என் மலர்tooltip icon

    கணினி

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ஜியோவின் 5ஜி சேவை பற்றிய அறிவிப்பு வெளியானது.

    முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜியோ 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் இதற்கான சோதனை துவங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இதன் சேவைகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    முதற்கட்டமாக இந்திய சந்தையில் வெளியானதும், வெளிநாடுகளுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.


    சோனி நிறுவனம் மூன்று புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீக்கர்கள்- எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43, எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி23 என அழைக்கப்படுகின்றன. 

    மூன்று ஸ்பீக்கர்களிலும் ஐபி67 தர சான்று, எக்ஸ்ட்ரா பாஸ் சவுண்ட் தொழில்நுட்பம், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, பில்ட் இன் மைக்ரோபோன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
     
    சோனியின் மூன்று புதிய ஸ்பீக்கர் மாடல்களிலும் சோனியின் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இவை அதிக தரமான ஆடியோவினை மிக துல்லியமாக வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் பயணங்களின் போது உற்ற துணையாக இருக்கும். 

    மேலும் இவற்றில் ஷாக்ப்ரூஃப் பில்டு மற்றும் ஐபி67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பில்ட் இன் மைக் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டு அழைப்புகள் மற்றும் உரையாடல்களை மேற்கொள்ள முடியும். 

     சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்

    பார்டி கனெக்ட் அம்சம் கொண்டு 100 ஸ்பீக்கர்களை ஒன்றாக இணைத்து இவற்றை சோனி மியூசிக் சென்ட்டர் ஆப் மூலம் மியூசிக் மற்றும் லைட்னிங் உள்ளிட்டவற்றை மாற்றிமையக்க முடியும். இந்த அம்சம் சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 என இரு மாடல்களில்  வழங்கப்பட்டு உள்ளது. 

    சோனியின் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43, எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி23 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களின் விலை முறையே ரூ. 16990, ரூ. 12990 மற்றும் ரூ. 8990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜூலை 16 ஆம் தேதி சோனி விற்பனை மையங்கள் மற்றும் முன்னி விற்பனையகம் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

    பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 21 ஆம் தேதி ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. 

    புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வையர்கள் இன்றி மிக சுலபமாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

     ஒன்பிளஸ் பட்ஸ்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ப்ளூடூத் ஹெட்செட்டான ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் மாடலை 2017 ஆண்டில் வெளியிட்டது. பின் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் மாடலை நெக்பேண்ட் ஹெட்செட் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒன்பிளஸ் 8 சீரிசுடன் அறிமுகம் செய்தது. 

    ஒன்பிளஸ் நார்டு ஏஆர் அறிமுக நிகழ்வு ஒன்பிளஸ் நார்டு செயலியில் ஜூலை 21 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
    ஹூவாமியின் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 6999 விலையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இதே ஸ்மார்ட்வாட்ச் ரூ. 4999 விலையில் மீண்டும் வெளியிடப்பட்டு உள்ளது.  

    அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், அவுட்-டோர் ரன்னிங், டிரெட்மில், வாக்கிங், அவுட்-டோக் சைக்லிங், இன்-டோர் சைக்லிங், எலிப்டிக்கல் டிரெயினர், எக்சர்சைஸ் என பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கன்டினிவஸ் ஹார்ட் ரேட் மாணிட்டரிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் இல்லை என்பதால் இதை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவோ, ஏற்கவோ முடியாது.

    இதில் GPS + GLONASS வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை கனெக்டிவிட்டி, கைரோஸ்கோப், ஜியோமேக்னெடிக் சென்சார் மற்றும் ஏர் பிரெஷர் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட்

    அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் சிறப்பம்சங்கள்

    - 1.3 இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - ப்ளூடூத் 5.0 LE, GPS+GLONASS
    - ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ். iOS 9.0 இயங்குதள சாதனங்களில் சப்போர்ட் செய்யும்
    - ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
    - ஸ்லீப் மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல், சைலன்ட் அலாரம்
    - ஸ்போர்ட்ஸ் டிராக்கிங்
    - ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார்
    - 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 4999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஹூவாமி பிராண்டின் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூவாமி பிராண்டு அமேஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய லைட் எடிஷன் இந்தியாவில் ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்வாட்ச் டீசர் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

    அமேஸ்ஃபிட் பிப் எஸ் மாடல் விலை இந்தியாவில் ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் மாடல் விலை ரூ. 3499 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

    புதிய பிப் எஸ் லைட் மாடல் தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. இதன் எடை 30 கிராம் ஆகும். இதில் எட்டு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பிப் எஸ் லைட் மாடல் சார்கோல் பிளாக், ஆக்ஸ்ஃபோர்டு புளூ மற்றும் சகுரா பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

    அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட்

    அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் சிறப்பம்சங்கள்

    - 1.28 இன்ச் 176x176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் ரிஃப்ளெக்டிவ் டச் டிஸ்ப்ளே
    - நோட்டிஃபிகேஷன் வசதி, ஆல்வேஸ் ஆன் கலர் டச் டிஸ்ப்ளே
    - 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், டிரை ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்- டிரை ஆக்சிஸ் கைரோ
    - ப்ளூடூத் 5, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இயங்கும் வசதி
    - ஜிபிஎஸ்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் 
    - 200 எம்ஏஹெச் பேட்டரி

    அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஜூலை 29 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக்புக் சீரிஸ் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என தெரிவித்து இருந்தது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது 13.3 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களை புத்தம் புதிய ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களுடன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. 

