என் மலர்tooltip icon

    கணினி

    ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    சியோமியின் ரெட்மி பிராண்டு மே மாதத்தில் ரைசன் 4000 சீரிஸ் பிராசஸர் கொண்ட ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் கொண்ட புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப்பை ஜூலை 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக ரெட்மி பிராண்டு அறிவித்து இருக்கிறது.

    ரெட்மிபுக் 16 லேப்டாப் இன்டெல் கோர் ஐ5 வெர்ஷன் மற்றும் இதில் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    ரெட்மிபுக் 16 டீசர்

    சியோமியின் ரெட்மிபுக் 16 மாடலில் 16.1 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் 46Wh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது பேட்டரியை 38 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்கிறது.

    இந்த பேட்டரி லோக்கல் வீடியோ பார்க்கும் போது 12 மணி நேரமும், ஆன்லைனில் வீடியோ பிளேபேக் / வெப் பிரவுசிங் செய்யும் போது 9 மணி நேர பிளேபேக் வழங்கும் என கூறப்படுகிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி பிராண்டின் புதிய பட்ஸ் கியூ வயர்லெஸ் இயர்போன்கள் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பட்ஸ் கியூ ஜூலை 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டது. முதல் விற்பனையில் 25 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.  ஓபன் சேல் விற்பனை தற்காலிகமானதா அல்லது ஸ்டாக் தீரும் வரை விற்பனை செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    ரியல்மி பட்ஸ் கியூ
    புதிய பட்ஸ் கியூ இயர்பட்ஸ் மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 10 மில்லிமீட்டர் பாஸ் பூஸ்டர் டிரைவர்கள், டிபிபி டைனமிக் பாஸ் உள்ளிட்ட அம்சங்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் உள்ள சென்சார் காதுகளில் இருந்து இயர்பட் எடுக்கப்பட்டதும் ஆடியோவை நிறுத்தி விடுவதோடு, கேசில் இருந்து எடுக்கப்பட்டதும் போனுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

    இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் பட்ஸ் கியூ மாடலில் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ் யு1 55 இன்ச் 4கே டிவி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

    புதிய டிவி மாடல்களில் 93% கலர் கமுட், காமா என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்நிறுவனம் ஒன்பிளஸ் சினிமாடிக் டிஸ்ப்ளே என அழைக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.
    ஒன்பிளஸ் டிவி
    ஒன்பிளஸ் யு1 55 இன்ச் சிறப்பம்சங்கள்

    - 55 இன்ச் 3840x2160 4கே எல்இடி பேனல், 93% கலர் கமுட், டால்பி விஷன்
    - காமா என்ஜின்
    - ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
    - பில்ட் இன் கூகுள் அசிஸ்டண்ட்
    - வைபை, ப்ளூடூத் 5,3x ஹெச்டிஎம்ஐ, 2X யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
    - 30 வாட் ஸ்பீக்கர், டிடிஎஸ் ஹெச்டி டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ்

    ஒன்பிளஸ் வை1 32 இன்ச் மற்றும் வை1 43 இன்ச் சிறப்பம்சங்கள்

    - 32 இன்ச் 1366x768 பிக்சல் / 43 இன்ச் 1920x1080 பிக்சல் எல்இடி டிஸ்ப்ளே, 93% கலர் கமுட்
    - காமா என்ஜின்
    - 64-பிட் பிராசஸர்
    - 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
    - கூகுள் அசிஸ்டண்ட் பில்ட்-இன்
    - வைபை, ப்ளூடூத் 5, 2x ஹெச்டிஎம்ஐ, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
    - 20 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

    இந்தியாவில் ஒன்பிளஸ் டிவி 32 இன்ச் வை1 விலை ரூ. 12999, 43 இன்ச் வை1 விலை ரூ. 22999 என்றும் ஒன்பிளஸ் டிவி 55 இன்ச் யு1 விலை ரூ. 49999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 5 ஆம் தேதி துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வரும் சுமார் 24 விற்பனை மையங்களை மீண்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா மற்றும் அமெரிக்காவின் இதர மாநிலங்களில் செயல்பட்டு வரும் விற்பனை மையங்களை மீண்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களின் எண்ணிக்கை 77 ஆக இருக்கிறது.

    அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, ஐடாஹோ, லூசியானா, நெவேடா மற்றும் ஒக்லஹோமா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விற்பனை மையங்கள் மூடப்படுகின்றன. ஏற்கனவே ஃபுளோரிடா, மிசிசிப்பி, டெக்சாஸ் மற்றும் யுட்டா போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆப்பிள் விற்பனை மையங்கள் மூடப்பட்டன.
     ஆப்பிள்
    விற்பனை மையங்களை திறப்பது மற்றும் மூடுவதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து வருகிறது. தற்சமயம் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்பட இதர சோதனைகள் மற்றும் அடிக்கடி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    சில பகுதிகளில் மூடப்பட்டு இருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஆப்பிள் ஸ்டோர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் விற்பனையகங்கள் மூடப்பட்டாலும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 
    அமேசான் பிரைம் வீடியோ விண்டோஸ் 10 தளத்திற்கான செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்பார்ம் என்ற UWP விண்டோஸ் 10 செயலியை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தரவுகளை டவுன்லோட் செய்வது மற்றும் ஆஃப்லைனில் வீடியோக்களை பார்த்து வந்தனர். 

