என் மலர்

  நீங்கள் தேடியது "gadgets"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவித ஹெட்போன்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. காப்புரிமையில் புது ஹெட்போனின் சில விவரங்களும் தெரியவந்துள்ளது. #Apple  ஆப்பிள் நிறுவனம் புதுவித ஓவர்-தி-இயர் ஹெட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆப்பிள் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையின் படி அந்நிறுவனத்தின் புதுவித ஹெட்போன்கள் தானாக வலது மற்றும் இடதுபுற காதுகளை டிடெக்ட் செய்து கொள்ளும். இந்த ஹெட்போன்கள் எதிர்ப்புறமாகத் திருப்பத் தக்கக் கூடியதாகவும், காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கும்.

  மேலும் ஹெட்போன்களில் ஐந்து மைக்ரோபோன்கள் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஹெட்போன்களை காதில் வைப்பதற்கு ஏற்ப மைக்ரோபோன்கள் தானாக ஒரு மைக் மூலம் குரல் அங்கீகாரம் மற்றவை பின்னணி இசையை கேட்காதபடி செய்யும்.  காப்புரிமையின் படி இந்த தொழில்நுட்பம் எந்த இயர் கப் வலது காதில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை குரல் அங்கீகார வசதியை எனேபிள் செய்து கொள்ளும். எனினும், ஆப்பிள் நிறுவனம் திருப்பத் தக்கக் கூடிய ஹெட்போன்களை சரியாக வலது மற்றும் இடதுபுற ஸ்டீரியோ சிக்னல்களை வழங்க பயன்படுத்திக் கொள்ளும்.

  புதிய ஹெட்போன்கள் தற்சமயம் காப்புரிமைகளில் இருப்பதால், இவற்றின் உற்பத்தி மற்றும் வெளியீடு குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி நிறுவனத்தின் ஐந்து புதிய சாதனங்கள் செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi #SmarterLiving  சியோமி நிறுவனத்தின் புதிய சாதனங்கள் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி Mi ஏர் பியூரிஃபையர், டிவி, Mi பேன்ட் 3 மற்றும் பாதுகாப்பு கேமரா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

  முன்னதாக ஸ்மார்ட்டெர் லிவிங் பிரிவில் ஐந்து சாதனங்கள் அறிமுகம் செய்வதாக டீசர் புகைப்படத்தை வெளியிட்டது. சியோமி வெளியிட இருக்கும் சாதனங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பவர்களுக்கு வியப்பூட்டும் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து பேருக்கு எஃப்-கோடுகளும் வழங்கப்பட இருக்கிறது.  சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் இதயம் படம் இடம்பெற்றிருப்பதால் மே மாதம் சியோமி அறிமுகம் செய்த Mi பேன்ட் 3 இம்முறை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டீசரில் உள்ள பாப்கான் படம், புதிய Mi டிவி மாடலையும், Mi ஏர் பியூரிஃபையர் மேக்ஸ் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

  இறுதியில் கண் போன்ற படம் டீசரில் இடம்பெற்றிருப்பதால், கேமரா மற்றும் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி சாதனங்கள் அறிமுகமாக இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கும் நிலையில், சாதனங்கள் குறித்த மேலும் சில விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 கேட்ஜெட்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இவ்விழாவில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent
  ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. 2018 ஐபோன் மாடல்களின் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

  ஐபோன் XS

  ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய ஐபோன் மாடலாக ஐபோன் XS இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐபோன் XS மேக்ஸ்

  ஐபோன் XS மேக்ஸ் மாடல் இந்த ஆண்டு வெளியாக பெரிய ஐபோன் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 9 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் இதில் 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.  ஐபோன் 9

  2018 ஐபோன் மாடல்களில் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், புதிய நிறங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

  செப்டம்பர் 12 நிகழ்வில் ஆப்பிள் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி வட்ட வடிவம் கொண்ட பெரிய டையல், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக ரெசல்யூஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கின்றன.  #AppleEvent
  ×