search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூம்"

    • தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஜூம் நிறுவனம்.
    • சுமார் 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.

    இந்நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.

    ×