search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேஸ்பிட்"

    • புதிய அமேஸ்பிட் மாடலில் 1.32 இன்ச் TFT LCD ஸ்கிரீன் உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் - ஆக்டிவ் எட்ஜ் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரக்கட் ஸ்போர்ட் மற்றும் ஃபிட்னஸ் டிசைன், செயற்கைக்கோள் சார்ந்த ஜி.பி.எஸ். டிராக்கிங் அம்சம், ஏ.ஐ. வசதிகள், 16 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 1.32 இன்ச் TFT LCD ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. எனினும், இந்த மாடலில் ப்ளூடூத் காலிங் மேற்கொள்வதற்காக மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்படவில்லை.

     


    அமேஸ்பிட் ஆக்டிவ் எட்ஜ் அம்சங்கள்:

    1.32 இன்ச் 360x360 பிக்சல் TFT LCD ஸ்கிரீன்

    ப்ளூடூத் 5.0

    செப் ஒ.எஸ். 2.0

    பயோ டிராக்கர் 3

    செப் கோச்

    செப் கோச் மற்றும் டிராக் ரன் மோட்

    ஸ்மார்ட் டிராஜெக்டரி கரெக்ஷன்

    24 மணி நேர இதய துடிப்பு சென்சார்

    ஸ்டிரெஸ் மானிட்டரிங்

    ரிமைன்டர், கால் நோட்டிஃபிகேஷன்

    ஸ்மார்ட்போன் ஆப் நோட்டிபிகேஷன்

    மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல்

    370 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    16 நாட்களுக்கான பேட்டரி பேக்கப்

    புதிய அமேஸ்பிட் ஆக்டிவ் எட்ஜ் மாடல் லாவா பிளாக், மிட்நைட் பல்ஸ் மற்றும் மின்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான், அமேஸ்பிட் வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் பிப்ரவரி 27-ம் தேதி துவங்குகிறது.

    • அமேஸ்பிட் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக இருக்கிறது.
    • அமேஸ்பிட் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பாப் 2 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் புது ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த மாடல் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. டீசர்களின் படி புதிய அமேஸ்பிட் பாப் 2 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, செவ்வக வடிவம், மெட்டல் ரிம் கேஸ், வட்ட வடிவில் ஒற்றை டயல் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    அமேஸ்பிட் பாப் 2 மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ப்ளூடூத் காலிங் வசதி இருக்கும். இதை கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் வாட்ச்-ஐ கனெக்ட் செய்தால் அழைப்புகளை எளிதில் மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். இந்த அம்சம் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த நிலை மெல்ல மாறி பட்ஜெட் வாட்ச் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

    இவைதவிர அமேஸ்பிட் பாப் 2 மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என டீசரில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் முழு திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், அதிகபட்சம் 150-க்கும் வாட்ச் ஃபேஸ்கள், ஆக்சிஜன் மாணிட்டர், 24 மணி நேர இதய துடிப்பு மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    • அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் தலைசிறந்த ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் IFA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் மற்றும் ஸ்டான்ட் அலோன் மியூசிக் பிளேபேக் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் ரெகுலர் வெர்ஷனில் 1.75 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டாலிக் ஃபிரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நேவிகேஷன் கிரவுன், அதிகபட்சம் 5 மீட்டர்கள் வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 சென்சார், மன உளைச்சல் மற்றும் உறக்க முறைகள் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.


    புதிய அமேஸ்பிட் GTS 4 மாடலில் அதிகபட்சம் 150 ஸ்போர்ட்ஸ் மோட்கள், டூயல் பேண்ட் ஜிபிஎஸ் ஆண்டெனா, ஆறு செயற்கைக் கோள் சிஸ்டம்களை சார்ந்து ரூட் ஃபைல் இம்போர்ட் மற்றும் ரியல் டைம் நேவிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், ஜெப் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் எட்டு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.

    அமேஸ்பிட் GTS 4 அம்சங்கள்:

    1.75 இன்ச் 390x450 பிக்சல் AMOLED ஸ்கிரீன்

    செப் ஒஎஸ் 2.0

    150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    பயோ டிராக்கர் 4.0 பயோமெட்ரிக் சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ப்ளூடூத் 5.0 LE, வைபை, டூயல் பேண்ட் ஜிபிஎஸ்

    2.3 ஜிபி பில்ட் இன் மெமரி

    மைக்ரோபோன்

    ஆப்லைன் வாய்ஸ் அசிஸ்டண்ட்

    ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங்

    300 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் இன்பனைட் பிளாக் மற்றும் ரோஸ்பட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு ஓஉள்ளது. இதன் முன்பதிவு அமேசான் மற்றும் அமேஸ்பிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விற்பனை செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது.

    • அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதிகளை கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த ஸ்மார்ட்வாட்ச் IFA சர்வதேச நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் ஸ்டாண்ட்-அலோன் மியூசிக் பிளேபேக் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.


    இத்துடன் புதிய அமேஸ்பிட் GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் சூப்பர்ஸ்பீடு பிளாக் மற்றும் விண்டேஜ் பிரவுன் லெதர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அமேஸ்பிட் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புது அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் GTS மற்றும் GTR ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் நான்காவது தலைமுறை வெர்ஷன்களை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 3 மற்றும் GTR 3 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து அமேஸ்பிட் GTS 4 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புது ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை உணர்த்தும் டீசரை அமேசான் இந்தியா தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் வெளியீட்டு தேதி மற்றும் விலை போன்ற விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும். கடந்த மாதம் தான் அமேஸ்பிட் GTS 4 மினி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் ரெகுலர் வெர்ஷனில் 1.75 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டாலிக் ஃபிரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நேவிகேஷன் கிரவுன், அதிகபட்சம் 5 மீட்டர்கள் வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 சென்சார், மன உளைச்சல் மற்றும் உறக்க முறைகள் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய அமேஸ்பிட் GTS 4 மாடலில் அதிகபட்சம் 150 ஸ்போர்ட்ஸ் மோட்கள், டூயல் பேண்ட் ஜிபிஎஸ் ஆண்டெனா, ஆறு செயற்கைக் கோள் சிஸ்டம்களை சார்ந்து ரூட் ஃபைல் இம்போர்ட் மற்றும் ரியல் டைம் நேவிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், ஜெப் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் எட்டு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.

    • அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஐந்து விதமான செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
    • இத்துடன் பயோடிராக்கர் 4.0 ஆப்டிக்கல் சென்சார் மற்றும் மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    உலகின் பிரபல நுகர்வோர் மின்சாதன கண்காட்சியான 2022 ஐஎப்ஏ விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய துவங்கி விட்டன. இந்த வரிசையில் தான் அமேஸ்பிட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேஸ்பிட் GTR 4 என அழைக்கப்படுகிறது.

    புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் உள்ளன. GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் பிரவுன் லெதர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 932 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்ச், மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமேஸ்பிட் நிறுவனம் அதன் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்சை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன் உடன் வந்துள்ளது. 15 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் செப் இயங்குதளம் இடம்பெற்று உள்ளது.

    அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்ச், மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் மற்றும் அமேஸ்பிட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.


    இதன் ஒரிஜினல் விலை ரூ.7 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.6 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை 1.65 இன்ச் ஹெச்.டி AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 270 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் இடம்பெற்று உள்ளது.

    இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை நீடிக்குமாம். அதுமட்டுமின்றி இதில் உள்ள பேட்டரி சேவர் மோட் அம்சத்தை பயன்படுத்தினார் 45 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் என கூறப்படுகிறது. 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களும் இதில் இடம்பெற்று உள்ளன. 

    ×