என் மலர்tooltip icon

    கணினி

    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


    ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ வாட்ச் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ஒப்போ வாட்ச் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வியர் ஒஎஸ் கொண்ட ஒப்போ வாட்ச் மாடல் ஜூலை 31 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து ஒப்போ வெளியிட்ட டீசரில் உள்ள வாட்ச் பார்க்க சீன சந்தையில் வெளியான மாடல் போன்றே காட்சி அளிக்கிறது.

    ஒப்போ வாட்ச் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 41எம்எம் மற்றும் 46எம்எம் என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 1.6 மற்றும் 1.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

     ஒப்போ வாட்ச்

    புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எடிஷனும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2500 சிப்செட் கொண்டு இயங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுள் வியர் ஒஎஸ் இயங்குதளம் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒப்போ வாட்ச் மாடலில் வியர் ஒஎஸ் 4100 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகமாக வழங்கும் திறன் கொண்டது ஆகும். ஒப்போ வாட்ச் மாடலில் வாட்ச் வூக் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது பேட்டரியை 1 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 17 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
    ஸ்னோக்கர் பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்னோக்கர் பிராண்டு இந்திய சந்தையில் ஐராக்கர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய இயர்பட்ஸ் 3 பாயிண்ட் கான்டாக்ட் மூலம் செக்யூர் ஃபிட் அனுபவம் வழங்குகிறது. இத்துடன் 2x ஆழமான பேஸ், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் ஐபிஎக்ஸ்4 சான்று, சிங்கிள், டபுள் மற்றும் ட்ரிபில் க்ளிக் கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் இவை 4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 20 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும். 

     ஸ்னோக்கர் ஐராக்கர்

    ஸ்னோக்கர் ஐராக்கர் சிறப்பம்சங்கள்

    - ப்ளூடூத் 5
    - க்ளிக் கண்ட்ரோல்கள்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
    - 4 மணி நேர ஸ்டான்ட் அலோன் பிளேபேக்
    - 300 எம்ஏஹெச் பேட்டரி

    ஸ்னோக்கர் ராக்கர் இயர்பட்ஸ் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி துவங்குகிறது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட்டில் ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. பிரைவசி செட்டிங் பகுதியில் மியூட்டெட் ஸ்டோரீஸ், பிளாக்டு பீப்பிள் போன்ற அம்சங்கள் காணப்படுகிறது. 

    நேட்டிவ் ஆப் லாக் அம்சம் பெரும்பாலான செயலிகளில் பொதுவாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப் லாக் மூலம் பயனர்கள் தங்களது மொபைலில் மற்றவர்கள் மெசஞ்சர் செயலியை பார்க்க விடாமல் செய்ய முடியும்.

    ஃபேஸ்புக் மெசஞ்சர்

    இத்துடன் பல்வேறு பிரைவசி செட்டிங் அம்சங்களையும் ஒரே மெனுவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மெனுவில் செயலியை இயக்கும் பல்வேறு கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டு உள்ளது. 

    மெசஞ்சர் செயலியில் ஆப் லாக் அம்சம் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் இது வழங்கப்பட உள்ளது.
    அமெரிக்காவில் இவர்கள் இந்த சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கும் விதிமுறையை அமெரிக்க செனட் சபையில் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி பரிந்துரைத்தார். இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. 

     டிக்டாக்

    அமெரிக்காவில் டிக்டாக் அதிக பிரபலமாக இருப்பதால், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தங்களது தகவல்கள் பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் தெரிவித்து உள்ளனர். 

    முன்னதாக பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 336-71 என்ற அடிப்படையில் பாதுகாப்பு நிதியின் கீழ் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஒப்புதலை தொடர்ந்து விரைவில் டிக்டாக் தடை அமெரிக்காவில் சட்டமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 13.4 எம்எம் டைனமிக் டிரைவர்கள், பாஸ் பூஸ்ட் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்சில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்சில் மூன்று ஆக்டிவ் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு  இருக்கின்றன. இவை அழைப்புகளின் போது ஆம்பியன்ட் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. இதில் உள்ள லோ லேடென்சி பேரிங் தொழில்நுட்பம் கொண்டு இயர்பட்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் மிக எளிதில் இணைந்து கொள்ளும்.

     ஒன்பிளஸ் பட்ஸ்

    ஒன்பிளஸ் பட்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 13.4 எம்எம் டைனமிக் டிரைவர்கள், டால்மி அட்மோஸ், டிராக் ஆடியோ டியூனர்
    - ப்ளூடூத் 5.0
    - லோ லேடென்சி ஃபேண்டிக் மோட்
    - இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி
    - ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
    - 35 எம்ஏஹெச் பேட்டரி
    - 420 எம்ஏஹெச் சார்ஜிங் கேஸ்
    - ராப் சார்ஜ்

    ஒன்பிளஸ் பட்ஸ் வைட், கிரே மற்றும் நார்டு புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் அமேசான், ஒன்பிளஸ், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    அந்த பிரச்சனை இருப்பது உண்மை தான் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 தளத்தில் பெரும் குறைபாடு இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் கனெக்டிவிட்டி கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. விண்டோஸ் 10 பயன்படுத்தும் பலர் இந்த பிரச்சனை குறித்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்கள் நெட்வொர்க் செட்டிங்ஸ் பகுதியில் நோ இண்டர்நெட் என்ற தகவலை பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கோளாறு விண்டோஸ் 10 வெர்ஷன் 2004 அப்டேட்டில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஐகான் நோ இண்டர்நெட் என காண்பித்தாலும், வெப் பரிவுசர்களில் இணையம் பயன்படுத்த முடிவதாக சிலர் தெரிவித்தனர்.

