என் மலர்
கணினி
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இருமடங்கு டேட்டா சலுகை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது இருமடங்கு டேட்டா சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களில் உள்ள வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 விலை சலுகைகளில் தற்சமயம் கூடுதல் டேட்டா பெற முடியும். ரூ. 399 மற்றும் ரூ. 599 பிரீபெயிட் சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
மேம்பட்ட புதிய அறிவிப்பின் படி வோடபோன் இந்தியா வலைதளத்தில் ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று ஐடியா வலைதளத்திலும் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக இருமடங்கு சலுகை டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் என ஒன்பது வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டது.
பலன்களை பொருத்தவரை ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி மாறுபடுகிறது. ரூ. 299 சலுகையில் 28 நாட்களும், ரூ. 449 சலுகையில் 56 நாட்களும், ரூ. 699 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
மூன்று சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா வழங்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஃபோர்சா ஸ்டிரீட் எனும் இலவச ரேமிங் கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பாரப்போம்.
ஃபோர்சா ஸ்டிரீட் எனும் ரேசிங் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ரேசிங் கேம் ஒவ்வொரு போட்டியில் வென்று புதிய கார்களை வாங்குவது மற்றும் கார் பாகங்களை அப்கிரேடு செய்து கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கேம் ஸ்டிரீட் ரேசிங் சார்ந்தது ஆகும். இதில் அதிக மர்மங்கள் இருப்பதால், விளையாடும் போது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் சிறப்பு நிகழ்வுகள், மற்றும் தீம்டு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தழுவியும் இந்த கேம் நகர்வது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுடன் விளையாடும் போது அதிக கார்களை சேகரிக்க ஒவ்வொரு வாரமும் மற்ற பயனர்களுடன் நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர் கேமிங் குழுவினரின் பட்டியலில் முன்னேற முடியும்.
கேம் வெளியீட்டை கொண்டாடும் வகையில், போர்சா ஸ்டிரீட் கேமினை ஜூன் 5 ஆம் தேதி வரை விளையாடுவோருக்கு 2017 ஃபோர்டு ஜிடி வழங்கப்படும். இதோடு கேம் கிரெடிட்கள் மற்றும் புதிய கார்களை அன்லாக் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் க்ரூப் கால் சேவையில் ஒரே சமயத்தில் 250 பேருடன் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையின் க்ரூப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த சேவையில் அதிகபட்சம் 100 பேருடன் உரையாட முடியும். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகப்படுத்தப்பட இருக்கிறது.
இதன் மூலம் கூகுள் மீட் மற்றும் ஜூம் உள்ளிட்ட சேவைகளுடனான போட்டியை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடிவு செய்துள்ளது. இரு சேவைகளிலும் தற்சமயம் ஒரே சமயத்தில் 100 பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது.

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை உலகம் முழுக்க சுமார் 7.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைக்கான ரோட்மேப் பகுதியில் அந்நிறுவனம் க்ரூப் கால் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இருப்பதை தெரிவித்து இருக்கிறது. சந்தா செலுத்தி டீம்ஸ் சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் விரைவில் இந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
டீம்ஸ் சேவையை இலவசமாக பயன்படுத்துவோர் தற்சமயம் அதிகபட்சமாக 20 பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப் கால் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி மீட்டிங்களை ஷெட்யூல் செய்வது, மீட்டிங் ரெக்கார்டிங், போன் கால், ஆடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட வசதிகள் சந்தா செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் அமேசான் பிரைம் வீடியோ செயலிக்கான வசதியை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோஃபைபர் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதில் அதிகளவு ஒடிடி செயலிகளுக்கான வசதி வழங்கப்படவில்லை.
மேலும் பிரபல ஒடிடி செயலிகளான அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கான வசதி வழங்கப்படாமல் இருந்தது. இதில் தற்சமயம் அமேசான் பிரைம் வீடியோவுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் இதில் நெட்ஃப்ளிக்ஸ் வசதி வழங்கப்படவில்லை.

