என் மலர்
கணினி
ப்ளிப்கார்ட் தளத்தில் மொபைல் போன் வாங்குவோருக்கு வாரண்டி வழங்கும் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது வலைதளத்தில் மொபைல் போன் வாங்குவோருக்கு புதிய வாரண்டி அசிஸ்டண்ட் சேவையை அறிவித்து இருக்கிறது. ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்ட் சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களில் உள்ள உற்பத்தி குறைபாடுகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் கோளாறுகளை வாரண்டியின் கீழ் சரி செய்து கொள்ள முடியும்.
ப்ளிப்கார்ட தளத்தில் புதிய மொபைல் போன் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெற முடியும். இந்த சலுகையில் பிராண்டுகள் அறிவிக்கும் வாரண்டியின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்டண்ட் சேவைரூ. 99 விலையில் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற மொபைல் போன் வாங்கும் போதே, ப்ளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்ய வேண்டும். சேவையில் ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு வந்து மொபைல்களை பெற்று அதனை சரிசெய்து வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.
வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் வேளையில், வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களது போன்களை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற விடாமல் சரி செய்து தருகிறோம் என ப்ளிப்கார்ட் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் 27 இன்ச் அளவில் புதிய கேமிங் மாணிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் 27 இன்ச் கேமிங் மாணிட்டர் சீன சந்தையின் கிரவுட்ஃபண்டிங் பிளாட்பார்மில் வெளியாகி உள்ளது. புதிய 27 இன்ச் மாணிட்டர் 165 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் டியுவி லோ புளூ லைட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 27 இன்ச் சியோமி மாணிட்டரை மேசையில் வைத்தும், சுவரில் பொருத்தியும் பயன்படுத்த முடியும். இதற்கான ஸ்டாண்ட் மாணிட்டருடன் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம். சீன சந்தையில் சியோமி 27 இன்ச் கேமிங் மாணிட்டர் விலை CNY 2199 இந்திய மதிப்பில் ரூ. 23,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இது கிரவுட்ஃபண்டிங் பிளாட்பார்மில் CNY 1899 இந்திய மதிப்பில் ரூ. 20,300 விலையில் கிடைக்கிறது. கிரவுட்ஃபண்டிங் சீனாவில் ஜூன் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சியோமி மால் வலைதளத்தில் துவங்குகிறது. புதிய சியோமி மாணிட்டர் வெளியீட்டை சியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது.
சியோமி 27 இன்ச் கேமிங் மாணிட்டர் 1440x2560 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 165 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஹை ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 95 சதவீதம் டிசிஐ பி3 கலர் கேமுட் கொண்டிருக்கிறது. இது டிஸ்ப்ளே ஹெச்டிஆர் 400 டைனமிக் டிஸ்ப்ளே அம்சத்தை வழங்குகிறது.
புதிய கேமிங் மாணிட்டரில் யுஎஸ்பி 3.0 போர்ட், டிஸ்ப்ளஏ போர்ட், ஹெச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் விரைவில் புதிய அம்சம் வழங்குவதற்கான சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் பயனர்கள் தங்களின் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதனை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது.
இந்த அம்சம் கொண்டு ஐபோன் பயனர்கள் தங்களின் மெசஞ்சர் செயலியை டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி மூலம் லாக் செய்து கொள்ள வழி வகுக்கும். இந்த அம்சம் முதற்கட்டமாக சில ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும்.

பயோமெட்ரிக் முறையில் இயங்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில், இதே அம்சம் தற்சமயம் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் தனிநபர் சாட்களுக்கு பொருந்தாது. இது ஒட்டுமொத்த செயலிக்கும் கூடுதல் பாதுகாப்பினை வழங்கும்.
லாக் செட்டிங்கில் செயலி எவ்வளவு நேரம் கழித்து லாக் செய்யப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஆப்ஷன் கொண்டிருக்கும். இது ஒரு நிமிடத்தில் துவங்கி ஒரு மணி நேரம் வரை இருக்கலாம்.
சமூக வலைதள செயலிகளில் இதுபோன்ற கூடுதல் பாதுகாப்பு பயனர்களுக்கு அத்தியாவசிய தேவையாக மாறி இருக்கிறது. இதையே ஃபேஸ்புக் தற்சமயம் மெசஞ்சர் செயலியில் மேற்கொண்டு வருகிறது.
சியோமி நிறுவனம் குறைந்த விலையில் ரெட்மிபுக் லேப்டாப் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் தனது குறைந்த விலை ரெட்மிபுக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் சீரிஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் சியோமி நிறுவனம் தனது பட்ஜெட் ரக லேப்டாப் மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டுக்கான பிரிவில் சியோமியின் ரெட்மிபுக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் சியோமியின் ரெட்மிபுக் மாடல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த லேப்டாப்களின் வித்தியாசமான வேரியண்ட்களை சியோமி அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களை போன்றே லேப்டாப்களுக்கும் சியோமி நிறுவனம் இருவேறு சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என பல்துறை பணிகள் முழுமையாக ஆன்லைன் வசம் மாறியுள்ள நிலையில், லேப்டாப்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
புதிய லேப்டாப் வாங்க நினைப்போர் பெரும்பாலும் பட்ஜெட் ரக லேப்டாப்களையே தேர்வு செய்கின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் சியோமி இதுபோன்ற வாடிக்கையாளர்களை குறிவைக்க சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படகிறது.
சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது.
உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் செயல்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ 33 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ என உலக தலைவர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவுக்கு ஆதரவான செய்திகளை பதிவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்த 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அதிரடியாக நீக்கி, அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றில் பல கணக்குகள், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பானவை என தெரியவந்துள்ளது.
இதில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்த கணக்குகள் என அடையாளம் காணப்பட்டு 23 ஆயிரத்து 750 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்த கணக்குகள் மொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 608 முறை ட்விட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் ‘ஆம்ப்ளிபயர்’ கணக்குகள் (பெருக்கி கணக்குகள்) என தெரியவந்துள்ளது. அதாவது, இந்த கணக்குகள், முக்கிய கணக்குகளில் வெளியிடப்பட்ட பதிவுகளை மறு ட்விட் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நீக்கப்பட்டுள்ள கணக்குகளில் பெரும்பாலானவை, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஹாங்காங் விவகாரங்களில் சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இந்த கணக்குகளை ஆராய்ந்து வந்த ட்விட்டர் நிபுணர்கள், இவை ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ளிட்ட விவகாரங்களில் தவறான தகவல்களை முன் வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கணக்குகள், சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு சாதகமான புவிசார் அரசியல் கதைகளை பரப்பின, ட்விட்டரின் அடிப்படை பயன்பாட்டு கொள்கைகளை மீறின, அதன் காரணமாகவே அகற்றப்பட்டுள்ளன என்று ட்விட்டர் நிறுவனம் கூறி உள்ளது.
நீக்கப்பட்ட கணக்குகள் பெரும்பாலும் சீன மொழியில்தான் இயக்கப்பட்டு வந்துள்ளன. இந்த கணக்குகளை ஆராய்ந்த ஸ்டான்ஃபோர்ட் இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா, கொரோனா வைரஸ் பற்றி பதிவிடப்பட்டுள்ள கணக்குகள் பெரும்பாலும் கடந்த ஜனவரிக்கு பின்னர் தொடங்கப்பட்டவை என்று கூறினார்.
மேலும் சீனா மட்டுமின்றி ரஷியா மற்றும் துருக்கியுடன் பிணைக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கிறது. ரஷிய கணக்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஆளும் ஐக்கிய ரஷிய கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவை என தெரிய வந்துள்ளது.
