search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வோடபோன் ஐடியா
    X
    வோடபோன் ஐடியா

    பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் ரீசார்ஜ்களில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.



    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முந்தைய சலுகையை போன்றே புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இருமடங்கு டேட்டா சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகை அனைத்து வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. 

    வோடபோன் இந்தியா வலைதளத்தின் படி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகை ரூ. 399 மற்றும் ரூ. 599 ரீசார்ஜ்களிலும் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஐடியா செல்லுலார் வலைதளத்திலும் இதே சலுகைகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

    முன்னதாக மார்ச் மாத துவக்கத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்தது. அப்போது இந்த சலுகை 22 வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டது.  எனினும், இவை கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டன. இத்துடன் இந்த சலுகை ஒன்பது வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    வோடபோன் ஐடியா

    பலன்களை பொருத்தவரை ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 299 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ரூ. 449 சலுகையிலும் 4 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    தற்சமயம் இந்த இருமடங்கு சலுகை டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×