என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஓ.எஸ். 11.1.1 அப்டேட் வெளியானது: எனினும் இந்த பிரச்சனை சரி செய்யப்படவில்லை
    X

    ஐ.ஓ.எஸ். 11.1.1 அப்டேட் வெளியானது: எனினும் இந்த பிரச்சனை சரி செய்யப்படவில்லை

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 11.1.1 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த இரண்டு பிழைகள் மட்டும் சரி செய்யப்பட்டுள்ளன, எனினும் இந்த பிரச்சனை இன்னமும் சரி செய்யப்படவில்லை.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11.1 பதிப்பில் ஆட்டோகரெக்ட் அம்சம் புதிய ஐ.ஓ.எஸ். 11.1.1 அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் i என டைப் செய்தால் அது தானாகவே A என மாறியது.

    இத்துடன் சிரி அம்சத்தை திடீரென செயலிழக்க செய்த பிழையும் புதிய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கால்குலேட்டர் செயலியில் சில அம்சங்களில் பிழை இருந்து வரும் நிலையில், புதிய அப்டேட்டிலும் இந்த பிழை சரி செய்யப்பாடமல் உள்ளது.



    பீட்டா பயனர்களுக்கு ஏற்கனவே "A" பிழை சரி செய்யப்பட்டு விட்டது. ஐ.ஓ.எஸ். 11.2 பதிப்பில் கால்குலேட்டரில் இருந்து வரும் பிழை சரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஐ.ஓ.எஸ். 11.1.1 பதிப்பினை அப்டேட் செய்ய ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இருந்து வரும் கால்குலேட்டர் பிழையை வீடியோவில் காணலாம்..,


    Next Story
    ×