என் மலர்tooltip icon

    கணினி

    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    நாய்ஸ் பிராண்டின் புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்செட்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ மாடலில் IPX4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய சார்ஜிங் கேஸ் உடன் வரும் இயர்பட்ஸ் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்குகிறது. இதன் ஸ்டான்ட்-அலோன் பிளேபேக் 4 மணி நேரங்களும், சார்ஜிங் கேசுடன் 32 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

    நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ

    நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ சிறப்பம்சங்கள்

    - ப்ளூடூத் 5.0
    - 6 எம்எம் டிரைவர்கள்
    - ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட்
    - 800 எம்ஏஹெச் பேட்டரி

    நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
    அமெரிக்காவில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள பீட்டா வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அமெரிக்காவில் கடும் போராட்டம் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவுவதால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    "ஆண்ட்ராய்டு 11 பற்றி தெரிவிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம், ஆனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் இல்லை," என கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பற்றிய புதிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 11 வெளியீடு ஒத்திவைப்பு

    ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுக விழா ஜூன் 3 ஆம் தேதி விர்ச்சுவல் முறையில் நடைபெற இருந்தது. இவ்விழாவில் புதிய இயங்குதளத்தின் அம்சங்கள் மற்றும் விவரங்களை கூகுள் அறிவிக்க இருந்தது. இயங்குதளம் மட்டுமின்றி இதர சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக கூகுள் தெரிவித்து இருந்தது.

    அந்த வகையில் ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுகம் செய்யப்பட்டதும் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு நான்காவது ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது.

    அமெரிக்காவின் மின்னியாப்பொலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்டு எனம் கருப்பினத்தவரை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் மிதித்தே கொலை செய்த சம்பவத்தை கண்டித்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    ட்விட்டர் நிறுவனம் தனது வெப் வெர்ஷனில் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    ட்விட்டர் வெப் வெர்ஷனில் பயனர் எழுதும் ட்விட்களை டிராஃப்ட் ஆக வைத்து கொள்ளும் வசதியும், எழுதி முடித்த ட்விட்களை பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஷெட்யூல் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை சில க்ளிக்குகளில் மேற்கொள்ள முடியும்.

    முதற்கட்டமாக இரு அம்சங்களும் ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. புதிய ஷெட்யூல் அம்சத்தில் ட்வீட் கம்போசர் அருகில் சிறிய காலெண்டர் ஐகான் எமோஜி பட்டன் அருகில் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்ததும், ட்வீட் செய்யப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    ட்விட்டர் ஷெட்யூல்

    முன்பை போன்றே, ட்வீட்களை எழுதும் போது பாதியில் நிறுத்த வேண்டியிருந்தால் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ள வழி செய்கிறது. முன்னதாக இந்த அம்சத்தை இயக்குவது கடினமாக இருந்தது. தற்சமயம் இதனை இயக்க புதிதாக இரண்டு டேப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றில் சேமிக்கப்பட்ட ட்வீட்களும், மற்றொன்றில் ஷெட்யூல் செய்யப்பட்ட ட்விட்களும் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக இந்த அம்சம் ட்விட்டர் வெப் தளத்திலும் அதன்பின் மொபைல் வெப் தளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இரு அம்சங்களும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளிலும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    பிளே ஸ்டேஷன் 5 கன்சோலின் முதல் கேம் அறிமுக விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    சோனி நிறுவனம் ஜூன் 3 ஆம் தேதி டிஜிட்டல் நிகழ்வினை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் புதிய பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) கேமினை அறிமுகம் செய்ய சோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய கேமிங் கன்சோல் பற்றிய தகவல்களை சோனி வழங்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பிஎஸ்5 பற்றிய விவரங்களை அறிவிக்கும் என தெரிகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    பிஎஸ்5

    சோனி நிறுவனத்தின் புதிய கன்சோல் வடிவமைப்பு பற்றி குறைந்தளவு விவரங்களே வெளியாகி இருக்கிறது. எனினும், ஜூன் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் நிகழ்வில் சோனி புதிய கன்சோல் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அறிவிக்கும் என தெரிகிறது.

    வரும் வாரங்களில் இந்த நிகழ்வு நடைபெற்று 2020 பண்டிகை காலகட்டத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. கேம்களை பற்றி அதிக விவரங்கள் இல்லாத நிலையில், பிளே ஸ்டேஷன் அதிகாரப்பூர்வ பத்திரிகை #176 பதிப்பில் புதிய கன்சோலுக்கான 38 கேம்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகமமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    43 இன்ச் அளவில் புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் டீசர் நோக்கியா வலைதளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. 43 இன்ச் நோக்கியா டிவி மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா ஸ்மார்ட் டிவி

    நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது. இதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதன் சிறப்பம்சங்களும் 55 இன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலில் குவாட்கோர் பிராசஸர், மாலி 450 MP GPU, 2.25 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது.

    தற்போதைய தகவல்களின் படி புதிய நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
    சியோமி நிறுவனம் தனது Mi லேப்டாப் மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    சியோமி நிறுவனம் சீன சந்தையில் அதிக லேப்டாப் மாடலை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் இவை அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தன. தற்சமயம் இவற்றின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது Mi லேப்டாப் மாடல்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. சியோமி இந்தியா மற்றும் அதன் நிறுவன அதிகாரிகள் புதிய லேப்டாப் வெளியீடுகளை உணர்த்தும் வகையில் வீடியோ டீசர்களை வெளியிட்டு இருக்கின்றன. 

