search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மைக்ரோசாப்ட்
    X
    மைக்ரோசாப்ட்

    டிக்டாக் வியாபாரங்களை முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக தகவல்

    டிக்டாக் வியாபாரங்களை முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சுவராத்தைகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை முழுமையாக வாங்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 

    மைக்ரோசாப்ட் மற்றும் டிக்டாக் நிறுவனங்களிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றிய விவரம் அறிந்த ஐந்து பேர் இந்த தகவலை வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
     
     டிக்டாக்

    முந்தைய தகவல்களில் டிக்டாக் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிக்கான பிரிவுகளை வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக கூறப்பட்டது. இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.75 லட்சம் கோடிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் மறுத்துவிட்டது.

    தற்போதைய தகவல்களின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கின் இந்தியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளையும் சேர்த்து வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

    டிக்டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்த இறுதி முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும், ஒருவேளை டிக்டாக்கை வாங்காத பட்சத்தில் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×