என் மலர்
கணினி
சியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் துணை தலைவர் மனு குமார் ஜெயின் ரெட்மி பிராண்டின் புதிய சாதனம் பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதன்படி புதிய ரெட்மி சாதனம் இந்தியாவில் மே 26 ஆம் தேதி ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ டீசரில் புதிய சாதனம் என்ன என்ற விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இது ட்ரூ வயர்லெஸ் இயர்போனாக இருக்கும் என்றே தெரிகிறது. அந்த வகையில் சியோமி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் இயர்போனின் இந்திய பதிப்பை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாதனத்திற்கென சியோமி பிரத்யேக வலைபக்கத்தை திறந்துள்ளது. அதன்படி புதிய சாதனம் வயர்லெஸ் ஆடியோ, நீண்ட பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. பிரத்யேக வலைபக்க விவரங்களின் படி புதிய சாதனம் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் மாடலின் இந்திய பதிப்பாக இருக்கும் என்பதையே உணர்த்துகிறது.
சீன சந்தையில் ஏப்ரல் மாதம் அறிமுகமான ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போனின் விலை CNY 100 இந்திய மதிப்பில் ரூ. 1,100 என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய வயர்லெஸ் இயர்போன் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இது நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
2020 மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 5237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், நிறுவனம் பெறும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் நிலவும் இந்த காலகட்டத்தில், தொலைதொடர்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவற்றின் மீதான அதிகப்படியான வரிகள், கட்டணங்கள் சுமையை ஏற்படுத்துவதாகவும், அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூவாமி நிறுவனம் உருவாக்கி வரும் புதுவித மாஸ்க்கை கொண்டு கொரோனாவை கொன்றுகுவிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமேஸ்பிட் பிராண்டிங் சாதனங்களை உருவாக்கி வரும் ஹூவாமி நிறுவனம் தற்சமயம் புதுவித முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஏரி எனும் பெயரில் உருவாகும் புதுவித முகக்கவசங்களில் புற ஊதா விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மின்சக்தி மூலம் இணைத்தால், கிருமிகளை நிமிடங்களில் கொன்றுகுவிக்க முடியும்.
கழற்றக்கூடிய ஃபில்ட்டர்களை பயன்படுத்தும் இந்த முகக்கவசங்கள் என்95 தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. இதுசார்ந்த பணிகள் முழுமையாக வெற்றிபெறும் பட்சத்தில் இவை தற்போதைய என்95 தர முகக்கவசங்களை விட நீண்ட நாள் உழைக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்ட உபகரணங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஏரி எனும் பெயரில் உருவாகி வரும் புதுவித முகக்கவசம் அதிநவீன வடிவமைப்பு கொண்டிருப்பதோடு கழற்றக்கூடிய ஃபில்ட்டர்களை கொண்டிருக்கின்றன. இது புற ஊதா மின்விளக்குகள் அடங்கிய பிளாஸ்டிக் முகக்கவசம் ஆகும்.
யுஎஸ்பி போர்ட் மூலம் கனெக்ட் ஆகும் போது, புற ஊதா மின்விளக்குகள் கிருமிகளை பத்தே நிமிடங்களில் அழித்துவிடும். இவ்வாறு செய்யும் போது முகக்கவசத்தின் உள்புறம் முழுமையாக சுத்தமாகி விடும். இதன் வெளிப்புறங்களில் மட்டும் பயனர்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஹூவாமி நிறுவனம் புதிய முகக்கவசத்தை சீன அரசாங்கத்தின் மூத்த மருத்துவ ஆலோசகருடன் சேர்ந்து உருவாக்கி வருகிறது. தற்போதைய விவரங்களின் படி புதுவித முகக்கவசத்தின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
எனினும், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு பதில் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் வயர்லெஸ் இன் இயர் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் கொண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் மாடலுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ஒன்பிளஸ் திட்டமிட்டு வருகிறது.

ஜூலை மாதம் நடைபெற இருக்கும் விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் இசட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் வகையில், புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 98 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்குகிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு 12 ஜிபி அதிவேக டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற சலுகைகளை போன்று இதில் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை.
இதுதவிர ரூ. 500, ரூ. 1000 மற்றும் ரூ. 5000 விலை ரீசார்ஜ் வவுச்சர்களில் ஏர்டெல் கூடுதல் டாக்டைம் வழங்குகிறது. முன்னதாக ரூ. 500 சலுகையில் ரூ. 423.73 டாக்டைம் வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ. 480 டாக்டைம் வழங்கப்படுகிறது.

