என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அமெரிக்காவில் டிக்டாக் பயன்படுத்த தடை - ஆனால் ஒரு டுவிஸ்ட்
Byமாலை மலர்23 July 2020 6:03 AM GMT (Updated: 23 July 2020 6:03 AM GMT)
அமெரிக்காவில் இவர்கள் இந்த சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கும் விதிமுறையை அமெரிக்க செனட் சபையில் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி பரிந்துரைத்தார். இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
அமெரிக்காவில் டிக்டாக் அதிக பிரபலமாக இருப்பதால், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தங்களது தகவல்கள் பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 336-71 என்ற அடிப்படையில் பாதுகாப்பு நிதியின் கீழ் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஒப்புதலை தொடர்ந்து விரைவில் டிக்டாக் தடை அமெரிக்காவில் சட்டமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×