search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மைக்ரோசாப்ட்
    X
    மைக்ரோசாப்ட்

    அந்த பிரச்சனை இருப்பது உண்மை தான் - மைக்ரோசாப்ட்

    அந்த பிரச்சனை இருப்பது உண்மை தான் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 தளத்தில் பெரும் குறைபாடு இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் கனெக்டிவிட்டி கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. விண்டோஸ் 10 பயன்படுத்தும் பலர் இந்த பிரச்சனை குறித்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்கள் நெட்வொர்க் செட்டிங்ஸ் பகுதியில் நோ இண்டர்நெட் என்ற தகவலை பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கோளாறு விண்டோஸ் 10 வெர்ஷன் 2004 அப்டேட்டில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஐகான் நோ இண்டர்நெட் என காண்பித்தாலும், வெப் பரிவுசர்களில் இணையம் பயன்படுத்த முடிவதாக சிலர் தெரிவித்தனர்.

     விண்டோஸ் 10

    மைக்ரோசாப்ட் இந்த கோளாறு இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இதனை சரி செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. விரைவில் இந்த கோளாறை சரி செய்யும் அப்டேட்டை மைக்ரோசாப்ட் வெளியிடும் என தெரிகிறது.

    விண்டோஸ் 10 தளத்தில் பல்வேறு கோளாறுகள் இருந்த போதும், உலகம் முழுக்க இதனை பல கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×