ஜியோஃபைபர் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் பயன்படுத்துவோர், செயலிகளுக்கான பட்டியலில் அமேசான் பிரைம் வீடியோ ஐகானை பார்க்க முடியும். பின் இதனை அவரவர் அமேசான் பிரைம் சந்தா கொண்டு செயலியை தொடர்ந்து பயன்படுத்த துவங்க முடியும்.
தற்சமயம் ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் ஜீ5, ஆல்ட் பாலாஜி, சோனிலிவ், வூட், ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஒடிடி செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜியோமீட் அறிவிக்கப்பட்டது. இந்த செயலி அந்நிறுவனத்தின் 2019-2020 நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் போது வெளியானது. புதிய செயலி ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற செயலிகளின் பட்டியலில் புதுவரவாக இணைய இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ லேப்டாப் மேம்படுத்தப்பட இருக்கிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய 2020 மேக்புக் ப்ரோ மாடலில் 32 ஜிபி ரேம், 4000 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

2020 மேக்புக் ப்ரோ மாடலில் 13 இன்ச் அளவில் உருவாகி இருக்கும் என்றும் இதில் அதிகபட்சமாக 4000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், 32 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விலை குறைந்த மாடலில் ஐ5 பிராசஸர் வழங்கப்படலாம்.
முன்னதாக வெளியான தகவல்களில் 2020 மேக்புக் ப்ரோ மாடலில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், 32 ஜிபி ரேம், 2000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
2019 மேக்புக் ப்ரோ வேரியண்ட் 13 இன்ச் மாடல்களில் 8 ஜிபி ரேம், 16 இன்ச் மாடல்களில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 512 ஜிபி மெமரி, 16 இன்ச் மாடலில் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் செயலி ஜியோமீட் எனும் பெயரில் உருவாகி இருக்கிறது.
வீடியோ கான்பரன்சிங் செயலிகளின் பயன்பாடு சமீப காலங்களில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. உலகில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் இருந்தே பணியாற்றி வருவதால் இதுபோன்ற செயலிகள் சுமார் 6.2 கோடி டவுன்லோட்களை கடந்து இருக்கின்றன.
ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் பல்வேறு வீடியோ கான்பரன்சிங் செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் புதுவரவு செயலயாக ஜியோமீட் விரைவில் இணைய இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய வீடியோ கான்பரன்சிங் செயலிக்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் 2019-2020 நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் போது வெளியானது.

ஜியோமீட் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (ஒடிபி), மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது வீடியோ கான்பரன்சிங்கில் கெஸ்ட் ஆக இணைந்து கொள்ள முடியும். மேலும் ஒடிபி கொண்டு லாக்-இன் செய்வோரும் ஷேர் லிண்க் மூலம் மற்ற பயனர்களை கான்பரன்சில் இணைக்க அழைப்பு விடுக்க முடியும்.
இலவசமாக கிடைக்கும் ஜியோமீட் செயலியில் அதிகபட்சம் ஐந்து பேருடன் உரையாட முடியும். பிஸ்னஸ் பிளான் சந்தாவில் இருப்பவர்கள் அதிகபட்சமாக 100 பேருடன் வீடியோ கால் பேச முடியும். ஜியோமீட் செயலி குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் நெட்வொர்க் வேகத்திற்கு ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.
அழைப்பை ஒருங்கிணைப்பவர் அதில் கலந்து கொள்வோரின் ஆடியோ மற்றும் வீடியோ ஃபீட்களை இயக்க முடியும். மேலும் ஆடியோ / வீடியோ மோடில் இருந்தபடியே அழைப்புகளையும் பேச முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நான்கு நாட்களுக்கு தினமும் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், பலர் வீட்டில் இருந்தபடியே அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவினை கடந்த மாதம் இலவசமாக வழங்கியது. இதே போன்று ஜியோ தற்சமயம் 2 ஜிபி ட்ட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கும் இலவச 2 ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு பொருந்தும். இவை ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் பயனர்களின் கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகிறது. ஜியோ இலவச டேட்டா சலுகையை பெற மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இலவச டேட்டா வழங்கப்படும் தேதி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வேறுபடும்.
இலவச டேட்டா பயனரின் பழைய டேட்டா பேக் சலுகையின் மேல் வழங்கப்படுகிறது. அதாவது பயனர் ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை தேர்வு செய்திருந்தால், அவருக்கு மொத்தம் 3.5 ஜிபி டேட்டா நாள் ஒன்றுக்கு வழங்கப்படும்.
ஜியோ தவிர வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கி வருகிறது.
நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 150 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
அணியக்கூடிய சாதனங்களுக்கு பெயர்பெற்ற நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் ப்ளூடூத் 5, குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏஏசி வசதி வழங்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளத்துடன் இணைந்து இயங்கும் புதிய நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்7 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேஸ் உடன் வரும் புதிய இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.
இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் 2200 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதை கொண்டு இயர்பட்ஸ்-ஐ 18 முறை சார்ஜ் செய்து கொள்ளலாம். இது 150 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் வழங்குகிறது. மேலும் இந்த கேஸ் மற்ற சாதனங்களுக்கும் ரிவர்ஸ் சார்ஜ் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும்
- 6எம்எம் கிராஃபீன் ஸ்பீக்கர் டிரைவர்கள், குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏஏசி
- இயர்பட்சில் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
- 8 மணி நேர பிளேபேக்
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்
நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ சார்கோல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் இதன் விற்பனை துவங்கும்.
வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு பலமடங்கு சரிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் சூழ்நிலையில், மக்களிடம் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருப்பதால், சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் மற்றும் செய்திகள் பரவுவது பலமடங்கு அதிகரித்தது.
இதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில், ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி ஒருவர் ஒரே சமயத்தில் ஒருவருக்கு மட்டுமே குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்ய முடியும். இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு 70 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

