search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    உபெர்
    X
    உபெர்

    மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் மற்றும் ப்ளிப்கார்ட் கூட்டணி

    நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் மற்றும் ப்ளிப்கார்ட் கூட்டணி அமைத்துள்ளன.



    உபெர் நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. முன்னதாக உபெர் நிறுவனம் பிக் பாஸ்கெட் உடன் இணைந்து மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. 

    இந்த சேவைக்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என எபெர் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுக்க ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என உபெர் தெரிவித்து இருக்கிறது. 

    ப்ளிப்கார்ட்

    முந்தைய பிக் பாஸ்கெட் டெலிவரிக்களை போன்றே புதிய கூட்டணியிலும் உபெர் நிறுவனம் அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் என தெரிவித்துள்ளது. சேவையில் பங்கேற்கும் அனைத்து ஓட்டுனர்களும் அதிக பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுவர்  என உபெர் தெரிவித்துள்ளது. 

    முதறகட்டமாக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருக்கும் சேவை டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் அமலாகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் ஆகும்.
    Next Story
    ×