     விண்டோஸ் 10

    மைக்ரோசாப்ட் இந்த கோளாறு இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இதனை சரி செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. விரைவில் இந்த கோளாறை சரி செய்யும் அப்டேட்டை மைக்ரோசாப்ட் வெளியிடும் என தெரிகிறது.

    விண்டோஸ் 10 தளத்தில் பல்வேறு கோளாறுகள் இருந்த போதும், உலகம் முழுக்க இதனை பல கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
    அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் இந்திய விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஹூவாமி பிராண்டு தனது அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் அமேஸ்ஃபிட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்வாட்ச் டீசர் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. ஹூவாமி பிராண்டின் அமேஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் இதன் லைட் வெர்ஷன் ஆகும்.

     அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட்

    அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் சிறப்பம்சங்கள்

    - 1.28 இன்ச் 176x176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் ரிஃப்ளெக்டிவ் டச் டிஸ்ப்ளே
    - நோட்டிஃபிகேஷன் வசதி, ஆல்வேஸ் ஆன் கலர் டச் டிஸ்ப்ளே
    - 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், டிரை ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்- டிரை ஆக்சிஸ் கைரோ
    - ப்ளூடூத் 5, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இயங்கும் வசதி
    - ஜிபிஎஸ்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் 
    - 200 எம்ஏஹெச் பேட்டரி
     
    புதிய பிப் எஸ் லைட் மாடல் தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. இதன் எடை 30 கிராம் ஆகும். இதில் எட்டு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பிப் எஸ் லைட் மாடல் சார்கோல் பிளாக், ஆக்ஸ்ஃபோர்டு புளூ மற்றும் சகுரா பின்க் நிறங்களில் கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை ஐபேட் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ஏர் மாடலின் புதிய வெர்ஷன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஐபேட் ஏர் வெர்ஷன் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியாளர்களை புதுவித ஐபேட் ஏர் மாடலை விரைவில் உற்பத்தி செய்து தர கோரி இருப்பதாக தெரிகிறது. 

    புதிய ஐபேட் ஏர் மாடல் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிநவீன தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது ஐபோன் எஸ்இ 2020 மாடலில் பின்பற்றப்பட்டதை போன்ற யுக்தியாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    ஐபேட்

    2020 ஐபேட் ஏர் மாடல் 10.8 இன்ச் ஸ்கிரீன், ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் விலை 500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 37500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    முந்தைய தகவல்களின் படி ஐபேட் ஏர் 2020 மாடலில் லைட்னிங் போர்ட் நீக்கப்பட்டு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த டேப்லெட் மாடலில் டச்ஐடி கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுமா அல்லது முக அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.   

    புதிய ஐபேட் ஏர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலுடன் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படும் என தெரிகிறது. 

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 14 இயங்குதளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஜனவரி 2020 வாக்கில் யுனிகோட் எமோஜி 13.0 வெளியிட்டு பல்வேறு புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்தது. இவற்றை நிறுவனங்கள் தங்களது தளங்களில் அறிமுகம் செய்து செயலி மற்றும் இயங்குதளங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

    பொதுவாக ஒவ்வொரு இயங்குதளம் மற்றும் பிளாட்ஃபார்ம்களுக்கு ஏற்ப டெவலப்பர்கள் எமோஜிக்களை மாற்றியமைத்து வழங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 14 இயங்குதளத்தில் புதிதாக 16 எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    மெமோஜி

    ஆப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை 14.1 அல்லது 14.2 வெர்ஷன்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் தனது ஐஒஎஸ் 13.2, ஐஒஎஸே 12.1 மற்றும் ஐஒஎஸ் 11.1 வெர்ஷன்களில் புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்து இருந்தது.  

    புதிய எமோஜிக்கள் பட்டியலில் கொரோனாவைரஸ் பாதிப்பு சார்ந்து எந்த எமோஜியும் இடம்பெறவில்லை. வழக்கமாக புதிய எமோஜிக்களை சமர்பித்து அவற்றை போன்களில் சேர்ப்பதற்கு யுனிகோட் அனுமதி வழங்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.  

    எனினும், ஆப்பிள் நிறுவனம் மெமோஜியில் புதிதாக ஹெட்வியர் மற்றும் ஃபேஸ் மாஸ்க் உள்ளிட்ட கஸ்டமைசேஷன் வழங்குகிறது. இதனை ஐஒஎஸ் மெசேஜிங்கின் போது ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும்.
    சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேண்ட் 4சி பிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகம் செய்தது. இது ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் ஆகும்.

    புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடலில் 1.08 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட கலர் டச் டிஸ்ப்ளே, பில்ட் இன் சார்சிங் போர்ட், அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     எம்ஐ பேண்ட் 4சி

    சியோமி எம்ஐ பேண்ட் 4சி சிறப்பம்சங்கள்

    - 1.08 இன்ச் 128x220 பிக்சல் எல்சிடி கலர் டிஸ்ப்ளே
    - ப்ளூடூத் 5.0
    - நேரம், இதய துடிப்பு விவரங்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது
    - 24/7 இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி
    - உறக்கத்தை டிராக் செய்யும் வசதி
    - செடன்ட்டரி ரிமைன்டர்
    - 5 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - 13 கிராம் மிக குறைந்த எடை
    - 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 130 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி எம்ஐ பேண்ட் 4சி மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பிளாக், ஆரஞ்சு, கிரீன் மற்றும் புளூ நிற ஸ்டிராப்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை 16.7 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1260 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹானர் பிராண்டின் புதிய மேஜிக்புக் 14, மேஜிக்புக் 15 மற்றும் மேஜிக்புக் ப்ரோ லேப்டாப்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹூவாயின் ஹானர் மேஜிக்புக் 14, 15 மற்றும் ப்ரோ மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லேப்டாப்களில் ரைசன் 4000 சீரிஸ் சிபியுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேஜிக்புக் ப்ரோ ரைசன் எடிஷன் மாடலில் டூயல் ஃபேன் மற்றும் டூயல் ஹீட் பைப் ஷார்க் ஃபின் ஃபேன் வழங்கப்பட்டுள்ளது. மேஜிக்புக் 14 மாடலில் முழுமையான மெட்டல் வடிவமைப்பு, சீ வேவ் வடிவத்தில் மிக குறைந்த எடை கொண்டிருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சார் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

     ஹானர் மேஜிக்புக்

    ஹானர் மேஜிக்புக் 12 / 15 / ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 14 இன்ச் / 15.6 இன்ச் / 16.1 இன்ச் 1920x1080 பிக்சல் 16:9 டிஸ்ப்ளே
    - 3.0GHz ஏஎம்டி ரைசன் 7 4800H மொபைல் பிராசஸர்
    - ரேடியான் கிராஃபிக்ஸ்
    - 16 ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம்
    - 512 ஜிபி எஸ்எஸ்டி
    - விண்டோஸ் 10
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் பட்டன்
    - பாப்-அப் வெப்கேமரா
    - மேஜிக்லிண்க் 2.0
    - வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0
    - யுஎஸ்பி டைப்-சி x 1, ஹெச்டிஎம்ஐ x 1, யுஎஸ்பி3.0 (டைப் ஏ) x 1, யுஎஸ்பி2.0 (டைப் ஏ) x 1
    - மேஜிக்புக் 14 மற்றும் ப்ரோ – 56Wh பேட்டரி
    - மேஜிக்புக் 15 – 42Wh பேட்டரி

    புதிய ஹானர் மேஜிக்புக் லேப்டாப் சீரிஸ் துவக்க மாடல் விலை 3999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 43010 என துவங்குகிறது. டாப் எண்ட் ஹானர் மேஜிக்புக் ப்ரோ மாடல் விலை 5199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 55915 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனம் 32 இன்ச் எம்ஐ கர்வ்டு அல்ட்ராவைடு கேமிங் மாணிட்டரை அறிமுகம் செய்து உள்ளது.

    சியோமி நிறுவனம் எம்ஐ கர்வ்டு கேமிங் மாணிட்டர் 34 இன்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கேமிங் மாணிட்டர் அதிக ரிஃப்ரெஷ் ரேட், WQHD வளைந்த பேனல், அதிக கலர் அக்யூரசி, வேரியபிள் ரிஃப்ரெஷ் ரேட் தொழில்நுட்பம், லோ புளூ லைட் மோட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    எம்ஐ கர்வ்டு கேமிங் மாணிட்டர் 34 இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளே 3440x1440, 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த மாணிட்டரில் ஏஎம்டி ஃபிரீசின்க் பிரீமியம் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கண்களுக்கு அதிக சோர்வு ஏற்படாமல் தடுக்கும்.

     சியோமி கேமிங் மாணிட்டர்

    புதிய சியோமி மாணிட்டர் 121 சதவீத எஸ்ஆர்ஜிபி கலர் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இதனால் போட்டோ எடிட்டிங் போன்ற பணிகளை மேற்கொள்வது சிறப்பான அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிஸ்ப்ளே கொண்டு மல்டி-டாஸ்கிங் மற்றும் ஸ்டாக்ஸ் போன்ற செயலிகளை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும். 

    இந்த மாணிட்டருடன் வழங்கப்படும் ஸ்டான்ட் உயரமாகவும், டில்ட், ரோட்டேட் போன்ற வகையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இதனை சுவரில் மாட்டிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. சியோமி எம்ஐ கர்வ்டு கேமிங் மாணிட்டர் 34 இன்ச் மாடல் விலை 399 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 34221 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ×