என் மலர்tooltip icon

    கணினி

    வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் இரண்டு அசத்தல் அம்சங்களை வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை ஃபுளோட்டிங் வீடியோவாக பார்க்க முடிகிறது.

    முன்னதாக இதே வசதி யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் வீடியோக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் புதிய ஷேர்சாட் வீடியோ வசதி மட்டுமின்றி சாட்களில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் சோதனை செய்யப்படுகிறது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களிலும் வெவ்வேறு வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள முடியும்.

     வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் இந்த அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் வீடியோ பகிரப்பட்டால், அதனை பார்க்க கோரும் பிளே பட்டன் இடம்பெறுகிறது. அதனை க்ளிக் செய்ததும் வீடியோ பிக்சர் இன் பிக்சர் மோட் வடிவில் பிளே ஆகும்.

    வாட்ஸ்அப் செயலியில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி முழுமையாக உருவாக்கப்படவில்லை என தெரிகிறது. அந்த வகையில் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் உடனே செயலியை அப்டேட் செய்ய ட்விட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


    ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    புதிய பாதுகாப்பு குறைபாடு ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்விட்டர் செயலியை பாதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்கவல் விவரங்களை அம்பலப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.

     ட்விட்டர்

    இந்த பிழைக்கு அக்டோபர் 2018 வாக்கில் அப்டேட் வெளியிடப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களை பாதித்து இருப்பதால், இந்த குறைபாடு பலரது தனிப்பட்ட விவரங்களை கேள்விக்குறியாக்கி இருக்கலாம் என தெரிகிறது.

    முதலில் பிழையை சரி செய்து விட்டு, அதன்பின் பயனர்களுக்கு தகவல் வழங்கலாம் என ட்விட்டர் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்ட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டை பிரபல பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஹேக்கர்ஒன் கண்டறிந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
    டிக்டாக் வியாபாரங்களை முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சுவராத்தைகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை முழுமையாக வாங்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 

    மைக்ரோசாப்ட் மற்றும் டிக்டாக் நிறுவனங்களிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றிய விவரம் அறிந்த ஐந்து பேர் இந்த தகவலை வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
     
     டிக்டாக்

    முந்தைய தகவல்களில் டிக்டாக் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிக்கான பிரிவுகளை வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக கூறப்பட்டது. இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.75 லட்சம் கோடிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் மறுத்துவிட்டது.

    தற்போதைய தகவல்களின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கின் இந்தியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளையும் சேர்த்து வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

    டிக்டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்த இறுதி முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும், ஒருவேளை டிக்டாக்கை வாங்காத பட்சத்தில் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனம் எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி மாடலை இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யது இருக்கிறது.



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இது கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்த எம்ஐ பியர்டு ட்ரிம்மர் மாடலின் விலை குறைந்த மாடல் ஆகும்.

    சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரிம்மர் 1சி மாடல் குவாட் எட்ஜ் டிசைன், அல்ட்ரா பிரைசஸ் செல்ஃப் ஷார்ப்பெனிங் பிளேடுகளை கொண்டுள்ளது. இதில் 20 வெவ்வேறு லென்த் செட்டிங்ஸ் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.

     எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி

    எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி சிறப்பம்சங்கள்

    - செல்ஃப் ஷாப்பெனிங் பிளேடு
    - 1 பியர்டு காம்ப் (சீப்)
    - 20 லென்த் செட்டிங்
    - டிராவல் லாக் அம்சம்
    - எல்இடி பேட்டரி இன்டிகேட்டர்
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    - 600 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை திடீரென குறைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை அதிரடியாக மாற்றி உள்ளது. அதன்படி ஜியோ ஐஎஸ்டி காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளது. 

    ஜியோ ரூ. 501 ஐஎஸ்டி வவுச்சர், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 ஐஆர் சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய நடவடிக்கை குறித்து ரிலையன்ஸ் ஜியோ சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த மாற்றங்கள் ஜியோ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

     ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 575, ரூ. 2875 மற்றும் ரூ. 5751 அன்லிமிட்டெட் ஐஆர் சலுகை பலன்களில் மட்டும் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜியோவின் ரூ. 501 ஐஎஸ்டி சலுகையில் 28 நாட்களுக்கு 424.58 ரூபாய் டாக்டைம் வழங்கப்படுகிறது. இது முன்பை விட ரூ. 126.42 குறைவு ஆகும்.

