search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wireless Headphone"

    ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #AirPods



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும். 

    இத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

    கியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் சார்ஜரின் முன்புறம் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து சார்ஜிங் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஏர்பாட்ஸ் பயன்படுத்துவோரும் இந்த வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வாங்கி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    சார்ஜிங் கேஸ் உடன் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்படி புதிய இயர்பாட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரமும், 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது 3 மணி நேரத்திற்கும் பயன்படுத்த முடியும். 
     
    ஏர்பாட்ஸ் மற்றும் ஸ்டான்டர்டு சார்ஜிங் கேஸ் விலை ரூ.14,900 என்றும் வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் வாங்கும் போது ரூ.18,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் வாங்கும் போது ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய இயர்போன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #WirelessHeadphone



    இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக அறியப்படும் ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    ஸ்டஃப்கூல் மாண்டி என அழைக்கப்படும் புதிய ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போனினை ஒரே சமயத்தில் இருசாதனங்களுடன் இணைக்க முடியும். நெக்பேன்ட் வடிவமைப்புடன் உருவாகி இருக்கும் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை சுற்றி சிறிய கேபிள்கள் இயர்பட்களுக்கு வழங்கப்படுகிறது.



    மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கொண்டிருப்பதால் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை தொடாமலேயே அழைப்புகளை மேற்கொள்ளவும், இசையை கேட்டு அனுபவிக்கலாம். இத்துடன் இந்த ஹெட்போனில் காந்த வசதி வழங்கப்பட்டிருப்பதால் ஹெட்போனை பயன்படுத்தாத போது இயர்பட்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும்.

    ஸ்டஃப்கூல் மாண்டி வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போன்களில் 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹெட்போனினை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். ஹெட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும்.

    இந்தியாவில் ஸ்டஃப்கூல் மாண்டி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போனின் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வ விற்பனை ஸ்டஃப்கூல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sony #headphones



    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி WH-CH700N என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சத்தத்தை தடுக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் (Artificial Intelligence Noise Cancellation) தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

    இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எளிமையாக செயல்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹெட்போனில் பிரத்யேக என்.சி. (NC) பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. 

    சோனி WH-CH700N ஹெட்போன்களின் மற்றொரு புதிய அம்சமாக டிஜிட்டல் சவுன்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது கம்ப்ரெஸ் செய்யப்பட்ட மியூசிக் ஃபைல்களின் தரத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படும் என சோனி தெரிவித்துள்ளது.



    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சோனி WH-CH700N மாடலில் ப்ளூடூத் 4.1 மற்றும் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எளிதில் கழற்றக்கூடிய ஒருபக்க கேபிள் 1.2 மீட்டர் நீளத்தில் வழங்கப்படுகிறது. இதனை வழக்கமான 3.5 எம்.எம். ஜாக் போன்று பயன்படுத்தலாம்.

    இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது. இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.

    சோனி WH-CH700N ஹெட்போன் மாடல் ஹெட்போன்ஸ் கனெக்ட் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்படுகிறது.

    நாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஸ்கைலைன் கலெக்ஷன் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Apple #BeatsStudio3Wireless



    ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஹெட்போனினை பல்வேறு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. 

    புகிய ஸ்கைலைன் கலெக்ஷன் கிரிஸ்டல் புளு, டிசர்ட் சேன்ட், மிட்நைட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்களுடன் ஹெட்போனில் தங்க நிற அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் தங்க நிற பீட்ஸ் லோகோ மற்றும் கோல்டு பேன்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    பீட்ஸ் ஸ்டூடியோ 3 ஹெட்போனில் பியூர் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர் இருக்கும் சூழலில் நிலவும் சத்தத்திற்கு ஏற்ப நாய்ஸ் கேன்சலேஷன் அளவை மாற்றும். இந்த ஹெட்போனில் உள்ள நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் போட்டி நிறுவனங்களை விட சிறப்பானதாக இயங்கும் என பீட்ஸ் தெரிவித்துள்ளது.

    அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் அம்சம் ஆஃப் செய்யப்பட்டால், ஸ்டூடியோ 3 அதிகபட்சம் 40 மணி நேர பேக்கப் வழங்கும், இந்த அம்சம் ஆன் செய்யப்பட்ட நிலையில், 22 மணி நேரம் பேக்கப் வழங்கும். புதிய ஹெட்போனினை மைக்ரோ யு.எஸ்.பி. கனெக்டர் மூலம் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    பீட்ஸ் ஓவர்-இயர் ஹெட்போன்களில் W1 சிப் வழங்கப்பட்டுள்ளதால் ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் பேர் செய்வது எளிமையாக இருக்கும். இத்துடன் மிக்கி மவுஸ் 90-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் மிக்கி தீம் கொண்ட பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த ஹெட்போன்களில் கிரே ஃபெல்ட் கேரி கேஸ், கலெக்டெபிள் பின் மற்றும் டீக்கல் ஸ்டிக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மிக்கி மவுஸ் ஹெட்போன்கள் விரைவில் கிடைக்கும் என ஆப்பிள் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    புதிய ஹெட்போன்கள் நவம்பர் 11-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. மிக்கி டிசைன் கொண்ட ஹெட்போனின் விலை 329.95 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கைலைன் கலெக்ஷன் விலை 349.95 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,720 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆப்பிள் பீட்ஸ் சோலோ 3 ஹெட்போன் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,

    சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏ.கே.ஜி. ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Wireless #earphones



    சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏ.கே.ஜி. ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்போன்கள் பேலன்ஸ் செய்யப்பட்ட ஸ்டூடியோ தர ஆடியோ அனுபவத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏ.கே.ஜி. N700NC மாடல் இசை விரும்பிகளுக்கு ஏற்றதாக ஸ்டூடியோ தர ஆடியோ வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் N700NC ஹெட்போன் கொண்டு பயனர்கள் வெளிப்புற சத்தம் எந்தளவு தங்களுக்கு கேட்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

    இதனுடன் அழைப்புகளை மேற்கொள்ளும் போது நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஆம்பியன்ட் அவேர்னஸ் போன்றவற்றை சம அளவில் இயக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஏ.கே.ஜி. Y500 மாடலில் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு ப்ளூடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்துக் கொள்ள வழி செய்கிறது. ஹெட்போன்கள் எடுக்கப்பட்டதும், அவை தானாக ஆடியோவை நிறுத்தி விடும் (pause), பின் மீண்டும் காதில் வைத்ததும் ஆடியோ தானாக இயங்க ஆரம்பிக்கும்.

    ஏ.கே.ஜி. வயர்லெஸ் Y100 இயர்போன் குறைந்த எடையில் அதிக உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை க்ளிக் மூலம் ஆம்பியன்ட் அவேர் அம்சத்தை இயக்கும் வசதி கொண்டுள்ளது. Y500 மற்றும் Y100 வயர்லெஸ் ஹெட்போன்கள் விலை அமெரிக்காவில் முறையே 149.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.10,810 என்றும் 99.95 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    N700NC விலை 349.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.25,320 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஹெட்போன்களும் அமெரிக்காவில் ஏ.கே.ஜி. அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் மற்றும் சாம்சங் வலைத்தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Wireless #earphones
    ×