என் மலர்
கணினி
ரியல்மி பிராண்டின் புதிய குறைந்த விலை இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி கியூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ. 1999 விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் ஃபிரெஞ்சு வடிவமைப்பாளர் ஜோஸ் லெவி வடிவமைத்து இருக்கிறார்.
புதிய பட்ஸ் கியூ இயர்பட்ஸ் மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 10 மில்லிமீட்டர் பாஸ் பூஸ்டர் டிரைவர்கள், டிபிபி டைனமிக் பாஸ் உள்ளிட்ட அம்சங்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் உள்ள சென்சார் காதுகளில் இருந்து இயர்பட் எடுக்கப்பட்டதும் ஆடியோவை நிறுத்தி விடுவதோடு, கேசில் இருந்து எடுக்கப்பட்டதும் போனுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.
இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் பட்ஸ் கியூ மாடலில் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃப்ளிப்கார்ட் மொபைல் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மொழிகளுக்கான வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ஃப்ளிப்கார்ட் மொபைல் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலியில் இந்தி மொழிக்கான வசதி ஒன்பது மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்டது.
புதிய மொழிகளை சேர்த்திருப்பதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மட்டும் இயக்குவதற்கான வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அனுபவத்தை செயல்படுத்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சுமார் 54 லட்சம் வார்த்தைகளை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. மொழிமாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை ஃப்ளிப்கார்ட் தள விளம்பரம் மற்றும் இதர வலைப்பக்கங்களில் பயன்படுத்த இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ரூ. 222 பிரீபெயிட் சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சலுகை தற்சமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா பலன் பெறாத வருடாந்திர வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை ரூ. 401, ரூ. 2599 உள்ளிட்ட சலுகைகளை தேர்வு செய்யும் வாடிக்கையார்களுக்கு வழங்கியது.

புதிய அறிவிப்பு ஏற்கனவே வருடாந்திர சலுகையை தேர்வு செய்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பலன் கிடைக்காதவர்களுக்கு பலன் அளிக்கும் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையில் 15 ஜிபி அதிவேக டேட்டா, வாடிக்கையாளர்களின் பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
இத்துடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் பெற முடியும். தற்போதைய தகவல்களின் படி இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.
உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை ஜப்பான் நாட்டின் புஜாக்கு என்ற சூப்பர்கம்ப்யூட்டர் பெற்றுள்ளது.
ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட புஜாக்கு எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது. இதனை புஜிட்சு மற்றும் ஜப்பான் நாட்டின் ரிகென் ஆய்வு மையம் இணைந்து உருவாக்கியுள்ளன.
உலக சந்தையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் ஜப்பான் நாட்டு சூப்பர்கம்ப்யூட்டர் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டர் போட்டியில் முன்னணி வகித்து வந்தன.

மேலும் உலகின் அதிவேக கம்ப்யூட்டரில் ஏஆர்எம் சார்ந்த பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். சூப்பர்கம்ப்யூட்டர்களுக்கு நடத்தப்படும் வழக்கமான சோதனைகளில் புஜாக்கு முன்னணி புள்ளிகளை பெற்று இருக்கிறது.
வழக்கமாக சூப்பர்கம்ப்யூட்டர்கள் குவாண்டம் மெக்கானிக்ஸ், வானிலை நிலவரங்களை கணிப்பது, வான்வெளி ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 இயங்குதளம் 2020 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தின் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு புதிய ஆப் லைப்ரரி மற்றும் புது வடிவமைப்பு கொண்ட விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐஒஎஸ் 14 அப்டேட்டில் பிக்ச்சர் இன் பிக்ச்சர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை திரையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். இதே அம்சம் ஆண்ட்ராய்டில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மேம்படுத்தப்பட்ட சிரி திரை முழுவதையும் ஆக்கிரமிக்காத வகையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த இயங்குதளத்தில் மொழிபெயர்ப்பு சேவையை வழங்கும் டிரான்ஸ்லேட் ஆப் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட் சேவைக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் மேப்ஸ் சேவையில் சைக்ளிங் வசதியும், இவி எனும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவி அம்சமானது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிப்போர், வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் இடங்கள் அடங்கிய வழியை காண்பிக்கிறது. மேலும் ஆப்பிள் கார்பிளே இன்டர்ஃபேஸ் அளவில் மாற்றம் செய்யப்பட்டு, சில புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
வு நிறுவனத்தின் புதிய சினிமா சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.
வு நிறுவனம் இந்தியாவில் வு சினிமா ஸ்மார்ட் டிவி சீரிசில் 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மாடல்களை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு சினிமா டிவி சீரிஸ் இந்தியாவில் அல்ட்ரா ஹெச்டி ரெசல்யூஷனில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், தற்சமயம் இதே சீரிஸ் குறைந்த விலை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வு சினிமா டிவி 32 இன்ச் / 43 இன்ச் சிறப்பம்சங்கள்
- 32 இன்ச் 1366x768 பிக்சல் / 43 இன்ச் 1920x1080 பிக்சல் எல்இடி டிஸ்ப்ளே
- அடாப்டிவ் லுமா கண்ட்ரோல், டிஜிட்டல் MPEG நாய்ஸ் ரிடக்ஷன், பிசி, கேம் மற்றும் கிரிக்கெட் மோட்
- குவாட்கோர் பிராசஸர், டூயல் கோர் ஜிபியு
- 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0, குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்கிரீன் மிரரிங்
- வைபை, ப்ளூடூத், 43 இன்ச் மாடலில் 3x HDMI, 32 இன்ச் மாடலில் 2x HDMI
- 43 இன்ச் மாடலில் 2X யுஎஸ்பி, 32 இன்ச் மாடலில் 1x யுஎஸ்பி
- ஈத்தர்நெட், ஆக்ஸ், ஆப்டிக்கல் ஆடியோ அவுட்
- நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட்
- 40 வாட் சவுண்ட்பார் மற்றும் மாஸ்டர் ஸ்பீக்கர், ட்வீட்டர், டால்பி ஆடியோ, ஆடியோ ஈக்வலைசர்
வு சினிமா ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் மாடலின் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 23 ஆம் தேதி துவங்குகிறது.
ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனமும் இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கி உள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்துறையில் முன்னணி நிறுவனமான அமேசான், இந்தியாவில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. முன்னதாக ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் மதுபான டெலிவரி செய்ய துவங்கியது.
இருநிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனமும் தற்சமயம் மதுபானங்களை விரைவில் ஹோம் டெலிவரி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் பணிகளை அமேசான் துவங்க உள்ளது.