    சியோமி இந்தியா ட்வீட் விவரங்களின் படி ரெட்மி புக் லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் Mi லேப்டாப் மாடலாக வெளியிட இருக்கிறது. புதிய லேப்டாப் மாடல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு சீன சந்தையில் தனது முதல் மாணிட்டர் மாடலை அறிமுகம் செய்தது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி டிஸ்ப்ளே 1ஏ மாணிட்டரை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி மாணிட்டரில் 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் 7.3எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

    ரெட்மி 1ஏ மாணிட்டரில் புளூ லைட் வசதி மற்றும் கண்களை பாதுகாக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ரெட்மி மாணிட்டர் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் கொண்டிருக்கிறது. இதில் 23.8 இன்ச் 1920x1080 பிக்சல் ஐபிஎஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இந்த மாணிட்டரின் பின்புறம் பவர் பட்டன், ஹெச்டிஎம்ஐ மற்றும் விஜிஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இதன் ஸ்டான்டு டெக்ஸ்ச்சர் ஃபினிச் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ரெட்மி மாணிட்டர் விலை 599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 6330 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.
    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நாய்ஸ் இந்தியாவில் புகிய வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    ஆடியோ சாதனங்களை உருவாக்கி வரும் பிரபல நிறுவனமான நாய்ஸ் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்பட்ஸ் ஷாட்ஸ் ரஷ் என அழைக்கப்படுகிறது.

    புதிய இயர்பட்ஸ் IPX5 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் மூன்று பிரீசெட் மோட்களுடன் ஈக்வலைசர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. வீடியோ, கேம்களுக்காக பயன்படுத்தும் போது ஆடியோ லேக் குறைவாக இருக்க ஏதுவாக 80எம்எஸ் அல்ட்ரா லோ - லேடென்சி மோட் வழங்கப்பட்டுள்ளது. 

    நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ்

    நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம் மற்றும் அழைப்புகளுக்கு முழுமையான தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது.  இதில் உள்ள பேட்டரியை கொண்டு 6 மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்து 24 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. 

    நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ் சார்கோல் பிளாக், குவிக் சில்வர் மற்றும் வைன் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகை ரூ. 2399 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை அந்நிறுவனத்தின் சட்டீஸ்கர் வட்டாரத்திற்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த சலுகையில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், முதல் 60 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டியூன்ஸ் சேவை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் டேட்டா வழங்கப்படவில்லை. இந்த சலுகை நாடு முழுக்க அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    இதுதவிர பிஎஸ்என்எல் ரூ. 699 சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 160 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 699 சலுகையில் அறிவிக்கப்பட்டுள்ள வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் மற்றும் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரம்ஜான் சிறப்பு சலுகை ரூ. 786 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



    பிஎஸ்என்எல் நிறுவனம் 2020 ரம்ஜான்  பண்டிகையை முன்னிட்டு ரூ. 786 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. புதிய ரூ. 786 பிஎஸ்என்எல் சலுகை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 786 சலுகை

    புதிய பிஎஸ்என்எல் ரூ. 786 விலை சலுகையில் ரூ. 786 டாக்டைம், 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரூ. 786 சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இதேபோன்ற பலன்களுடன் ரம்ஜான் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 786 ரம்ஜான் சலுகை முதற்கட்டமாக கேரளா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் விரைவில் இந்த சலுகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கியூ ஆர் கோட் அம்சத்தினை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவின் ப்ரோஃபைல் பகுதியில் இயக்க முடியும். கியூஆர் கோடுகளை நண்பர்களுக்கு அனுப்பி, உங்களது நம்பரை பகிர்ந்து கொள்ள முடியும்.

    வாட்ஸ்அப் கியூஆர் கோட்

    கியூஆர் கோடினை அனுப்புவதோடு மற்றவர்களின் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து அதனை காண்டாக்ட் லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே உருவாக்கிய கியூஆர் கோடினை வைத்து கொள்ளவோ அல்லது ரீசெட் செய்யவும் முடியும்.

    முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அம்சம் விரைவில் ஸ்டேபில் பதிப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக இதேபோன்ற அம்சத்தினை நேம்டேக் எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது. இதை கொண்டு இன்ஸ்டாவில் உள்ள மற்ற நண்பர்களை கண்டுபிடிக்க முடியும்.
    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 29 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 29 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 டாக்டைம், 100 எம்பி டேட்டா உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    புதிய ரூ. 29 சலுகை வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஆல்ரவுண்டர் எனும் பெயரிலும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரேட்கட்டர் எனும் பெயரிலும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரூ. 20 டாக்டைம் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மெசேஜ்களுக்காக வழங்கப்படுகிறது.

    கோப்புப்படம்

    இந்த சலுகையில் அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு பொருந்தும். 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையில் டாக்டைம் தவிர 100 எம்பி மொபைல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. 

    மற்ற சலுகைகளை போன்றே புதிய சலுகையும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் ரூ. 29 சலுகை டெல்லி வட்டாரத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த சலுகை அனைத்து வட்டாரங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×