என் மலர்
கணினி
இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க பாரதி ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்களிடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதே போல் உலகின் 36 நிறுவனங்களுடன் எரிக்சன் ஒப்பந்தமிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்சன் இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தகளின் படி இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவைகளை வழங்க இருக்கிறது.
இந்தியாவில் ஏர்டெல் போன்றே உலகம் முழுக்க 36 நிறுவனங்களுடன் எரிக்சன் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளதாக எரிக்சன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, ஓசியானா மற்றும் இந்திய பிரிவு மூத்த துணை தலைவர் நுன்சினோ மிர்டிலோ தெரிவித்துள்ளார்.
எனினும் இரு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தத்தின் நிதிநிலை சார்ந்த தகவல்களை வழங்கவில்லை. புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் வழங்க ஏதுவாக ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் இதர சேவைகளை எரிக்சன் நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

முன்னதாக எரிக்சன் சார்பில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான முழுமையான செயல் விளக்கம் அந்நிறுவனத்தின் 5ஜி சோதனை தளத்தை பயன்படுத்தி விவரிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பமானது அதிவேக சேவையை சீராக வழங்கும் என எரிக்சன் தெரிவித்தது. மேலும் எரிக்சன் இந்திய சந்தைக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் 2020-ம் ஆண்டு வாக்கில் வழங்கப்பட இருந்தாலும், 5ஜி தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கம் நாட்டின் வலுவான 4ஜி சுற்றுச்சூழலை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என மிர்டிலோ தெரிவித்தார்.
அதிவேக டேட்டா வழங்கும் 5ஜி தொழில்நுட்பம் 2026-ம் ஆண்டு வாக்கில் ரூ.1,77,489 கோடி வருவாயை இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு ஈட்ட வாய்ப்புகள் இருப்பதாக எரிக்சன் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் டுவீட்ஸ்டார்ம் அம்சம் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் செப்டம்பர் மாதத்தில் சோதனை செய்யப்பட்டது.
புதுடெல்லி:
டுவிட்டர் டுவீட்ஸ்டார்ம் அம்சத்தை ஆண்ட்ராய்டு செயலியில் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் முன்னதாக செப்டம்பர் மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. இம்முறை இந்த அம்சம் டுவிட்டர் ஆல்ஃபா மற்றும் பீட்டா பதிப்பு செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஆல்ஃபா மற்றும் பீட்டா பதிப்பு செயலிகளை பயன்படுத்தும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதை டுவிட்டர் உறுதி செய்துள்ளது. புதிய அம்சம் தொடர்ச்சியான டுவிட்களை அடுத்தடுத்த அனுப்புவதை எளிமையாக்கும்.

புதிய அம்சம் நீண்ட டுவீட்களை அடுத்தடுத்து தனியாக அனுப்ப வழி செய்யும். இதனால் டுவீட்ஸ்டார்ம் மூலம் ஒரே கிளிக் மூலம் அனைத்து டுவிட்களையும் அனுப்ப முடியும்.
டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்ய 140 வார்த்தைகள் அனுமதித்த நிலையில், சமீபத்தில் இந்த எண்ணிக்கை 280 வார்த்தைகளாக நீட்டித்தது. புதிய டுவீட்ஸ்டார்ம் அம்சம் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியின்றி நீண்ட டுவீட்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும்.
பொதுமக்களுக்கு டுவீட்ஸ்டார்ம் அம்சம் வழங்குவது குறித்து டுவிட்டர் சார்பில் எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும் டுவிட்டர் ஆல்ஃபா செயலியை தரவிறக்கம் செய்து புதிய அம்சத்தை சோதனை செய்ய முடியும்.

4ஜி எல்டிஇ மற்றும் வாய்ஸ் காலிங் வசதி கொண்ட லெனோவோ நிறுவனத்தின் டேப் 7 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனத்தின் டேப் 7 டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ மற்றும் வாய்ஸ் காலிங் வசதி கொண்ட புதிய டேப்லெட் 6.98 இன்ச் எச்டி ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ள லெனோவோ டேப் 2 முன்பக்கம் சிங்கிள் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் சவுண்ட் மற்றும் 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