    இந்நிலையில் அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தரவுகளை பிரவுசர்களில் பார்க்க விரும்பாதவர்கள் இந்த செயலியில் பார்த்து ரசிக்கலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் உள்ளதை போன்றே இயங்குகிறது.

    செயலியின் பக்கவாட்டில் பல்வேறு தரவுகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. கீழ்புறத்தில் உள்ள பட்டனை க்ளிக் செய்து அக்கவுண்ட்களை ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். இத்துடன் இதே பகுதியில் செட்டிங் ஆப்ஷனும் இடம்பெற்று இருக்கிறது.
    அமேசான் பிரைம் வீடியோ
    செட்டிங்ஸ் ஆப்ஷனில் வீடியோக்களின் டவுன்லோட் குவாலிட்டி, டவுன்லோட் மொபைல் டேட்டா மூலம் மேற்கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்கள் இடம்பெற்று இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி 1080பிக்சல் தரத்தில் மட்டுமே இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த செயலியின் முக்கிய அம்சமாக ஆஃப்லைன் வியூவிங் அம்சம் இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் பயனர்கள் பிரவுசர் சென்றே பிரைம் வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் வீடியோக்களை சேவ் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்சமயம் இந்த செயலியை கொண்டு ஆஃப்லைன் அம்சத்தை பயன்படுத்த முடியும்.

    அமேசான் பிரைம் வீடியோ UWP விண்டோஸ் 10 செயலியினை பயனர்கள் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
    போல்ட் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
     

    போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ட்ரூஃவைப் ப்ரோ (Tru5ive Pro) என அழைக்கப்படுகிறது. இதில் ஆப்ட்எக்ஸ், ப்ளூடூத் 5.0, ஹை சென்சிட்டிவ் மைக், IPX7 சான்று, அல்ட்ரா லோ லேடென்சி ஆடியோ மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் குவால்காம் நிறுவனத்தின் கியூசிசி3020 சிப்செட் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. மேலும் இதில் ஆப்ட்எக்ஸ் கோடெக் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப் அல்ட்ரா-லோ லேடென்சி மோட் கொண்டுள்ளது. இதனால் கேமிங்கிற்கு சரியாக இயர்பட்ஸ் ஆக இது இருக்கும்.
    போல்ட் ட்ரூஃபைவ் ப்ரோ
    இந்த இயர்போன்களில் மென்மையான சிலிகான் இயர்பட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களில் நியோடிமியம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த பேஸ், மற்றும் பேசிவ் பைலேட்டரல் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது.

    போல்ட் ஆடியோ இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 24 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 1.5 மணி நேரம் ஆகும்.

    இந்தியாவில் போல்ட் ஆடியோ ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் ரூ. 2999 விலையில் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 3 மாடலின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 3 சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி வாட்ச் 3 மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய தலைமுறை கேலக்ஸி வாட்ச் 41எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித டையல் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. 
     கேலக்ஸி வாட்ச்
    இரு மாடல்களிலும் 8 ஜிபி மெமரி, 1 ஜிபி ரேம், ஜிபிஎஸ், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் எம்ஐஎல் எஸ்டிடி 810ஜி தர சான்று பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் 3 பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    இத்துடன் கேலக்ஸி வாட்ச் 3 மாடல் எல்டிஇ மற்றும் எல்டிஇ இல்லாத வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு வேரியண்ட்களும் 41எம்எம் மற்றும் 45எம்எம் டையல் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் இரு வேரியண்ட்களிலும் முறையே 247 எம்ஏஹெச் மற்றும் 340 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவன்ம புதிய டிவி சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மொத்தம் மூன்று மாடல்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் புதிய டிவி மாடல்களின் விலை முறையே ரூ. 1X999 இல் துவங்கி ரூ. 4X999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் டிவி மாடல்கள் இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கப்பட்டது. புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் ஹெச்டி டிவி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி அளவுகளில் வெளியாகும் என்றும் இவற்றின் விலை முறையே ரூ. 1X999 மற்றும் ரூ. 2X999 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
    ஒன்பிளஸ் டிவி
    முன்னதாக இரு ஸ்மார்ட் டிவி மாடல்களும் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆனது. ரூ. 4X999 விலை ஸ்மார்ட் டிவி 55 இன்ச் டிவி என கூறப்படுகிறது. மேலும் இதில் 4கே டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  

