என் மலர்
கணினி
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் ARM பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் அதன்படி இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து டெக்கிரன்ச் வெளியிட்டுள்ள தகவல்களில் "மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM சார்ந்த ஹார்டுவேர் ஒன்றை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சாதனம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் ரெட்மொன்ட் கட்டிடத்தில் அந்நிறுவனம் சார்பில் ரேடியோ பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் செய்துள்ளது. மைக்ரோசாஃப்டின் ரெட்மொன்ட் கட்டிடங்களில் சர்ஃபேஸ் மற்றும் ஹார்டுவேர் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சமீபத்திய விளம்பரத்தின் படி அந்நிறுவனம் எல்டிஇ பிரிவில் அனுபவமுள்ள பொறியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், குவால்காம் நிறுவனம் அதனை வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஹவாயில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப அமர்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதிய சிப்செட் நிகழ்வின் முதல் நாளிலேயே அறிமுகம் செய்யப்படலாம் எனினும் இந்த சிப்செட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு விலை குறைந்த ஐபேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு 9.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ரூ.28,000 விலையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 9.7 இன்ச் ஐபேட் விலை குறைந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய விலை குறைந்த ஐபேட் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இதர நாடுகளிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
விலை குறைந்த ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்வதன் மூலம் சில சந்தைகளை புதுப்பிக்க முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவன டேப்லெட் சந்தையில் சரிவு ஏற்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான சாதனங்கள் இந்த நிலையை சற்று மாற்றியிருந்தாலும், புதிய ஐபேட் வெளியீடு இதனை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடலை காம்பால் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் இந்த சாதனம் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அதாவது ஏப்ரல், மே அல்லது ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஆப்பிள் ஐபேட் வைபை வசதி கொண்ட 32 ஜிபி, 9.7 இன்ச் விலை ரூ.28,000 மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.35,700 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. செல்லுலார் 9.7 இன்ச் ஐபேட் விலை ரூ.38,600 மற்றும் ரூ.46,300 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய ஆப்பிள் 9.7 இன்ச் ஐபேட் அலுமினியம் யுனிபாடி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே, 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆப்பிள் A9 சிப்செட், மற்றும் M9 மோஷன் கோ-பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 5P லென்ஸ் பானரோமா, டைமர், ஹைப்ரிட் IR ஃபில்ட்டர் மற்றும் பல்வேறு இதர கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஃபுல் எச்டி தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி கொண்ட ஐபேட் 1.2 எம்பி ஃபேஸ் டைம் எச்டி கேமரா f/2.2 அப்ரேச்சர் மற்றும் எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியை கொண்டுள்ளது. இந்த சாதனம் 32.4 Wh கழற்ற முடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியான சில வருடங்களில் உலகம் முழுக்க 60 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ:
சர்வதேச சந்தையில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 கோடிகளை கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் விண்டோஸ் 10 இயங்குதளத்தை தங்களது கணினியில் பயன்படுத்தி வருகின்றனர் என மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட வருடாந்திர கூட்டத்தில் இந்த தகவலை சத்ய நாதெள்ளா தெரிவித்தார். 2018-ம் ஆண்டிற்குள் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை குறிவைத்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை குறைவானதாகவே பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தப்பட்டதே பயனர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்கள் வழங்கும் போட்டி காரணமாக விண்டோஸ் 10 அப்டேட் நிறுத்தப்பட்டது.
சர்வதேச சந்தையில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன இயங்குதளங்கள் மட்டும் 99 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது என கார்ட்னர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதள பிரிவு துணை தலைவர் ஜோ பெல்ஃபோரி, மொபைல் போன்களுக்கான விண்டோஸ் 10 இனி வழங்கப்பட மாட்டாது என்ற தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். எனினும் இந்த இயங்குதளத்திற்கான பிழை திருத்தங்கள், பாதுகாப்பு அப்டேட் உள்ளிட்டவை மட்டும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் கணக்குளை சரிபார்க்க பேஸ்புக் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் 200 கோடிக்கும் அதிகமான கணக்குகளையும் மனிதர்கள் தான் பயன்படுத்துகின்றனரா என்பதை கண்டறிய பேஸ்புக் புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. அதன்படி அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்களது கணக்கை உறுதி செய்ய புகைப்படங்களை சமர்பிக்க நேரிடும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் பேஸ்புக் கணக்குகளை உண்மையில் மனிதர்கள் தான் பயன்படுத்துகின்றனரா அல்லது போட் கொண்டு அவை பயன்படுத்தப்படுகிறதா என்பதை பேஸ்புக் கண்டறியலாம் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான துவக்க பணிகளின் ஸ்கிரீன்ஷாட் வெளியானதை தொடர்ந்து பேஸ்புக் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் இதுபோன்ற அம்சங்களை ஏற்கனவே செயல்படுத்த இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் இதற்கென ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும், மைக்ரோசாஃப்ட் சேவைகளில் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் பயணர்களின் முகத்தை கண்டு கணக்குகளை உறுதி செய்கின்றன.