உலகின் பிரபல கேமிங் சீரிசான ரெசிடண்ட் ஈவில் சர்வதேச சந்தையில் பத்து கோடி யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான கேப்காம், ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் சர்வதேச அளவில் பத்து கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு துவங்கிய ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் வெளியானது முதல் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
கேப்காம் நிறுவனத்திற்கு இதுபோன்ற மைல்கல் எட்டிய முதல் கேம் என்ற பெருமையை ரெசிடண்ட் ஈவில் பெற்று இருக்கிறது. வெளியானது முதல் அடுத்தடுத்த தொடர்களை வெளியிட்டதே இதற்கு காரணம் என கேப்காம் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ரெசிடண்ட் ஈவில் வில்லேஜில் கேப்காம் தனது அடுத்த கேமிற்கான டீசரையும் வெளியிட்டுள்ளது.

உலகளவில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த போதும், ரெசிடண்ட் ஈவில் கேமின் விற்பனையில் 80 சதவீதம் ஜப்பானிற்கு வெளியில் நடைபெற்று இருக்கிறது. ரெசிடண்ட் ஈவில் பிராண்டிங் சார்பில் கேமானது பொழுதுபோக்கு பூங்கா மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
இத்துடன் தொடர்ந்து புதிய தொடர்களை வெளியிட்டது மற்றும் ரெசிடண்ட் ஈவில் 2, ரெசிடண்ட் ஈவில் 3 போன்ற பழைய கேம்களின் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்புகளை வெளியிட்டது இத்தனை யூனிட்கள் விற்பனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. விற்பனை எண்ணிக்கை கேமின் கணினி மற்றும் கன்சோல்களுக்கான பதிப்புகளை உள்ளடக்கியது ஆகும்.
சோனி நிறுவனம் வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்ட புதிய ஹெட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் WH CH710N வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய்ல் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கிறது.
இதில் டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம், நீண்ட பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் தொழில்நுட்பம், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாய்ஸ் கேன்சலேஷன் ஃபில்ட்டரை சீராக இயக்க வழி செய்கிறது.
டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம் டூயல் மைக்ரோபோன்களை பயன்படுத்தி நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை செயல்படுத்தி, வெளிப்புற சத்தத்தை தடுக்கிறது. இத்துடன் ஆம்பியன்ட் நாய்ஸ்மோட் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் விரும்பும் நேரத்தில் வெளிப்புற சத்தத்தை கேட்கவும் முடியும்.
என்எப்சி வசதி கொண்டிருப்பதால், இந்த ஹெட்போன் மற்ற சாதனங்களுடன் மிகவேகமாக இணைந்து கொள்ள முடியும். இதில் உள்ள பேட்டரி 35 மணி நேரத்திற்கு தொடர்ச்சியான பயன்பாடு, பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.
புதிய சோனி WH CH710N ஹெட்போன் சோனி விற்பனை மையங்கள் மற்றும் இதல ஆன்லைன் விற்பனை வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சலுகைகளில் முன்பை விட நான்கு மடங்கு அதிக பலன்கள் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு நான்கு மடங்கு பலன்களை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பயனர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் மற்றும் ஏஜியோ தளங்களில் பயன்படுத்துவதற்கான தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
ஜியோ அறிவித்திருக்கும் நான்கு மடங்கு பலன்கள் ஜியோ ரூ. 249 விலையில் துவங்கி அதற்கும் அதிக விலை சலுகைகளில் வழங்கப்படுகிறது. வவுச்சர்கள் ரீசார்ஜ் தொகைக்கு இணையான மதிப்புக்கு வழங்கப்படுகிறது. ரீசார்ஜ் நிறைவுற்றதும் வவுச்சர்கள் மைஜியோ செயலியின் கூப்பன்ஸ் பகுதியில் சேர்க்கப்படுகிறது.
ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படும் தள்ளுபடி வவுச்சர்களை மேலே குறிப்பிடப்பட்டு உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் அடுத்த முறை பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வவுச்சர்களின் அதிகபட்ச மதிப்பு ரூ. 300 ஆகும். இதனை பயன்படுத்த பயனர்கள் ஏஜியோ, டிரெண்ட்ஸ், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் போன்ற தளங்களில் குறைந்தபட்சம் ரூ. 999 விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும். ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவையில் குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்க வேண்டும்.
