search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மித்ரான் ஆப்
    X
    மித்ரான் ஆப்

    கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி

    அறிமுகமானது முதல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற மித்ரான் செயலி கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக மித்ரான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், அறிமுகமானது முதல் இந்த செயலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

    தற்சமயம் பிளே ஸ்டோரில் அறிமுகமாகி இரண்டே மாதங்களில் இந்த செயலி ஒரு கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரான் செயலி, ஜூன் 5 ஆம் தேதி மீண்டும் சேர்க்கப்பட்டது.
    மித்ரான் ஆப்
    இதன் பின் பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம் 4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது.
    இந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மக்கள் சீன பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதே மித்ரான் செயலி அதிக பிரபலமாக முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மித்ரான் செயலியை உருவாக்கிய குழு பெங்களூருவை சேர்ந்தது என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த செயலிக்கான சோர்ஸ் கோட் பாகிஸ்தான் நாட்டு டெவலப்பரிடம் இருந்து வாங்கப்பட்டது என கூறப்பட்டது. பின் இந்த செயலியினை ஐஐடி ரூர்கி மாணவர் உருவாக்கினார் என தெரியவந்தது. மேலும் இது டிக்டிக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட வடிவம் என கூறப்பட்டது.
    Next Story
    ×