search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்
    X
    சாம்சங்

    சாம்சங் தி ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் தி ஃபிரேம் 2020 மற்றும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தி ஃபிரேம் 2020 மற்றும் பத்து புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. தி ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கிறது.

    இத்துடன் 4கே யுஹெச்டி டிவிக்கள் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய FHD மற்றும் ஹெச்டி ரெடி டிவி மாடல்கள் முறையே 43 இன்ச் மற்றும் 32 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    தி ஃபிரேம் 2020 மாடல்களில் QLED தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிவி பயன்படுத்தாத நேரத்தில், ஆர்ட் மோட் தானாக செயல்பட துவங்கி உலகின் பிரபலமான 1200 வரைபடங்களை டிவியில் ஒளிபரப்பும். இதனால் டிவி இயங்காத போதும், சுவரில் வரைபடம் போன்று இந்த ஸ்மார்ட் டிவி மாறிவிடும்.

    தி ஃபிரேம் 2020

    4கே யுஹெச்டி டிவி மாடல்களில் பவுண்ட்லெஸ் டிசைன் மற்றும் 4கே பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஃபிரேம் எடிஷன் மேம்பட்ட ஆன்லைன் ஸ்மார்ட் டிவிக்கள் ஆகும். இவற்றில் ஆட்டோ ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பம், யுஎஸ்பி 3.0 மற்றும் சாம்சங் பிக்ஸ்பியுடன் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் கேமிங் அனுபவத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட் டிவிக்களை கொண்டு சீரான கேமிங் அனுபவம் பெற முடியும்.

    சாம்சங்கின் புதிய ஃபிரேம் 2020 டிவிக்களை வாங்குவோருக்கு ரூ. 897 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான சாம்சங் ஆர்ட் ஸ்டோர் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் தி ஃபிரேம் 2020 மாடல்களின் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 74990, ரூ. 84990 மற்றும் ரூ. 139990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மற்ற டிவி மாடல்களான சாம்சங் 4கே யுஹெச்டி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மாடல் விலை ரூ. 36990 என்றும் 65 இன்ச் மாடலின் விலை ரூ. 89990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. FHD மற்றும் HD ரெடி 32 இன்ச் மாடல் விலை ரூ. 14490 என்றும் 43 இன்ச் மாடல் விலை ரூ. 31990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×