    இத்துடன் புதிய ஒன்பிளஸ் டிவி புதுமையான காமா என்ஜின் மற்றும் 93 சதவீத டிசிஐ பி3 கலர் கமுட் கவரேஜ் வழங்குகிறது. மேலும் இந்த டிவிக்கள் 95 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என்றும் இது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விட மெல்லியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் செயலியில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவை ஜூம் மற்றும் இதர வீடியோ கால் சேவைகளுக்கு போட்டியை ஏற்படுத்தி வருகிறது. போட்டியை மேலும் கடுமையாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

    தற்சமயம் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. டீம்ஸ் சேவையில் 7*7 வடிவில் 49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது.
    மைக்ரோசாப்ட் டீம்ஸ்
    இந்த அப்டேட் மூலம் 40-க்கும் அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் மிக எளிமையாக ஆன்லைனில் பாடம் எடுக்க முடியும். மேலும் இந்த அம்சம் கொண்டே ஒரே திரையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உரையாட முடியும்.  மார்ச் மாதத்தில் உலகம் முழுக்க 18 நாடுகளில் சுமார் 25 ஆயிரம் புதிய கல்வியாளர்கள் டீம்ஸ் சேவையை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.  

    துவக்கத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை குறிவைத்து துவங்கப்பட்ட டீம்ஸ் சேவையில் தற்சமயம் ஆஃபிஸ் 365 ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய சேவையாக உருவெடுத்து இருக்கிறது.
    கூகுள் நிறுவனம் தனது கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் செய்வதற்கான வசதியினை வழங்கி உள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் துவங்கியது முதல் க்ரூப் காலிங் வசதி கொண்ட செயலிகள் எண்ணிக்கையும், க்ரூப் கால் செயலிகளின் அம்சங்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது டுயோ, மீட் மற்றும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சேவைகளில் ஒரே சமயத்தில் ஒருவருடன் மட்டுமே வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும்.
     கூகுள் டுயோ வீடியோ கால்
    நெஸ்ட் ஹப் மேக்ஸ் சாதனத்தில் கூகுள் டுயோ கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் முதலில் கூகுள் டுயோ மொபைல் செயலியில் க்ரூப் ஒன்றை உருவாக்கி அதில் நபர்களை சேர்க்க வேண்டும். இதன் ஹப் மேக்சிடம், “Hey Google, make a group call” என கூறினால், சாதனம் தானாக க்ரூப் கால் மேற்கொள்ள துவங்கும்.

    கூகுள் டுயோ க்ரூப் கால் அம்சம் எல்ஜி எக்ஸ்பூம் ஏஐ தின்க் டபிள்யூகே9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஜெபிஎள் லின்க் வியூ மற்றும் லெனோவோ 8 இன்ச் மற்றும் 10 இன்ச் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களிலும் பயன்படுத்த முடியும். 
    அறிமுகமானது முதல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற மித்ரான் செயலி கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக மித்ரான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், அறிமுகமானது முதல் இந்த செயலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

    தற்சமயம் பிளே ஸ்டோரில் அறிமுகமாகி இரண்டே மாதங்களில் இந்த செயலி ஒரு கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரான் செயலி, ஜூன் 5 ஆம் தேதி மீண்டும் சேர்க்கப்பட்டது.
    மித்ரான் ஆப்
    இதன் பின் பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம் 4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது.
    இந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மக்கள் சீன பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதே மித்ரான் செயலி அதிக பிரபலமாக முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மித்ரான் செயலியை உருவாக்கிய குழு பெங்களூருவை சேர்ந்தது என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த செயலிக்கான சோர்ஸ் கோட் பாகிஸ்தான் நாட்டு டெவலப்பரிடம் இருந்து வாங்கப்பட்டது என கூறப்பட்டது. பின் இந்த செயலியினை ஐஐடி ரூர்கி மாணவர் உருவாக்கினார் என தெரியவந்தது. மேலும் இது டிக்டிக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட வடிவம் என கூறப்பட்டது.
    சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சோனி நிறுவனத்தின் WF-XB700 மற்றும் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சோனி WF-XB700 மாடலில் 12எம்எம் டிரைவர்களும் சோனியின் எக்ஸ்டிரா பேஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இது பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் இந்த இயர்பட்ஸ் சீரான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
    சோனி வயர்லெஸ் இயர்பட்ஸ்
    இதில் வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இயர்பட்ஸ் மட்டும் ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

    புதிய WF-SP800N மாடலில் நாய்ஸ் கேன்சலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் IP55தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் எக்ஸ்டிரா பேஸ் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் போன்றே இதுவும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. 

    மேலும் டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி, அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், இன்ட்யூட்டிவ் டச் கண்ட்ரோல் மற்றும் இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க பட்டன்கள், 9 மணி நேர பேட்டரி பேக்கப், சார்ஜிங் கேசுடன் அதிகபட்சம் 26 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    சோனி WF-ZB700 இயர்போன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோனி WF-SP800N இயர்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×