என் மலர்
கணினி
அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய பவர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூவாமியின் அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ் இந்தியாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய பவர்பட்ஸ் இயர்பட்ஸ் முன்னதாக நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய இயர்பட்ஸ் மாடலில் பில்ட் இன் இதய துடிப்பு சென்சார் கொண்டிருக்கிறது. இது உடற்பயிற்சிகளை செய்யும் போது, உடலின் இதய துடிப்பை டிராக் செய்யும். ஐபி55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் கூடுதலாக 16 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ் சிறப்பம்சங்கள்
- மேக்னெடிக் ஸ்போர்ட்ஸ் இயர் ஹூக்
- இதய துடிப்பு சென்சார்
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 9எம்எம் டிரைவர்கள்
- டச் கண்ட்ரோல் வசதி
- என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
- 55 எம்ஏஹெச் பேட்டரி
- சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி
அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ் டைனமிக் பிளாக் மற்றும் ஆக்டிவ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி பட்ஸ் 3 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு அடுத்த தலைமுறை ரியல்மி பட்ஸ் 3 மாடலினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
புதிய ரியல்மி பட்ஸ் 3 மாடல் மட்டுமின்றி ரியல்மி உருவாக்கி வரும் ஏஐஒடி ரக சாதனங்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக ரியல்மி பட்ஸ் 2 மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இதன் மேம்பட்ட வெர்ஷன் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ரியல்மி பட்ஸ் 3 வித்தியாசமான முறையில் வெளியிடப்படும் என மாதவ் சேத் தெரிவித்தார். மேலும் இது புதுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயர்பட்ஸ் மட்டுமின்றி ரியல்மி பிராண்டு உயர் ரக ஸ்மார்ட் வாட்ச் மாடலையும் உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறது. இத்துடன் ரியல்மி பட்ஸ் சீரிஸ் மாடல்களில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்க இருப்பதாகவும் இது சந்தையில் தலைசிறந்த தொழில்நுட்பமாக இருக்கும் என தெரிவித்தார்.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒப்போ வாட்ச் மாடலினை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒப்போ வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இது வியர் ஒஎஸ் கொண்ட ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.
ஒப்போ வாட்ச் 46 எம்எம் வெர்ஷன் 1.91 இன்ச் 3டி ஃபிளெக்சிபில் AMOLED 326 பிபிஐ ரெட்டினா டிஸ்ப்ளே, 50 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் 41 எம்எம் வெர்ஷனில் 1.6 இன்ச் 301 பிபிஐ AMOLED ஸ்கிரீன், 30 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை ஸ்னாப்டிராகன் 3100 மற்றும் அப்பல்லோ 3 டூயல் பிராசஸர்கள் மற்றும் வைபை வசதி வழங்கப்பட்டுள்ளன. எனினும் சீன வேரியண்ட்களை போன்று இதில் இ-சிம் வசதி வழங்கப்படவில்லை.

ஒப்போ வாட்ச் சிறப்பம்சங்கள்
- 1.6 இன்ச் 320x360 பிக்சல் (41எம்எம்) AMOLED ஸ்கிரீன்
- 1.91 இன்ச் 402x476 பிக்சல் (46எம்எம்) வளைந்த AMOLED ஸ்கிரீன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 மற்றும் ஆம்பிக் அப்பல்லோ 3 பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜியோமேக்னெடிக் சென்சார்
- பாரோமெட்ரிக் பிரெஷர் சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார்
- வியர் ஒஎஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM 46எம்எம் / 3ATM 41எம்எம்)
- வைபை, ப்ளூடூத் 4.2, பில்ட்-இன் ஜிபிஎஸ்
- 41எம்எம் மாடலில் 300 எம்ஏஹெச் பேட்டரி
- 46எம்எம் மாடலில் 430 எம்ஏஹெச் பேட்டரி
ஒப்போ வாட்ச் 41 எம்எம் மாடல் எலிகன்ட் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் ஃபாக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14990 என்றும் 46 எம்எம் மாடல் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் 65 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து இந்தியாவில் மூன்றாவது நோக்கியா பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடலினை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 65 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலில் மெல்லிய பெசல்கள், இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவம் வழங்குகிறது. இதில் இன்டெலிஜன்ட் டிம்மிங், வைடு கலர் கமுட் மற்றும் டால்பி விஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டிவியின் கீழ் பில்ட் இன் 24 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஆடியோ ஆப்டிமைசேஷன் வசதி கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 9 வசதி, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட் இன் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