    ரூ. 1101 சலுகையில் ரூ. 933.05 டாக்டைம் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் ரூ. 1211 டாக்டைம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோன்று ரூ. 1201 சலுகையில் முந்தைய ரூ. 1321 டாக்டைமிற்கு மாற்றாக தற்சமயம் ரூ. 1017 டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஜியோ சார்பில் இதுவரை சலுகை மாற்றம் பற்றி எவ்வித தவலும் வழங்கப்படவில்லை. இதனால் இவை எப்போது மாற்றப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    சாம்சங் நிறுவனம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்து உள்ளது. புதிய பட்ஸ் லைவ் மாடல் பீன் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங், ஏஎன்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய இயர்பட்ஸ் மூலம் டிப்-லெஸ் டிசைனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலினுள் இருக்கும் பாகங்கள் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ளன. காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ள ஏதுவாக புதிய இயர்பட்ஸ் உடன் விங் டிப்களை சாம்சங் வழங்குகிறது.

     கேலக்ஸி பட்ஸ் லைவ்

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் சிறப்பம்சங்கள்

    - 12 எம்எம் டிரைவர்கள்
    - 3 மைக்ரோபோன்கள்
    - ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
    - பட்ஸ் டூகெதர் அம்சம்
    - பிக்ஸ்பி வாய்ஸ் வேக்-அப்
    - ப்ளூடூத் 5
    - ஏஏசி, எஸ்பிசி, ஸ்கேலபிள் கோடெக் வசதி
    - அக்செல்லோமீட்டர், டச், ஹால், இன்ஃப்ராரெட், க்ரிப், பிக்கப் யூனிட்
    - ஆண்ட்ராய்டு 5 அல்லது 1.5 ஜிபி ரேம் கொண்ட சாதனங்கள்
    - ஐபோன் 7 அல்லது அதன் பின் வெளியான ஐஒஎஸ் 10 கொண்ட சாதனங்கள்
    - ஐபிஎக்ஸ்2 வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - இயர்பட்ஸ் 60 எம்ஏஹெச் பேட்டரி
    - சார்ஜிங் கேஸ் 472 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் வைட் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 12715 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமியின் புதிய எம்ஐ டிவி ஸ்டிக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி எம்ஐ டிவி ஸ்டிக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. முன்னதாக சியோமி நிறுவனம் எம்ஐ பாக்ஸ் 4கே மாடலினை மே மாதத்தில் அறிமுகம் செய்தது. இதில் ஆண்ட்ராய்டு டிவி 9.0, பில்ட் இன் குரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதை கொண்டு 1080 பிக்சல் தரவுகளை ஸ்டிரீம் செய்ய முடியும். இத்துடன் எம்ஐ வாய்ஸ் ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ ஷார்ட்கட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கூகுள் பிளே வசதி கொண்டிருப்பதால், செயலிகள் மற்றும் கேம்களை மிக எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

    சியோமி எம்ஐ டிவி ஸ்டிக்

    சியோமி எம்டி டிவி ஸ்டிக் சிறப்பம்சங்கள்

    - ஹெச்டிஎம்ஐ மூலம் 1080 பிக்சல் வீடியோ அவுட்புட் 
    - குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
    - ஏஆர்எம் மாலி 450 ஜிபியு
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு டிவி 9.0, குரோம்காஸ்ட்
    - கூகுள் அசிஸ்டண்ட்
    - ஹாட் கீ மற்றும் வாய்ஸ் ரிமோட்
    - நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ ஹாட்கீ
    - கூகுள் பிளே ஸ்டோர்
    - வைபை, ப்ளூடூத் 4.2
    - மைக்ரோ யுஎஸ்பி பவர் போர்ட்
    - டால்பி, டிடிஎஸ் ஆடியோ

    சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ டிவி ஸ்டிக் விலை ரூ. 2799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ அதிகாரப்பூர்வ வலைதளம், எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
    கோடக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


    கோடக் டிவி இந்தியா நிறுவனம் ஏழு டிவி வேரியண்ட்களை எக்ஸ்ப்ரோ மற்றும் சிஏ சீரிசில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் உத்திர பிரதேச மாநிலத்திலன் ஹபூர் பகுதியில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் டிவி உற்பத்தி ஆலைக்கென ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கோடக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    புதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. எக்ஸ்ப்ரோ வேரியண்ட்களில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 குவாட்கோர் பிராசஸர், யுஎஸ்பி 2.0, ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி/சிஇசி மற்றும் ப்ளூடூத் 4.1 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     கோடக் டிவி