ஜியோ புதிய சலுகையில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது ஜியோ புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க அமேசான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த முதலீடு வெற்றிகரமாக நிறைவுறும் பட்சத்தில் அமேசான் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க முடியும்.
இந்திய டெலிகாம் சந்தையில் சுமார் 30 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது பெரும் நிறுவனமாக விளங்கி இருக்கிறது. பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இடையேயான பேச்சுவாரத்தை முதற்கட்டத்தில் தான் இருக்கிறது என கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் ஃபேஸ்புக், கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் இதர நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை செய்தன. இதுதவிர அபுதாபியை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
அமேசான் நிறுவனம் இந்திய ஆன்லைன் துறையில் இதுவரை ரூ. 49,100 கோடி மதிப்பிலான முதலீடுகளை செய்ய இருப்பதாத தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிளே ஸ்டோரில் அதிக வரவேற்பு பெற்று வந்த இந்திய செயலி அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், அந்த நாட்டுக்கு எதிரான மனநிலை இந்திய மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது போதாது என இந்திய சீன எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வாலாட்டி வருகிறது. இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இந்தியர்களுக்கு சீனா மீது மேலும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த தருணத்தில் சீன தயாரிப்புகளை தவிர்க்குமாறு இந்திய கல்வியாளர் சோனம் வாங்சுக் இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது இந்தியர்கள் பலரும் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு ஒரு ஆப்பு போல அமைந்தது.

இந்த செயலி, சீனாவின் செயலிகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதற்கு உதவி வந்தது. இதே போன்று சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் மித்ரன் என்ற செயலி அறிமுகமானது. இந்த செயலியையும் இந்திய செல்போன் உபயோகிப்பாளர்கள் 50 லட்சம் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர். இது சீன வர்த்தகத்துக்கும், அந்த நாட்டின் செயலிகளுக்கும் பலத்த அடியாக அமைந்தது.
இந்த நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ரிமூவ் சீனா செயலியும், மித்ரன் செயலியும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் கொள்கையை இந்த செயலிகள் மீறியதால் இவை திடீரென நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி முதல் விற்பனை துவங்கிய பத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 2 ) இதன் விற்பனை நடைபெற்றது. முதல் விற்பனை துவங்கிய பத்து நிமிடங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிக ரியல்மி டிவிக்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார்.
அந்த வகையில் வேகமாக விற்பனையான ஸ்மார்ட் டிவி மாடலாக ரியல்மி ஸ்மார்ட் டிவி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி டிவிக்கான அடுத்த விற்பனை ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இத்துடன் ஸ்மார்ட் டிவி மாடல்களில் எஸ்எம்டி (அதாவது சர்ஃபேஸ் மவுண்ட் தொழில்நுட்பம்) துவங்க இருப்பதாகவும், இதற்கென பிரத்யேக உற்பத்தி பிரிவை கட்டமைப்பதற்கான முதலீடு செய்யப்பட்டு வருவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. எஸ்எம்டி வழிமுறையின் கீழ் பாகங்கள் நேரடியாக பிசிபி (அதாவது பிரின்ட்டெட் சர்கியூட் போர்டு ) மீது பொருத்தப்படும்.
ஏற்கனவே ரியல்மி ஸ்மார்ட்போன்களில் இந்த வழிமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரியல்மியின் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 10 ஜிபி கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இலவச டேட்டா நாள் ஒன்றுக்கு 2 ஜிபி வீதம் ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னதாக இதேபோன்ற சலுகையை ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் ஆட்-ஆன் சலுகை பலன்களை மாற்றியமைத்து 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. முன்னதாக ஆட்-ஆன் சலுகை வேலிடிட்டி வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கி வந்தது.

இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதை பயனர்கள் மைஜியோ செயலியின் மை பிளான்ஸ் பகுதிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இங்கு பயனரின் தற்போதைய சலுகை விவரங்களின் கீழ் இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.