லெனோவோ டேப் 7 சிறப்பம்சங்கள்:
- 6.98 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி IPS டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
- மாலி T720 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்ஏஎச் பேட்டரி
கருப்பு நிறத்தில் கிடைக்கும் லெனோவோ டேப் 7 விலை இந்தியாவில் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ டேப் 7 பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோவின் மோட்டோராலா நிறுவனம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டோ டேப் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நியூ யார்க்:
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின் அறிமுகமாகியுள்ள மோட்டோ டேப் AT&T நெட்வொர்க்கில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ டேப் மல்டி யூசர் மோட் வசதி கொண்டுள்ளது. இதன் டிவி மோட் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள், திரைப்படம் மற்றும் இதர நிகழ்ச்சிகளை ஒரு ஸ்வைப் மூலம் இயக்க முடியும். ஹோம் ஸ்க்ரின் அல்லது லாக் ஸ்கிரீன் உள்ளிட்டவற்றில் இருந்து ஒரே ஸ்வைப் மூலம் இந்த அம்சங்களை இயக்க முடியும்.
டூயல் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் கொண்ட மோட்டோ டேப் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிட்ஸ் மோட் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளதால் அங்கீகரிக்கபப்ட்ட வலைத்தளங்கள் மற்றும் பெற்றோர் விருப்பத்தின் படி தரவுகளை பார்க்க முடியும்.

மோட்டோ டேப் சிறப்பம்சங்கள்:
- 10.1 இன்ச் ஃபுல் எச்டி, 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
- 7000 எம்ஏஎச் பேட்டரி
- யுஎஸ்பி டைப் சி
புதிய மோட்டோ டேப் நவம்பர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை 299.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,607 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 11.1.1 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த இரண்டு பிழைகள் மட்டும் சரி செய்யப்பட்டுள்ளன, எனினும் இந்த பிரச்சனை இன்னமும் சரி செய்யப்படவில்லை.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11.1 பதிப்பில் ஆட்டோகரெக்ட் அம்சம் புதிய ஐ.ஓ.எஸ். 11.1.1 அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் i என டைப் செய்தால் அது தானாகவே A என மாறியது.
இத்துடன் சிரி அம்சத்தை திடீரென செயலிழக்க செய்த பிழையும் புதிய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கால்குலேட்டர் செயலியில் சில அம்சங்களில் பிழை இருந்து வரும் நிலையில், புதிய அப்டேட்டிலும் இந்த பிழை சரி செய்யப்பாடமல் உள்ளது.

பீட்டா பயனர்களுக்கு ஏற்கனவே "A" பிழை சரி செய்யப்பட்டு விட்டது. ஐ.ஓ.எஸ். 11.2 பதிப்பில் கால்குலேட்டரில் இருந்து வரும் பிழை சரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐ.ஓ.எஸ். 11.1.1 பதிப்பினை அப்டேட் செய்ய ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இருந்து வரும் கால்குலேட்டர் பிழையை வீடியோவில் காணலாம்..,

டுவிட்டர் மூலம் 140 வார்த்தைகளில் டுவிட் செய்து வந்த வாடிக்கையாளர்கள் இனி 280 வார்த்தைகளில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என டுவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் டுவிட் செய்யும் வார்த்தைகளின் எண்ணிக்கை 280-ஆக உயர்த்தியுள்ளது. புதிய அப்டேட் மூலம் சமூக வலைத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் டுவிட்டர் புதிய அப்டேட் சார்ந்த அதிகார்பூர்வ அறிவிப்பு அந்நிறுவன வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டுவிட் செய்வதற்கான வார்த்தைகளின் எண்ணிக்கை 280-ஆக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து டுவிட்டர் பயன்பாடு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.
டுவிட் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முன்பை விட வாடிக்கையாளர்கள் வேகமாகவும், மிக எளிமையாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொல்ள முடியும் என டுவிட்டர் தளத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றம் ஜப்பான், கொரியா மற்றும் சீன மொழிகள் தவிர்த்து மற்ற அனைத்து மொழிகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் டுவிட்டரின் டுவிட் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் கடுமையான போட்டி காரணமாக டுவிட்டர் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. புதிய மாற்றம் டுவிட்டரில் இதுவரை இருந்து வரும் வேகம் குறையாமல் இருக்கும் என டுவிட்டர் நிறுவனத்தின் அலிசா ரோசன் தெரிவித்தார்.
மேலும், டுவிட்டரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இன்னமும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 140 அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளிலேயே டுவிட் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில், மடிக்கும் திறன் கொண்ட டேப்லெட் சாதனத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொரியர் என்ற பெயரில் மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. கான்செப்ட் வடிவில் உருவான இந்த சாதனம், பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் உயிர் பெறலாம் என கூறப்படுகிறது.
அதன்படி இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொரியர் போன்று காட்சியளிக்கும் மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த சாதனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
விண்டோஸ் சென்ட்ரல் சார்பில் இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் டிஜிட்டல் இன்க் வசதி கொண்ட மடிக்கக்கூடிய சாதனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. ஆண்ட்ரோமெடா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் இந்த சாதனம் பார்க்க கொரியர் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுறது. மேலும் இதனை புத்தகம் போன்று மடித்து, அதில் ஸ்டைலஸ் உதவியோடு குறிப்புகளை எடுக்க முடியும்.