    கோடக் புதிய டிவி வேரியண்ட்கள் கிட்டத்தட்ட பெசல்கள் இல்லா வடிவமைப்பு கொண்டிருக்கின்றன. மேலும் இவை 24 வாட் சவுண்ட் அவுட்புட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் வழங்கப்படும் ரிமோட் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற சேவைகளை இயக்க பிரத்யேக பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் சிஏ சீரிஸ் 75 இன்ச் மாடலில் டால்பி விஷன், 500 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல் மற்றும் 30 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய கோடக் டிவிக்கள் விலை விவரம்:

    - 32 இன்ச் ஹெச்டி 7எக்ஸ் ப்ரோ ரூ. 10,999
    - 40 இன்ச் FHD 7எக்ஸ் ப்ரோ ரூ. 16,499
    - 43 இன்ச் FHD 7எக்ஸ் ப்ரோ ரூ. 18,999
    - 43 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 21,999
    - 50 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 25,999
    - 55 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 29,999
    - 75 இன்ச் 4கே சிஏ சீரிஸ் ரூ. 99,999

    புதிய கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் அமேசான் மற்றும்  ப்ளிப்கார்ட் தளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் புதிய 27 இன்ச் ரெட்டினா 5கே ஐமேக் கம்ப்யூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் 27 இன்ச் ஐமேக் மாடலை 10 ஆம் தலைமுறை இன்டெல் பிராசஸர்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சம் 128 ஜிபி ரேம், அடுத்த தலைமுறை ஏஎம்டி கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 8 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ட்ரூ டோன் டிஸ்ப்ளே, புதிய நானோ டெக்ஸ்ச்சர் கிளாஸ் ஆப்ஷன், 1080 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா, அதிக ஃபெடிலிட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்டூடியோ தர மைக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஐமேக் ப்ரோ மாடலில் 27 இன்ச் ரெட்டினா 5கே டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் தொழில்நுட்பம், நானோ டெக்ஸ்ச்சர் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6 மற்றும் 8 கோர் 10 ஆம் தலைமுறை இன்டெல் பிராசஸர்கள் மற்றும் ஏஎம்டி ரேடியான் ப்ரோ 5000 சீரிஸ் கொண்டிருக்கிறது.

     ஐமேக்

    இது அதிகபட்சம் 55 சதவீதம் வேகமான கிராஃபிக்ஸ் திறன், 8ஜிபி 2666 மெகாஹெர்ட்ஸ் டிடிஆர்4 மெமரி, 128 ஜிபி மெமரியில் கிடைக்கிறது. இத்துடன் 256 ஜிபி / 512 ஜிபி எஸ்எஸ்டி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. மேலும் இதனை 8 டிபி வரை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

    இவற்றுடன் 21.5 இன்ச் ஐமேக் மாடலை ஆப்பிள் நிறுவனம் அப்டேட் செய்து உள்ளது. இதில் தற்சமயம் எஸ்எஸ்டிக்கள் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றன. மேலும் இதனை ஃபியூஷன் டிரைவ் கொண்டு கான்ஃபிகர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

    ஐமேக் ப்ரோ 10 கோர் 3.0 ஜிகாஹெர்ட்ஸ் சியான் டபிள்யூ பிராசஸர் மற்றும் சியான் பிராச்ஸர்கள், அதிகபட்சம் 18 கோர்களில் கிடைக்கிறது. 

    விலை விவரங்கள்

    - 27 இன்ச் 5கே ரெட்டினா ஐமேக் மற்றும் 3.1 ஜிகாஹெர்ட்ஸ் 6 கோர் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5, 4ஜிபி ரேடியான் ப்ரோ 5300 ஜிபியு, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 169900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    - 27 இன்ச் 5கே ரெட்டினா ஐமேக் மற்றும் 3.3 ஜிகாஹெர்ட்ஸ் 6 கோர் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5, 4ஜிபி ரேடியான் ப்ரோ 5300 ஜிபியு, 8 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 189900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
     
