search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ட்விட்டர்
    X
    ட்விட்டர்

    ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு

    ஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் உடனே செயலியை அப்டேட் செய்ய ட்விட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


    ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    புதிய பாதுகாப்பு குறைபாடு ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்விட்டர் செயலியை பாதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்கவல் விவரங்களை அம்பலப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.

     ட்விட்டர்

    இந்த பிழைக்கு அக்டோபர் 2018 வாக்கில் அப்டேட் வெளியிடப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களை பாதித்து இருப்பதால், இந்த குறைபாடு பலரது தனிப்பட்ட விவரங்களை கேள்விக்குறியாக்கி இருக்கலாம் என தெரிகிறது.

    முதலில் பிழையை சரி செய்து விட்டு, அதன்பின் பயனர்களுக்கு தகவல் வழங்கலாம் என ட்விட்டர் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்ட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டை பிரபல பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஹேக்கர்ஒன் கண்டறிந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
    Next Story
    ×