போலி செய்திகள் பரவுவதை தடுக்க கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடு நல்ல பலன் அளித்திருக்கிறது. இந்த மாற்றம் மூலம் வாட்ஸ்அப் செயலியை தனிப்பட்ட உரையாடல்களுக்கானதாக இருக்க உதவுகிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
ஃபார்வேர்டு மெசேஜ்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதால், போலி செய்திகள் பரவுவது அடியோடு நின்றுவிட்டதாக கருத முடியாது என்றாலும், இது சரியான பாதைக்கான முதல் அடி என கூற முடியும்.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்யும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏற்கனவே ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் ரீசார்ஜ்களில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சலுகையை போன்றே புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இருமடங்கு டேட்டா சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகை அனைத்து வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது.
வோடபோன் இந்தியா வலைதளத்தின் படி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகை ரூ. 399 மற்றும் ரூ. 599 ரீசார்ஜ்களிலும் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஐடியா செல்லுலார் வலைதளத்திலும் இதே சலுகைகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
முன்னதாக மார்ச் மாத துவக்கத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்தது. அப்போது இந்த சலுகை 22 வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டது. எனினும், இவை கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டன. இத்துடன் இந்த சலுகை ஒன்பது வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படும் என கூறப்பட்டது.

பலன்களை பொருத்தவரை ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 299 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 449 சலுகையிலும் 4 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
தற்சமயம் இந்த இருமடங்கு சலுகை டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 401 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பழைய சலுகைகளை மாற்றியமைத்து புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் ரூ. 401 விலையில் புதிய சலுகையை ஏர்டெல் அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் ரூ. 401 சலுகையில் டேட்டாவுடன், டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.

இந்த சலுகைக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். புதிய ஏர்டெல் சலுகை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளம், ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஆஃப்லைன் ரீசார்ஜ் மையங்களில் கிடைக்கிறது.
டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவில் டிஸ்னி பிளஸ் தரவுகளை பல்வேறு பிராந்திய மொழிகளில் கண்டுகளிக்க முடியும். இதில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், வரம்பற்ற நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் வழங்கப்படுகின்றன.
ஃபேஸ்புக் நிறுவனம் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக மெசஞ்சர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் கிட்ஸ் செயலி தற்சமயம் உலகின் 70-க்கும் அதிகமான நாடுகளில் வெளியிடப்படுகிறது. மெசஞ்சர் கிட்ஸ் செயலியில் முன்பை விட அதிக வசதிகள் மற்றும் பெற்றோர் கட்டுப்படுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் செயலியில் புதிய நண்பர்களை சேர்ப்பது, குழுக்களில் இணைவது மற்றும் ப்ரோஃபைலை யார்யார் பார்க்க முடியும் உள்ளிட்டவற்றை பெற்றோர்களே தீர்மானிக்க முடியும். முந்தைய பதிப்புகளில் சிறுவர்களுக்கு வரும் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் மற்றும் அவற்றை ஏற்பது உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
புதிய செயலியில் சூப்பர்வைஸ்டு ஃப்ரெண்டிங் எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு சிறுவர்களின் ஃப்ரெண்ட் லிஸ்ட் அதாவது நண்பர்கள் பட்டியலில் பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை செய்யலாம். சிறுவர்களுக்கு ரிக்வஸ் வரும் போது பெற்றோருக்கும் அதற்கான நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படுகிறது.

இத்துடன் மெசஞ்சர் கிட்ஸ் செயலியில் சிறுவர்களின் ப்ரோஃபைலை நண்பர் பரிந்துரைக்காக யார் யார் பார்க்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க முடியும். பெற்றோர்கள் சிறுவர்களின் பெயர் மற்றும் ப்ரோஃபைல் புகைப்படம் சிறுவரின் நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோரின் ஃபேஸ்புக் நண்பர்கள் என யார் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும்.
அமெரிக்காவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மெசஞ்சர் கிட்ஸ் செயலியில் புதிய அம்சத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டு சர்வதேச சந்தையில் வரும் வாரங்களில் இந்த செயலி வெளியிடப்படுகிறது. மெசஞ்சர் கிட்ஸ் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.