    - 27 இன்ச் 5கே ரெட்டினா ஐமேக் மற்றும் 3.8 ஜிகாஹெர்ட்ஸ் 8 கோர் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7, 8ஜிபி ரேடியான் ப்ரோ 5500 எக்ஸ்டி ஜிபியு, 8 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 219900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    - 21.5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஐமேக் மற்றும் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் கோர் ஐ5, இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் 640, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 99900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    - 21.5 இன்ச் ரெட்டினா 4கே ஐமேக் மற்றும் 3.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் இன்டெல் கோர் ஐ3, 2 ஜிபி ரேடியான் ப்ரோ 555எக்ஸ் ஜிபியு, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 119900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    - 21.5 இன்ச் ரெட்டினா 4கே ஐமேக் மற்றும் 3 ஜிகாஹெர்ட்ஸ் 6 கோர் இன்டெல் கோர் ஐ5, 4 ஜிபி ரேடியான் ப்ரோ 560எக்ஸ் ஜிபியு, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 139900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    - 5கே ரெட்டினா ஐமேக் ப்ரோ 3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் சியான் டபிள்யூ, 8 ஜிபி ரேடியான் ப்ரோ வீகா 56 ஜிபியு, 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி விலை ரூ. 464900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 27 இன்ச் ஐமேக் மற்றும் 21.5 இன்ச் ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ மேம்பட்ட மாடல்கள்  விற்பனை தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் விற்பனையாளர்களிடம் இம்மாதத்திலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    சோனி நிறுவனம் ரூ. 19990 விலையில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.


    சோனி நிறுவனம் WF-1000XM3 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. 

    இந்த இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் பயன்படுத்தாத போது 32 மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் சோனி WF-1000XM3 மாடலில் அமேசான் அலெக்சா, ஆப்பிள் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

     சோனி WF-1000XM3

    சோனி WF-1000XM3 சிறப்பம்சங்கள்

    - குளோஸ்டு, டைனமிக் டைப்
    - ஹெச்டி நாய்ஸ் கேன்சலிங் பிராசஸர்
    - 6 எம்எம், டோம் டைப்
    - ப்ளூடூத் 5.0
    - ஈத்தர்நெட் கன்டென்சர்
    - 32 மணி நேர பிளேடைம்
    - ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
    - டூயல் நாய்ஸ் சென்சார் தொழல்நுட்பம்
    - ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் 
    - மேக்னெடிக் சார்ஜிங் கேஸ்
    - யுஎஸ்பி டைப் சி போர்ட்
    - கூகுள் அசிஸ்டண்ட் வசதி

    சோனி WF-1000XM3 மாடல் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் விற்பனை துவங்கிய முதல் பத்து நாட்களுக்கு ரூ. 17990 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய சோனி WF-1000XM3 விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.

    ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் மிகமெல்லிய சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் சமீபத்தில் 10 வாட் வயர்லெஸ் சார்ஜிங் பேட் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரியல்மி 50வாட் மற்றும் 65வாட் அல்ட்ரா தின் சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

    புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சாதனம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது 4200 எம்ஏஹெச் பேட்டரியை 0 முதல் 20 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 

     ரியல்மி சூப்பர்டார்ட் சார்ஜர் டீசர்

    ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய 65வாட் மற்றும் 50வாட் அல்ட்ரா தின் சூப்பர்டார்ட் சார்ஜர்களின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதன்படி புதிய சார்ஜர் வழக்கமான சார்ஜர்களை விட அளவில் சிறியதாக இருக்கின்றன. 

    மேலும் இது வழக்கமான 65 வாட் சார்ஜர்களை விட எடை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மியின் 50வாட் அல்ட்ரா தின் சூப்பர்டார்ட் சார்ஜர் பார்க்க ஒப்போவின் 50வாட் மின் சூப்பர்வூக் சார்ஜர் போன்றே காட்சி அளிக்கிறது. அந்த வகையில் இது ரீ-பிராண்டு செய்யப்பட்ட ஒப்போ சார்ஜர் ஆக இருக்கலாம் என தெரிகிறது.
    சீனா ஸ்டோரில் இருந்த ஆயிரக்கணக்கான செயலிகளை ஆப்பஇள் நிறுவனம் நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை நிர்வகிக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற துவங்கி உள்ளது. சீன ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்பிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான செயலிகளை நீக்கி வருகிறது. 

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் சுமார் 29800 செயலிகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை வீடியோ செயலிகள் ஆகும். 2016 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சீன மொபைல் கேமிங் சட்டத்திற்கு ஏற்ற வகையில் இல்லாத காரணத்தால் இவை நீக்கப்பட்டதாக தெரிகிறது.

     ஆப்பிள்

    இந்த சட்டத்தின் மூலம் கேம் டெவலப்பர்கள் சீன அரசாங்கத்தின் பத்திரிகை மற்றும் பப்ளிகேஷன்களுக்கான தணிக்கைக்குழு நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். இதன் மூலம் கட்டண டவுன்லோட்கள் மற்றும் இன்-ஆப் பர்சேஸ்களை வழங்க முடியும்.

    எனினும், இந்த வழிமுறைகளை பின்பற்ற பல மாதங்கள் ஆகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சுமார் ஆயிரக்கணக்கான செயலிகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங் துறையில் அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. 
    ×