search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wireless Earphone"

    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 2 இயர்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Apple #airpods2


    ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனம் இந்த ஆண்டு செப்டம்பரில் புது ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. பின் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற விசேஷ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இரு எதிர்பார்ப்புகளும் பொய்யாகி விட்ட நிலையில், பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியோ ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 2 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் இயர்போன் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேம்படுத்தப்பட்ட புது இயர்போன்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.



    தற்சமயம் ஐபோன் பயன்படுத்துவோரில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானோர் மட்டுமே ஏர்பாட்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் மாடல்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஏர்பாட்ஸ் இயர்போன்களின் விற்பனை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    முன்னதாக மேம்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ் சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கியோ தெரிவித்திருந்தார். எனினும் ஏர்பவர் சார்ஜிங் மேட் சாதனத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏர்பாட்ஸ் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டது. #Apple #airpods2
    ப்ர்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Wireless #earphones



    போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹார்மோனிக்ஸ் 208 என அழைக்கப்படும் புதிய ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்கள் காம்பேக்ட் வடிவமைப்பு மற்றும் காந்த சக்தியில் ஒட்டிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 



    போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 208 சிறப்பம்சங்கள்:

    - ப்ளூடூத் சாதனங்களுடன் இணைய ப்ளூடூத் 4.1 வசதி
    - ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணையும் வசதி
    - அழைப்பு, மியூசிக் கன்ட்ரோல்களுக்கு எளிய பட்டன்கள்
    - காதில் இருந்து எளிதில் கழன்று விடாத படி உருவாக்கப்பட்டுள்ளது
    - காந்த சக்தி கொண்ட ஸ்பீக்கரில் அகௌஸ்டிக் எக்கோ ரெடக்ஷன் தொழில்நுட்பம்
    - அழைப்புகளின் போது பின்னணி சத்தத்தை குறைக்கும் தொழில்நுட்பம்
    - 30 கிராம் எடை
    - 200 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

    போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 208 பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமேசான் வலைத்தளத்தில் ரூ.2,099 விலையில் வாங்கிட முடியும்.
    ×