search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பப்ஜி மொபைல்"

    பப்ஜி மொபைல் விளையாட அதிக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால் எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. #PUBGMobile



    குரஜராத் அரசாங்கம் பப்ஜி மொபைல் கேம் விளையாட இந்த ஆண்டு துவக்கத்தில் தடை விதித்தது. இந்த கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் கேம் விளையாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டும் இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.

    ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, கேமினை நிறுத்திவிடும். பின் கேம் சொல்லும் நேரத்தில் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது. 



    பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கேம் கோருகிறது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது. 

    சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த இடைவெளியை கடக்கும் வழிமுறை பற்றி எவ்வித தகவலும் இல்லை. பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன. 

    சிலர் திடீரென கேம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அம்சம் எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இருக்கும்.

    ஏற்கனவே பப்ஜி கேம் தொடர்பான கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பப்ஜி உருவாக்கிய டென்சென்ட் மொபைல்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்வதாகவும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
    உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming



    பப்ஜி மொபைல் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை மூன்று கோடியாக அதிகரித்துள்ளது என பப்ஜி உருவாக்கிய பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பப்ஜி விளையாடுவோரின் எண்ணிக்கை இது என்றாலும், இதில் சீனா மட்டும் சேர்க்கப்படவில்லை.

    இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பப்ஜி விளையாடுவோர் எண்ணக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மெமரி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் பப்ஜி மொபைல் விளையாட முடியும் என்பதால், இந்த கேம் அதிக பிரபலமாக முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.

    பப்ஜி மொபைல் கேமினை உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். தினசரி பப்ஜி மொபைல் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்த கேம் பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கிறது. சில சந்தைகளில் ஃபோர்ட்நைட் பயனர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றாலும், பப்ஜி மொபைல் கேம் இதனை பின்தள்ளி இருக்கிறது.



    குறிப்பாக ஃபோர்ட்நைட் கேமினை பதிவு செய்து விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருக்கிறது. ஃபோர்ட்நைட் மற்றும் பப்ஜி மொபைல் பிரபலமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் கேமாக பப்ஜி மொபைல் ஃபோர்ட்நைட் கேமினை பின்தள்ளியது. 

    சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஆசியா மற்றும் சீன சந்தைகளில் பப்ஜி மொபைல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பப்ஜி மொபைல் பிரபலமானதாக இருக்கும் நிலையில், கணினி மற்றும் கன்சோல்களில் இந்தியா போன்ற சந்தைகளில் பிரபலமாக இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பப்ஜி மொபைலில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகி்ன்றன. பப்ஜி மொபைல் பல்வேறு இயங்குதளங்களில் சீராக இயங்கும் படி மிக நேர்த்தியாக வழங்கப்படும் நிலையில், ஃபோர்ட்நைட் பல்வேறு சாதனங்களில் விளையாட ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்படவில்லை.
    ×