search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்"

    • வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    • இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 839 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் சலுகைகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய சலுகை வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்யும் வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் இதனை வலைதளம் மற்றும் இதர செயலிகளில் ரிசார்ஜ் செய்ய முடியாது.

    பலன்கள்:

    வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் மேலும் சில பலன்களும் வழங்கப்படுகிறது.

    அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2ஜிபி வரையிலான டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த சலுகை வி வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அவ்வப்போது சலுகைகளை மாற்றி வருகிறது.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளிலும் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை முழுமையாக நீக்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை நீக்க துவங்கியது. இதில் முதற்கட்டமாக ரூ. 499 மற்றும் ரூ. 601 சலுகைகள் நீக்கப்பட்டன.

    இதை அடுத்து இரு சலுகைகளில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த இரு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சலுகைகளும் ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்தில் காணப்படவில்லை. இவை மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் தளங்களிலும் பட்டியலிடப்படவிவல்லை.

    அந்த வகையில், இரு சலுகைகளும் சத்தமின்றி நீக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 399, ரூ. 419, ரூ. 499, ரூ. 583, ரூ. 601, ரூ. 783, ரூ. 799, ரூ. 1099 மற்றும் ரூ. 1199 விலை சலுகைகளை நீக்கியது. இவை அனைத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) தொடர்ந்து இந்த சேவைகள் அடங்கிய சலுகைகளை வழங்கும் நிலையில், ஜியோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சேவைகள் வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான வியாகாம் 18 கைப்பற்றி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப முடியாது என்பதால், ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.

    ×