search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சோனி ஹெட்போன்
    X
    சோனி ஹெட்போன்

    வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்ட சோனி ஹெட்போன் அறிமுகம்

    சோனி நிறுவனம் வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்ட புதிய ஹெட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் WH CH710N வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய்ல் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கிறது. 

    இதில் டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம், நீண்ட பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் தொழில்நுட்பம், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாய்ஸ் கேன்சலேஷன் ஃபில்ட்டரை சீராக இயக்க வழி செய்கிறது.

    டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம் டூயல் மைக்ரோபோன்களை பயன்படுத்தி நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை செயல்படுத்தி, வெளிப்புற சத்தத்தை தடுக்கிறது. இத்துடன் ஆம்பியன்ட் நாய்ஸ்மோட் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் விரும்பும் நேரத்தில் வெளிப்புற சத்தத்தை கேட்கவும் முடியும்.

    என்எப்சி வசதி கொண்டிருப்பதால், இந்த ஹெட்போன் மற்ற சாதனங்களுடன் மிகவேகமாக இணைந்து கொள்ள முடியும். இதில் உள்ள பேட்டரி 35 மணி நேரத்திற்கு தொடர்ச்சியான பயன்பாடு, பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.

    புதிய சோனி WH CH710N ஹெட்போன் சோனி  விற்பனை மையங்கள் மற்றும் இதல ஆன்லைன் விற்பனை வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×