அதிக மக்கள் தொகையில் நாட்டின் நான்காவது பெரிய மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்தில் சுமார் 9 கோடி பேர் வசிக்கின்றனர். மதுபானங்களை விநியோகம் செய்வதற்கான அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து அமேசான் நிறுவனம் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் என்கோ டபிள்யூ11 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது என்கோ டபிள்யூ11 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
புதிய இயர்பட்ஸ் ஒப்போ நிறுவனத்தின் டபிள்யூ31 மாடலின் விலை குறைந்த வெர்ஷன் ஆகும். புதிய இயர்பட்ஸ் குறைந்த அளவு லேடென்சி கொண்டிருக்கும் என்றும் இதன் இணைப்பு மற்ற ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை விட அதிக சீராக இருக்கும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.
ஒப்போ என்கோ டபிள்யூ11 இயர்பட்ஸ் கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி, வால்யூம், மியூசிக் கண்ட்ரோல்களுக்கு டச் கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மற்ற இயர்பட்ஸ் போன்றே காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ள மூன்று இயர்டிப்கள் வெவ்வேறு அளவுகளில் வழங்கப்படுகிறது.
புதிய இயர்பட்ஸ் கேசினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இதன் ஸ்டான்ட்-அலோன் பேக்கப் 5 மணி நேரங்கள் ஆகும். இதனை யுஎஸ்பி டைப்-சி கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும்.

ஒப்போ என்கோ டபிள்யூ11 சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5 மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி
- 8 எம்எம் டிரைவர்
- டச் கண்ட்ரோல் வசதி
- அழைப்புகளுக்கு நாய்ஸ் கேன்சலேஷன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 40 எம்ஏஹெச் பேட்டரி
- யுஎஸ்பி டைப்-சி
இந்தியாவில் புதிய ஒப்போ என்கோ டபிள்யூ11 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய பட்ஸ் கியூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரியல்மி பிராண்டின் பட்ஸ் கியூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் ஜூன் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ரியல்மி தனது வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய இயர்பட்ஸ் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே தினத்தில் ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்3 மற்றும் எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய இயர்பட்ஸ் மாடலை ஃபிரெஞ்சு வடிவமைப்பாளர் ஜோஸ் லெவி வடிவமைத்தார்.