ஆண்ட்ரோமெடா தற்சமயம் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாகவும், விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய டேப்லெட் என அழைக்கப்பட்டாலும், மடித்தால் இந்த டேப்லெட்டை பாக்கெட்டில் சுலபமாக வைத்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொபைல் போன் போன்றே இந்த சாதனம் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய டேப்லெட் ஸ்மார்ட்போன் போன்று பயன்படும் என்றாலும், இது ஸ்மார்ட்போனிற்கு மாற்றான சாதனமாக இருக்காது என கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனம் வசதியாக குறிப்புகளை எடுக்கும் திறன் கொண்டது என்ற வாக்கில் விளம்பரம் செய்யப்படலாம். இதன் முந்தைய ப்ரோடோடைப் திறந்ததும் ஒன்நோட் சேவையுடன் இணைக்கப்பட்ட நோட்புக் செயலி திரையில் தோன்றும் என்றும் இத்துடன் விண்டோஸ் இன்க் சப்போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் வழங்கப்படுவதால் குறிப்புகளை எடுப்பதோடு மட்டுமின்றி, விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருப்பதால் எட்ஜ் மற்றும் போட்டோஸ் போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும். புதிய சாதனம் கொண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக அமைவதை விட புத்தம் புதிய பிரிவினை உருவாக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட மொபைல் பிரிவினை மூடப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள நிலையில், தனக்கென பிரத்தியேக சந்தையை உருவாக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்குவதற்கான காப்புரிமைகளை மைக்ரோசாப்ட் பதிவு செய்து வரும் நிலையில் ஆண்ட்ரோமெடா விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய டேப்லெட் ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் அம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் இந்த சாதனத்தை 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்வைப் நிறுவனத்தின் புதிய ஸ்லேட் ப்ரோ டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த சாதனத்தின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஸ்வைப் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக டேப்லெட் ந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
4ஜி வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்வைப் டேப்லெட் விலை இந்தியாவில் ரூ.8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 10.1 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 5 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
பிளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்வைப் டேப்லெட் வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்வைப் நிறுவனத்தின் இரண்டு பவர் பேங்க் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எலைட் ப்வர் பேங்க் சாதனம் 13000 எம்ஏஎச் திறன் கொண்டிருப்பதோடு மூன்று சார்ஜிங் போர்ட் மற்றும் உயர் ரக லி-அயன் பேட்டரிகளை கொண்டிருக்கிறது. எலைட் பவர் பேங்க் 11000 எம்ஏஎச் திறன் கொண்ட மாடலில் இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்களை கொண்டிருக்கிறது.

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சேவைக்கென பிரத்தியேகமாக இயங்கும் புதிய வலைத்தளம் மற்றும் மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி தளம் போதிய வேகம் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. டிக்கெட் முன்பதிவின் போது அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் தற்சமயம் பயன்படுத்தும் தளத்திற்கு மாற்றாக புதிய வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல் செயலி உள்ளிட்டவற்றை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய வலைத்தளம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும், அதிகப்படியான பிழைகள் இன்றியும் இயங்கவும், எளிமையாக லாக்-இன் செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பயன்படுத்தப்படும் வலைத்தளம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இடையிடையை கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கூடுதலாக வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிக்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி டிக்கெட் உறுதி செய்த பின் டிஸ்ப்ளே செய்வது, தரவுகளை கொண்டு பயணங்களை திட்டமிடுவது மற்றும் தட்கல் போன்று இந்திய ரயில்வேயின் சேவைகளை சரிவர பயன்படுத்துவதற்கென அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் வந்து செல்லும் நேரத்தை பயணிகளுக்கு தெரிவிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் ரயில் நேரம் தாமதமாவது, அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லும் நேரம் மற்றும் குறிப்பிட்ட ரயில் செல்லும் இறுதி ரயில்வே நிலையம் சார்ந்த தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த அம்சங்கள் புதிய செயலி மற்றும் வலைத்தளங்ளில் இஸ்ரோவின் உதவியுடன் சேர்க்கப்படலாம் என்றும், இதற்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் பயணங்களை திட்டமிடும் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வியாபாரத்தை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளளாக கூறப்படுகிறது.
மேலும் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு வேகமாக டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ள முடியும் என்பதோடு இதன் எளிய இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்கள் பாதுகாப்பாகவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் சார்ந்த தகவல்கள் அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்ட்டுள்ளது. கைரேகை ஸ்கேனர் மற்றும் முக அங்கீகார (face recognition) வசதி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட முதல் டேப்லெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனத்தில் IP68 சான்று பெற்றிருப்பதால் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டேப்லெட் ஐந்து அடி ஆழ நீரில் 30 நிமிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இத்துடன் ஈர கைகளுடன் டேப்லெட்டை இயக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சிறப்பம்சங்கள்:
- 8.0 இன்ச் WXGA, 800x1280 ஸ்கிரீன்
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு நௌக்கட்
- 4450 எம்ஏஎச் பேட்டரி
புதிய சாம்சங் டேப்லெட் வெவ்வேறு சூழ்நிலைகளை தாக்குப்பிடிக்கும் வகையிலும், அதிக அழுத்தம் மற்றும் கீழே விழுந்தாலும் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனத்துடன் வரும் எஸ்.பென் சாதனமும் IP 68 சான்று பெற்றிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் விலை சார்ந்து குறித்து தகவலும் இல்லை.

கூகுள் குரோம் பிரவுசரில் வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் வகையில் அடிப்படை வசதிகள் நிறைந்த ஆண்டிவைரஸ் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
கூகுள் குரோம் பிரவுசிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், சில அடிப்படை ஆண்டிவைரஸ் அம்சங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்த அம்சங்கள் பிரவுசர் டீஃபால்ட் செட்டிங்ஸ்களை தானாக மாற்றி பிழைகள் நிறைந்த டூல்கள் மற்றும் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை தடுக்கும்.
விண்டோஸ் கணினிகளில் பிழை ஏற்படுத்தும் அம்சங்கள் நுழைய முற்பட்டால் வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்யும் புதிய அம்சங்களை குரோம் பிரவுசரில் கூகுள் நிறுவனம் சேர்த்துள்ளது. அந்த வகையில் கூகுள் குரோம் பிரவுசர் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செட்டிங்ஸ் மாற்றப்படுவதை கண்டறிந்து, அவற்றை மீண்டும் ரீசெட் செய்யும்.
வலைத்தளங்களில் கிடைக்கும் சில தளங்கள் வாடிக்கையாள்களின் ஹோம்பேஜ் மற்றும் டீஃபால்ட் சர்ச் இன்ஜின் உள்ளிட்டவற்றை மாற்றவோ அல்லது வாடிக்கையாளரின் அனுமதியின்றி சில செட்டிங்ஸ்களை மாற்றியமைக்கும். இவ்வாறான சமயங்களில் குரோம் மாற்றங்களை கண்டறிந்து, அடுத்த முறை நீங்கள் குரோம் ஓபன் செய்யும் போது உண்மையான செட்டிங்ஸ்க்கு மாற்றக்கோரும்.

அடுத்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான கூகுள் குரோமில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இதனால் கணினியில் உள்ள பிழை ஏற்படுத்தும் மென்பொருள்களை அழிக்க பரிந்துரை செய்யும். கூகுள் நிறுவனம் இந்த சேவையை வழங்குவதற்காக இசெட் (ESET) நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்த சேவை வழக்கமான ஆண்டிவைரஸ் போன்று வேலை செய்யாது என்றும் இது கணினியில் கிளீன்-அப் சேவை போன்று வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை குரோம் விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
எனினும் புதிய சேவைக்கான ரேம் பயன்பாட்டை கூகுள் எவ்வாறு இயக்கப்போகிறது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. புதிய ஆண்டிவைரஸ் சேவை ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.

ஐபோன், ஐபேட் சாதனங்களுக்கான ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் சாதனங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட்டில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்களில் ஆடியோ மற்றும் ஹாப்டிக் ஃபீட்பேக் சார்ந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் சில ஐபோன் 6எஸ் சாதனங்களில் ஏற்பட்ட தொடுதிரை சார்ந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் தரப்பு டிஸ்ப்ளேக்கள் வீடியோ தரவுகளின் தரத்தை குறைவாக பிரதிபலிக்கவோ, சீராக வேலை செய்யாமலோ போகலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் மட்டும் சரி செய்ய வேண்டும் என்றும் நினைவூட்டியுள்ளது.

புதிய ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் 280 எம்பி அளவு கொண்டிருக்கிறது. எனினும் இதன் அளவு சாதனங்களுக்கு ஏற்ப வேறுபடலாம். புதிய அப்டேட் ஓவர்-தி-ஏர் (OTA) முறையில் கிடைக்கிறது. இந்த அப்டேட் ஐபோன் 5எஸ் மற்றும் அதன் பின் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் மட்டுமன்றி ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ, ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2 மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 இன்ஸ்டால் செய்ய முடியும். முன்னதாக ஆப்பிள் வெளியிட்ட அப்டேட்டில் அதிகப்படியான புதிய எமோஜிக்கள் சேர்க்கப்பட்டன. புதிய அப்டேட் பெற ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.