நோக்கியா 65 இன்ச் ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்
- 65 இன்ச் 3840x2160 பிக்சல் டிஸ்ப்ளே
- டால்பி விஷன், இன்டெலிஜன்ட் டிம்மிங்
- 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
- மாலி 450 எம்பி4 ஜிபியு
- 2.25 ஜிபி ரேம்
- 16 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0
- வைபை, ப்ளூடூத் 5
- 3xஹெச்டிஎம்ஐ, 1xயுஎஸ்பி 2.0, 1x யுஎஸ்பி 3.0
- ஈத்தர்நெட்
- 24 வாட் ஸ்பீக்கர்கள்
புதிய 65 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி விலை ரூ. 64999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் லைவ் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்போன், கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடலினை கேலக்ஸி அன்பேக்டு 2020 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே புதிய இயர்போன்களின் பல்வேறு ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தன. தற்சமயம் இந்த இயர்பட்ஸ் புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
புதிய இயர்பட்ஸ் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் சதுரங்க வடிவம் கொண்ட சார்ஜிங் கேஸ் இருக்கிறது. இது பிளாக் நிற வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை ஒவ்வொ இயர்பட்டிலும் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றில் 12 எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சிலிகான் இயர் டிப்கள் இருக்காது என சமீபத்திய ரென்டர்களில் தெரியவந்துள்ளது.
புதிய சாம்சங் இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 முதல் 5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது பேக்கப் நேரம் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் துவக்க விலை 169 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12,600 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் உடன் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி நிறுவனத்தின் புதிய ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சோனி இந்தியா நிறுவனம் ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சவுண்ட்பார் டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ் எக்ஸ் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய 3.1 சேனல் சவுண்ட்பார் வயர்லெஸ் சப்வூபர் ஆழமான பேஸ் கொண்டிருக்கிறது. இந்த சவுண்ட்பாரை மிக எளிமையாக டிவியுடன் ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி/ஏஆர்சி உள்ளிட்ட ஆப்ஷன்கள் மூலம் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சவுண்ட் மோட்களுடன் கிடைக்கிறது.

இந்த அம்சங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். புதிய சவுண்ட்பார் 400 வாட் பவர் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது 7.1.2 சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது தியேட்டர்களில் உள்ளது போன்ற அனுபவத்தை வழங்கும்.
சவுண்ட்பாரில் உள்ள சோனியின் டிஜிட்டல் சிக்னல் பிராசஸிங் தொழில்நுட்பம் மற்றும் வெர்டிக்கல் சவுண்ட் என்ஜின் முன்புறம் இருக்கும் மூன்று ஸ்பீக்கர்களில் இருந்து வெர்டிக்கல் ஆடியோ வழங்குகிறது.
இந்தியாவில் சோனி ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் விலை ரூ. 39990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சோனி விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ டிவி ஸ்டிக் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ டிவி ஸ்டிக் சாதனத்திற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. புதிய சியோமி டிவி ஸ்டிக் இந்தியாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக இதே டிவி ஸ்டிக் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய எம்ஐ டிவி ஸ்டிக் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதி கொண்டுள்ளது. இதை கொண்டு தரவுகளை 1080 பிக்சல் ரெசல்யூஷனில் ஸ்டிரீம் செய்ய முடியும். இத்துடன் எம்ஐ வாய்ஸ் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ ஷார்ட்கட், அசிஸ்டண்ட் வசதியுடன் வழங்கப்படுகிறது.
புதிய எம்ஐ டிவி ஸ்டிக் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஸ்பாடிஃபை மற்றும் பல்வேறு செயலிகள், கேம்களுக்கான வசதியை வழங்குகிறது. இதில் கூகுள் பிளே வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

எம்ஐ டிவி ஸ்டிக் சிறப்பம்சங்கள்
- ஹெச்டிஎம்ஐ மூலம் 1080 பிக்சல் வீடியோ வசதி
- குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
- ஏர்எம் மாலி 450 ஜிபியு
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 9, குரோம்காஸ்ட்
- கூகுள் அசிஸ்டண்ட், ஹாட்கீ, வாய்ஸ் ரிமோட்
- நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ ஹாட் கீ
- கூகுள் பிளே ஸ்டோர்
- வைபை, ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி பவர்போர்ட்
- டால்பி, டிடிஎஸ் ஆடியோ வசதி
புதிய சியோமி எம்ஐ டிவி ஸ்டிக் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
ஆர்ஹெச்ஏ பிராண்டின் புதிய ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஹெட்போன் நிறுவனமான ஆர்ஹெச்ஏ இந்தியாவில் ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இவற்றில் 44 மணி நேர பேட்டரி லைஃப், ப்ளூடூத் 5.0, ஐபி55 சான்று, கேபாசிட்டி டச் கண்ட்ரோல்கள், டூயல் மைக்ரோபோன்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 6எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி வழங்குகிறது. ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் மற்ற சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்வதோடு சீரான இணைப்பை வழங்குகிறது.