இதேபோன்று ரூ. 1000 சலுகையில் முந்தைய ரூ. 847.46 டாக்டைமிற்கு பதில் ரூ. 960 டாக்டைம் வழங்கப்படுகிறது. ரூ. 5000 சலுகையில் ரூ. 4237 டாக்டைம் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ. 4800 டாக்டைம் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 98 சலுகையில் இருமடங்கு டேட்டா ஜியோவின் ரூ. 101 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 101 விலை சலுகையில் 12 ஜிபி டேட்டா, ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
ஜியோ சலுகையில் ஏர்டெல் போன்று வேலிடிட்டி கட்டுப்பாடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அந்த வகையில் ஜியோ ரூ. 101 வேலிடிட்டி ஜியோ எண் பேஸ் பேக் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி டிவி மற்றும் ரியல்மி வாட்ச் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ரியல்மி டிவி மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது ட்விட்டரில், புதிய சாதனங்கள் இந்தியாவில் மே 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் ரியல்மி பிராண்டு இந்தியாவின் பிரபல வாழ்வியல் சாதனங்களை விற்கும் பிராண்டாக உருவெடுக்கும் பயணத்தை துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இது 43 அங்குல அளவில் நெட்ஃப்ளிக்ஸ் வசதியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய ரியல்மி வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் 1.4 அங்குல டிஎஃப்டி எல்சிடி தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே 320x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் வலதுபுறத்தில் ஒற்றை பட்டன் வழங்கப்படும் என்றும் இதன் ரிஸ்ட் பேண்ட்களை கழற்றி மாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக இதய துடிப்பு சென்சார் இயங்கினாலும் இதில் வழங்கப்பட்டுள்ள 160 எம்ஏஹெச் பேட்டரி ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் என்கோ டபிள்யூ31 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் என்கோ டபிள்யூ31 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் மே 15 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் இயர்பட்சை வாங்க முடியும்.
அமேசான் தளத்தில் ரூ. 3999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஒப்போ என்கோ டபிள்யூ31 இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் ரூ. 4,499 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த இயர்பட்ஸ் என்கோ ஃபிரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டு என்கோ ஃபிரீ விற்பனை மட்டும் ஏற்கனவே துவங்கியது.

ஒப்போ என்கோ டபிள்யூ31 சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5.0 மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுடன் இணைந்து கொள்ளும்
- 7 நானோமீட்டர் டிரைவர்
- வால்யூம், கால் மற்றும் பாடல்களை மாற்ற தொடுதிரை வசதி
- டூயல் மைக்ரோபோன்கள், பிரீனோ வாய்ஸ் கண்ட்ரோல்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- இயர்பட்ஸ் கேசில் 350 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய இயர்பட்ஸ் அனைவரது காதுகளிலும் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில், மூன்று வித அளவுகளில் இயர்டிப்களுடன் வழங்கப்படுகிறது. கேசுடன் சேர்த்து இது 15 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதனை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனத்தின் ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையை பயனர்கள் இதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை ஒன்றிணைத்து வோடபோன் ரெட் பிராண்டிங்கில் வழங்கி வருகிறது. இதேபோன்று ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகைகள் மே 11 ஆம் தேதியில் இருந்து வோடபோன் ரெட் பெயரில் வழங்க துவங்கியுள்ளது.
இது துவங்கிய ஒரே நாளில், வோடபோன் நிறுவனம் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் போஸ்ட்பெயிட் சலுகைகளை பயன்படுத்த புதிய வணிக பயன்பாட்டு கொள்கையை அறிவித்துள்ளது. தற்சமயம் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விலை மாதம் ரூ. 1099 ஆகும்.
புதிய வணிக பயன்பாட்டு கொள்கையின் படி ரெட்எக்ஸ் சலுகை பயனர்களின் வழக்கமான பயன்பாட்டுக்காக அறிவிக்கப்பட்டது ஆகும். இதனை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டால், அவர்களது சலுகை மாற்றப்பட்டு விலை குறைந்த சலுகை ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் சலுகையை தவறாக பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டவர் ரெட்எக்ஸ் சலுகையை ஆறு மாதங்களுக்குள் தேர்வு செய்தவராக இருந்தால் அவரிடம் இருந்து ரூ. 3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என வோடபோன் தெரிவித்துள்ளது.
வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் அன்லிமிட்டெட் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, தேர்வு செய்யப்பட்ட விமான நிலைய லாஞ்ச்கள், தேர்வு செய்யப்பட்ட நாடுகளுக்கு விசேஷ விலையில் ஐஎஸ்டி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ. 2999 மதிப்புள்ள ஐரோம் எனும் 7 நாட்கள் சலுகையை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியாவில் சிறப்பு ரயிலில் பயணம் செய்வோர் இந்த செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோர் மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்வதை மத்திய ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கி இருக்கிறது. எனினும், ஒவ்வொருத்தர் சூழலுக்கு ஏற்ப விலக்கு அளிப்பது பற்றி முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் பற்றி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை. எனினும், மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
Indian Railways is going to start few passenger trains services. It is mandatory for passengers to download Aarogya Setu app in their mobile phones, before commencing their journey
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
Download this app now -
Android : https://t.co/bpfHKNLHmD
IOS : https://t.co/aBvo2Uc1fQpic.twitter.com/MRvP8QBVPU
'தேசிய ஊரடங்கின் போதும் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருக்கிறது. இதில் பயணம் செய்வோர் ஆரோக்யசேது செயலியை தங்களது மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது', என மத்திய ரயில்வே அமைச்சக ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் போன் நம்பர் அவசியம் என்பதால், அனைத்து பயணிகளும் மொபைல் வைத்திருப்பர். இதன் காரணமாக ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது என ரயில்வே துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் சேவையை பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அம்சம் மூலம் பயனர்கள் சாதனங்களில் லாக் இன் செய்ய முடியும். பல்வேறு மாற்றங்களுடன் இந்த அம்சத்தை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட் வழங்கப்படுகிறது. புதிய ஷார்ட்கட் அம்சம் வாட்ஸ்அப் வெப் 2.2019.6 பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் வெளியிடப்படும் முன் சீராக இயங்க வைக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது.
ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தில் பயனர்கள் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பின் இன்வைட் லின்க் மூலம் மற்றவர்களையும் இணைப்பில் சேர்த்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் வெப் தவிர ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களிலும் இந்த அம்சம் வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எம்ஐ 10 5ஜி மற்றும் எம்ஐ பாக்ஸ் 4கே உள்ளிட்ட சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.
இந்தியாவில் அதிக வளர்ச்சி பெற்று வரும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மூலம் களமிறங்கியுள்ளது. புதிய இயர்போன் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.
சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மே 12 முதல் மே 17 ஆம் தேதி வரை இந்த இயர்போன் ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக இது ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 அமேசான், எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. விலையை பொருத்த வரை புதிய இயர்போன்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது. இதுதவிர நாய்ஸ், போட் மற்றும் இதர பிராண்டுகளிடம் போட்டியை எதிர்கொள்கிறது.
சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரம், கால் தரம் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
டூயல் 5ஜி சிம் கார்டுகள், 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே சப்போர்ட் கொண்ட மீடியாடெக் நிறுவனத்தின் புதிய டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டது.
மீடியாடெக் நிறுவனம் டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட்டை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த டிமென்சிட்டி 1000 சிப்செட்டின் மேம்பட்ட ஃபிளாக்ஷிப் வெர்ஷன் ஆகும்.
புதிய டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட்டில் டூயல் 5ஜி சிம் வசதி, மீடியாடெக் நிறுவனத்தின் 5ஜி அல்ட்ராசேவ் பவர் சேவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது நெட்வொர்க் சூழ்நிலை மற்றும் பயனர் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பேட்டரி பயன்பாட்டை தானாக மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும் இதில் 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இது வழக்கமான 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்களை விட 2.4 மடங்கு வேகமாக இயங்கும் என மீடியாடெக் தெரிவித்துள்ளது. டிமென்சிட்டி 1000 போன்றே புதிய 1000 பிளஸ் சிப்செட்டிலும் ஹைப்பர்என்ஜின் 2.0 வசதி கொண்டிருக்கிறது. இது சீரான கேமிங் அனுபவம் வழங்கும்.
மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட் விரைவில் சந்தையில் கிடைக்கும். மேலும் இந்த சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை ஐகூ பிராண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.