புதிய பட்ஸ் கியூ இயர்பட்ஸ் மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 10 மில்லிமீட்டர் பாஸ் பூஸ்டர் டிரைவர்கள், டிபிபி டைனமிக் பாஸ் உள்ளிட்ட அம்சங்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் உள்ள சென்சார் காதுகளில் இருந்து இயர்பட் எடுக்கப்பட்டதும் ஆடியோவை நிறுத்தி விடுவதோடு, கேசில் இருந்து எடுக்கப்பட்டதும் போனுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.
இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் பட்ஸ் கியூ மாடலில் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் தி ஃபிரேம் 2020 மற்றும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தி ஃபிரேம் 2020 மற்றும் பத்து புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. தி ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கிறது.
இத்துடன் 4கே யுஹெச்டி டிவிக்கள் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய FHD மற்றும் ஹெச்டி ரெடி டிவி மாடல்கள் முறையே 43 இன்ச் மற்றும் 32 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
தி ஃபிரேம் 2020 மாடல்களில் QLED தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிவி பயன்படுத்தாத நேரத்தில், ஆர்ட் மோட் தானாக செயல்பட துவங்கி உலகின் பிரபலமான 1200 வரைபடங்களை டிவியில் ஒளிபரப்பும். இதனால் டிவி இயங்காத போதும், சுவரில் வரைபடம் போன்று இந்த ஸ்மார்ட் டிவி மாறிவிடும்.

4கே யுஹெச்டி டிவி மாடல்களில் பவுண்ட்லெஸ் டிசைன் மற்றும் 4கே பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஃபிரேம் எடிஷன் மேம்பட்ட ஆன்லைன் ஸ்மார்ட் டிவிக்கள் ஆகும். இவற்றில் ஆட்டோ ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பம், யுஎஸ்பி 3.0 மற்றும் சாம்சங் பிக்ஸ்பியுடன் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் கேமிங் அனுபவத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட் டிவிக்களை கொண்டு சீரான கேமிங் அனுபவம் பெற முடியும்.
சாம்சங்கின் புதிய ஃபிரேம் 2020 டிவிக்களை வாங்குவோருக்கு ரூ. 897 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான சாம்சங் ஆர்ட் ஸ்டோர் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தி ஃபிரேம் 2020 மாடல்களின் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 74990, ரூ. 84990 மற்றும் ரூ. 139990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற டிவி மாடல்களான சாம்சங் 4கே யுஹெச்டி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மாடல் விலை ரூ. 36990 என்றும் 65 இன்ச் மாடலின் விலை ரூ. 89990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. FHD மற்றும் HD ரெடி 32 இன்ச் மாடல் விலை ரூ. 14490 என்றும் 43 இன்ச் மாடல் விலை ரூ. 31990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஐஃபால்கன் பிராண்டின் புதிய இன்வெர்ட்டர் ஸ்மார்ட் ஏசி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிசிஎல் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் ஐஃபால்கான் பிராண்டு இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் ஏசி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இகோ-டாப்பிக்கல் இன்வெர்ட்டர் ஏசி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 22999 விலையில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
புதிய இகோ-டாப்பிக்கல் இன்வெர்ட்டர் ஏசி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மற்றும் டிசிஎல் ஹோம் கம்பானியன் ஆப் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களை இயக்க முடியும்.

ஐஃபால்கான் பிராண்டு புதிய ஏசி மாடல்கள் அதிகபட்சம் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் சீராக இயங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய ஏசி மாடல்கள் மிக குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என ஐஃபால்கன் தெரிவித்துள்ளது.
இதுதவிர புதிய ஏசி மாடல்களில் சில்வர் ஐயன் ஃபில்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது கிருமிகளை கொல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆர்32 ரிஃப்ரிஜிரென்ட், டிஜிட்டல் டெம்ப்பரேச்சர் டிஸ்ப்ளே, 100 சதவீதம் காப்பர் டியூபிங் மற்றும் நான்கு வழிகளில் காற்றோட்டத்திற்கு வழி வகுக்கிறது.
சென்ஹெய்சர் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த இயர்போன் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. வரும் வாரங்களில் இந்த இயர்பட்சின் வெள்ளை நிற பதிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய இயர்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய இயர்போன்களின் அம்சங்கள் மற்றும் பேட்டரி லைஃப் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய இயர்போன்கள் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போனில் ஆப்ட்எக்ஸ் ப்ளூடூத் கோடெக் கொண்டிருக்கிறது. இது மேம்பட்ட வயர்லெஸ் ஆடியோ டிரான்ஸ்மிஷனுக்கு வழி வகுக்கும். இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியு வழங்கப்பட்டுள்ளது. புதிய இயர்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

சார்ஜிங் கேஸ் பயன்படுத்தி இயர்போன்களை மூன்று முறை சார்ஜ் செய்ய முடியும் என்பதால், மொத்தம் 28 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன்களில் 7mm டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயர்போன்களை சென்ஹெய்சர் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் மூலம் இயக்க முடியும்.
சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 விலை இந்திய சந்தையில் ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் விலையில் அறிமுகமாகி இருக்கும் புதிய இயர்போனின் பேட்டரி லைஃப் மேம்படுத்தப்பட்டு இருப்பதோடு, இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.