இதில் உள்ள டூயல் மைக்ரோபோன்கள் அழைப்புகளுக்கு ஏற்ற வகையில் ஆப்டிமைஸ் செய்யப்படுகிறது. மேலும் இதில் நாய்ஸ் ரெட்யூசிங் மைக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஐபி55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
இதன் மியூசிக் பிளேபேக், வால்யூம் போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்றும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 35 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என ஆர்ஹெச்ஏ தெரிவித்து இருக்கிறது.
ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் கார்பன் பிளாக் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 12999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா பயனர்கள் விசேஷ சலுகைகளை தேர்வு செய்யும் போது வழக்கத்தை விட அதிக டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது. இலவச டேட்டா பற்றிய தகவல் பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா வழங்கியது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு இலவச டேட்டா வழங்கியது.
ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஏர்டெல் ரூ. 48 ரீசார்ஜ் சலுகையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனினும், சிலருக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுந்தகவல் மூலம் தெரிவித்து இருக்கிறது. மேலும் 1 ஜிபி இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டது என்றும் இது சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் குளோனாக செயல்பட்டது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் பட்டியல் விரைவில் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த செயலிகள் ஜூன் 29 ஆம் தேதி தடை செய்யப்பட்ட செயலிகளின் லைட் வெர்ஷன் அல்லது அதற்கான மாற்றானவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. தற்சமயம் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. 47 சீன செயலிகள் மட்டுமின்றி 250 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த செயலிகள் பட்டியலில் அலிபாபா குழுமத்தின் பப்ஜி மொபைல் இடம்பெற்று இருக்கிறது. பப்ஜி மொபைல் கேம் தடை பரிசீலனை விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் இந்திய பயனர்களின் விவரங்களை அந்நாட்டு அரசாங்கத்துடன் பகிர்ந்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
நாய்ஸ் பிராண்டின் புதிய கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் இந்தியாவில் புதிதாக கலர்ஃபிட் நேவ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேசான் பிரைம் டே விற்பனையின் முதல் நாளான ஆகஸ்ட் 6இல் அறிமுகமாக இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஜிபிஎஸ் வசதி கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக இருக்கிறது. டீசர் விவரங்களின் படி புதிய கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் பில்ட் இன் ஜிபிஎஸ், அதிக ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, கஸ்டமைஸ் செய்யக்கூடிய கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதில் மொத்தம் பத்து ஸ்போர்ட்ஸ் மோட்களஅ வழங்கப்பட்டுள்ளன. இவை உடற்பயிற்சிகளை மிக துல்லியமாக டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன. இதன் வடிவமைப்பு பார்க்க கலர்ஃபிட் ப்ரோ 2 போன்றே காட்சியளிக்கிறது. இது சதுரங்க வடிவம் கொண்ட டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இதில் இரண்டாவது பட்டன் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் 1.4 இன்ச் 320x320 பிக்சல் கலர் எல்சிடி ஃபுல் டச் டிஸ்ப்ளே, 24 மணி நேர இதய துடிப்பு மற்றும் உறக்கத்தை டிராக் செய்யும் வசதி, ஐடி, டெக்ஸ்ட், சமூக வலைதள நோட்டிஃபிகேஷன், மியூசிக் பிளேபேக் கண்டோரல், ஐபி68 தர வாட்டர், டஸ்ட் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் மாடலின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சோனி WF-1000XM3 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோனி நிறுவனத்தின் புதிய WF-1000XM3 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக சோனி WF-1000XM3 இயர்பட்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் பயன்படுத்தாத போது இந்த இயர்பட்ஸ் 32 மணி நேர பேக்கப் வழங்கும்.
இத்துடன் சோனி WF-1000XM3 மாடலில் அமேசான் அலெக்சா, ஆப்பிள் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் சோனி WF-1000XM3 இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் விலை விவரங்களை அமேசான் இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், சர்வதேச சந்தையில் இதன் விலை GBP220 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சோனி WF-1000XM3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்ட நிலையில், ஆறு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும். இந்த அம்சம் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இது 32 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும். இந்த இயர்பட்ஸ் குவிக் அட்டென்ஷன் மோட் மற்றும் ஆம்பியன்ட் சவுண்ட் மோட் வழங்கப்படுகிறது.
அமேசான் பிரைம் டே 2020 நிகழ்வில் பல்வேறு ஆடியோ சாதனங்கள் அறிமுகமாக இருக்கின்றன. இவற்றில் ஒரு மாடலாக சோனி WF-1000XM3 இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் பில்ட் இன் இதய துடிப்பு சென்சார் கொண்ட அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ் மாடலும் அறிமுகமாக உள்ளது.






