என் மலர்
செய்திகள்

மடிக்கும் திறன் கொண்ட டேப்லெட்: விரைவில் வெளியிட மைக்ரோசாப்ட் திட்டம்?
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில், மடிக்கும் திறன் கொண்ட டேப்லெட் சாதனத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொரியர் என்ற பெயரில் மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. கான்செப்ட் வடிவில் உருவான இந்த சாதனம், பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் உயிர் பெறலாம் என கூறப்படுகிறது.
அதன்படி இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொரியர் போன்று காட்சியளிக்கும் மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த சாதனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
விண்டோஸ் சென்ட்ரல் சார்பில் இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் டிஜிட்டல் இன்க் வசதி கொண்ட மடிக்கக்கூடிய சாதனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. ஆண்ட்ரோமெடா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் இந்த சாதனம் பார்க்க கொரியர் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுறது. மேலும் இதனை புத்தகம் போன்று மடித்து, அதில் ஸ்டைலஸ் உதவியோடு குறிப்புகளை எடுக்க முடியும்.

ஆண்ட்ரோமெடா தற்சமயம் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாகவும், விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய டேப்லெட் என அழைக்கப்பட்டாலும், மடித்தால் இந்த டேப்லெட்டை பாக்கெட்டில் சுலபமாக வைத்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொபைல் போன் போன்றே இந்த சாதனம் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய டேப்லெட் ஸ்மார்ட்போன் போன்று பயன்படும் என்றாலும், இது ஸ்மார்ட்போனிற்கு மாற்றான சாதனமாக இருக்காது என கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனம் வசதியாக குறிப்புகளை எடுக்கும் திறன் கொண்டது என்ற வாக்கில் விளம்பரம் செய்யப்படலாம். இதன் முந்தைய ப்ரோடோடைப் திறந்ததும் ஒன்நோட் சேவையுடன் இணைக்கப்பட்ட நோட்புக் செயலி திரையில் தோன்றும் என்றும் இத்துடன் விண்டோஸ் இன்க் சப்போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் வழங்கப்படுவதால் குறிப்புகளை எடுப்பதோடு மட்டுமின்றி, விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருப்பதால் எட்ஜ் மற்றும் போட்டோஸ் போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும். புதிய சாதனம் கொண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக அமைவதை விட புத்தம் புதிய பிரிவினை உருவாக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட மொபைல் பிரிவினை மூடப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள நிலையில், தனக்கென பிரத்தியேக சந்தையை உருவாக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்குவதற்கான காப்புரிமைகளை மைக்ரோசாப்ட் பதிவு செய்து வரும் நிலையில் ஆண்ட்ரோமெடா விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய டேப்லெட் ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் அம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் இந்த சாதனத்தை 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story