    மேக்புக் ப்ரோ

    புதிய 13.3 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும் இதனுள் ஏஆர்எம் சார்ந்த ஆப்பிள் சிலிகான் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று மேக்புக் ஏர் மாடலிலும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனம் 14.1 இன்ச் மாடலை அப்டேட் செய்து 13.3 இன்ச் வேரியண்ட்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதில் புதிய மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மினி எல்இடி டிஸ்ப்ளே 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இரண்டு மாடல்களிலும் ஆப்பிள் ஏஆர்எம் சார்ந்த ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நெஸ்ட் ஸ்மர்ட் ஸ்பீக்கர் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் தனது நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    புதிய கூகுள் நெஸ்ட் 2016 ஆம் ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த கூகுள் ஹோம் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது. இதே சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. முந்தைய எஃப்சிசி விவரங்களில் இந்த சாதனம் உருவாகி இருக்கும் நிறங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது.

     கூகுள் நெஸ்ட்

    கூகுள் நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கரில் டூயல் பேண்ட் வைபை, 30 வாட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரில் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை விட பெரிய டிரைவர்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் அக்டோபரில் நடைபெற இருக்கும் பிக்சல் 5 அறிமுக நிகழ்வில் கூகுள் நெஸ்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் டிக்டாக் போன்றே இயங்கும் ரீல்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்கு ரீல்ஸ் எனும் புதிய அம்சத்திற்கான அப்டேட் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீஸ் பதிவு செய்வதை போன்றே ரீல்ஸ் அம்சத்தையும் பயன்படுத்த முடியும். இன்ஸ்டாகிராமில் அனைவரும் ரீல்ஸ்களை பார்க்கவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

    சில தினங்களுக்கு முன் ரீல்ஸ் அம்சம் இந்தியாவில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரீல்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கும் பணிகளை இன்ஸ்டாகிராம் துவங்கி இருக்கிறது.

     இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

    முன்னதாக இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு அதிகபட்சமாக 15 நொடிகளுக்கு ரீல்களை உருவாக்க முடியும்.
    பிளே நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிளே இந்தியாவில் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முதற்கட்டமாக பிளே நிறுவனம் டி44 மற்றும் என்82 என இரண்டு இயர்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. 

    பிளேகோ டி33 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 3.5 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. 

    பிளேகோ டி44

    கேபாசிட்டிவ் டச் பட்டன்களை கொண்டிருக்கும் பிளே பட்ஸ் அம்சங்களை எளிதில் இயக்க வழி செய்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இயர்பட்சை சார்ஜிங் கேசில் இருந்து எடுத்ததும் இவை தானாக சாதனத்துடன் இணைந்து கொள்கிறது.

    தலைசிறந்த ஆடியோ அனுபத்தை வழங்க ஏதுவாக இந்த இயர்பட்ஸ் எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் ரிடக்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்வெட் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இயர்பட்ஸ் உடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்ட சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. 

    இதனால் இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 2 மணி நேரங்களே போதும். இயர்பட்சில் உள்ள பேட்டரி 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதனை 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பயன்படுத்த முடியும்.  
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 289 விலையில் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 289 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ரூ. 289 பிரீபெயிட் சலுகை தவிர ரூ. 79 டாப்-அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ஜீ5 பிரீமியம் சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக ஜீ5 மாதாந்திர சந்தாவுக்கான கட்டணம் ரூ. 99 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    கோப்புப்படம்

    தற்சமயம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 289 சலுகையை தேர்வு செய்யும் போது தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜீ5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு பெற முடியும்.

    மேலும் இந்த சலுகையில் விண்க் மியூசிக் வசதி, ஷா அகாடமயில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 
    இந்திய சந்தையில் குறைந்த விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
     

    ட்ரூக் ஃபிட் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ரூ. 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் அறிமுக சலுகை பெயரில் அமேசானில் ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. 

    உண்மையில் இதன் விலை ரூ. 4999 என குறிப்பிடப்பட்டு ரூ. 999 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக ட்ரூக் ஃபிட் ப்ரோ இருக்கிறது.

    ட்ரூக் ஃபிட் ப்ரோ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ட்ரூக் ஃபிட் ப்ரோ மாடலில் ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், 24 மணி நேர பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மூலம் இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

    புதிய ட்ரூக் ஃபிட் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் 500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. மேலும் இதன் இயர்போன்கள் 13 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்க துவங்கி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை மையத்தை வாட்ஸ்அப் செயலியில் வழங்க துவங்கி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு சாம்சங் சாதனங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு வீட்டில் இருந்தபடி விளக்கம் பெற முடியும்.

    வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்வோருக்கு ரிமோட் சப்போர்ட், லைவ் சாட், சாம்சங் வலைதளம் அல்லது யூடியூபில் உள்ள விளக்க வீடியோக்கள் கொண்டு விளக்கம் மற்றும் சேவை மைய உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் கேர்

    சாம்சங் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் வாட்ஸ்அப் சப்போர்ட் நம்பர் – 1800-5-7267864 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

    பின் எந்த சாம்சங் சாதனம் பற்றிய கேள்விகள், சர்வீஸ் சென்டர் முதவரி, சரி செய்ய கொடுத்த சாதனத்தின் நிலை, புதிய சலுகைகள் மற்றும் புதிய சாம்சங் சாதனங்களுக்கான டெமோ மற்றும் இன்ஸ்டாலேஷன் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    ×