலாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.39 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் ஏ1 அணியக்கூடிய சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்முறையாக ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ மாடலில் ஹூவாய் நிறுவனம் பிளட் ஆக்சிஜன் சாட்யூரேஷன் மானிட்டரிங் அம்சத்தினை வழங்கி இருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், பிரெஷர் லெவல் மானிட்டரிங் மற்றும் உறக்கத்தை கண்காணிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ மாடலில் 15 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது 190 வகையான தகவல்களை இயக்கி பயனர்களுக்கு சரியான விவரங்களை வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆறு உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ சிறப்பம்சங்கள்:

    - 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
    - ஹூவாய் கிரின் ஏ1 சிப்
    - ப்ளூடூத் 5.1 வசதி
    - ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9.0 இயங்குதளங்களுடன் இயங்கும் வசதி
    - ஹூவாய் லைட் ஒஎஸ்
    - 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ஜிபிஎஸ் வசதி
    - 4 ஜி.பி. மெமரி
    - ப்ளூடூத் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
    - 15 உடற்பயிற்சி மோட்கள்
    - பல்வேறு சென்சார்கள்
    - இதய துடிப்பு, உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
    - அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ கிராஃபைட் பிளாக், லாவா ரெட், மின்ட் கிரீன் மற்றும் ஐசி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இகன் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,720) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஹூவாய் வாட்ச் ஜி.டி. 2இ 42 எம்.எம். ஃபிராஸ்டி வைட் மற்றும் செஸ்ட்நட் ரெட் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை முறையே 229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18,860) மற்றும் 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 20,500) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×