இதுகுறித்து @flexlibris என்ற டுவிட்டர் பயணாளி, பேஸ்புக்கின் புதிய வெரிஃபிகேஷன் அம்சத்தை உறுதி செய்யும் ஸ்கிரீன்ஷாட்டினை பதிவிட்டுள்ளார். அதன்படி பயணரின் முகம் தெளிவாக காணப்படும் புகைப்படத்தை சமர்பிக்க பேஸ்புக் சார்பில் கோரப்படுகிறது. பின் உறுதி செய்யப்பட்டதும் பேஸ்புக் சர்வெர்களில் இருந்து அந்த புகைப்படம் அழிக்கப்பட்டு விடும் என பேஸ்புக் ஸ்கிரீன்ஷாட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சோதனைகளை பேஸ்புக் உறுதி செய்துள்ளதோடு, இந்த அம்சம் பேஸ்புக்கில் இருந்து வெவ்வேறு தளங்கள், கணக்குகளை உருவாக்குவது, ஃபிரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்புவது அல்லது விளம்பர கட்டணங்கள் மற்றும் புதிய விளம்பரங்களை உறுதி செய்வது போன்ற அம்சங்களில் பேஸ்புக் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டறிய ஆட்டோமேட்டெட் மற்றும் மேனுவல் போன்ற அம்சங்களை சோதனை செய்வதில் ஒரு அம்சமாக புதிய போட்டோ டெஸ்ட் அம்சம் இருக்கிறது என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நடவடிக்கைகளை கண்டறியும் வழிமுறைகள் அதாவது புகைப்படத்தை சரியானது தானா என்பது உள்ளிட்டவற்றை முழுமையாக தாணியங்கி முறையில் நடைபெறுகிறது. கணக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்து தானா என்பதை பேஸ்புக் புகைப்படம் மூலம் சரியாக கண்டறியும். இந்த சோதனை முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற்றதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் புகைப்படங்களை சோதனை செய்யும் போது சிலரது கணக்குகள் தானாக லாக் அவுட் ஆனதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அதாவதுது, 'தற்சமயம் உங்களால் உங்களது கணக்கை லாக் இன் செய்ய முடியாது, உங்களது புகைப்படம் உறுதி செய்யப்பட்டதும் உங்களை தொடர்பு கொள்கிறோம் என்ற தகவல் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து உங்களது கணக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக லாக் அவுட் செய்யப்படுகிறது' என பேஸ்புக் தெரிவித்தது.

சீன எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய சீன எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் வீசாட், ட்ரூகாலர், யுசி பிரவுசர் மற்றும் யுசி நியூஸ் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ராணுவம் சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது தகவல் திருட்டு உள்ளிட்டவற்றை புதிய உத்தரவு மூலம் தடுக்க முடியும்.
சர்வதேச உளவுத்துறை அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் தகவல்களை திருட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அனைத்து ராணுவ வீரர்களும் சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மட்டுமின்றி மத்திய ஆயுதப்படை, இந்தியா-திபெத் எல்லை காவல் படையினர் 4,057 கிலோமீட்டர் நீளமுள்ள லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்படையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் படி தொடர்ச்சியாக பல்வேறு உத்தரவுகளை வீரர்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகிறது.
இதன்மூலம் அனைத்து வீரர்களையும் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் மூலம் பரவும் சைபர்செக்யூரிட்டி சார்ந்த அச்சுறுத்தல்களில் சிக்காமல் பாதுகாக்க முடியும். அலுவலக மற்றும் தனித்துவ பயன்பாடு என ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமானதாகும். குறிப்பாக சீனாவை சேர்ந்த மின்சாதனங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய விமானப்படை சார்பில் அனைத்து அதிகாரிகள் மற்றும் விமானிகளும் அவர்களை சார்ந்த குடும்பத்தாரும் சியோமி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தது. இவை இந்தியாவில் இருந்து தகவல்களை சீனாவிற்கு பரிமாறிக் கொள்ளும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் லடாக், இமாச்சல் பிரதேச எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சர்ந்த டூல்களை பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்து அதற்கான அம்சங்களை வழங்கி வருகிறது.
புதுடெல்லி:
ஸ்பைடர் பட பாணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் புதிய அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பேஸ்புக் லைவ் அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவரை பேஸ்புக் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் பதிவு அல்லது லைவ் வீடியோ (நேரலை வீடியோ) உள்ளிட்டவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர் பயன்படுத்தும் போது பேடெர்ன் அங்கீகாரம் (pattern recognition) எனும் வழிமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கண்டறியும். இந்த அம்சம் ஐரோப்பிய யூனியன் தவிர உலகின் மற்ற பகுதிகளில் வழங்கப்படுகிறது.
பேஸ்புக் சேவையை பாதுகாப்பான சமூகமாக உருவாக்கும் பணிகளின் ஒரு அங்கமாக பேஸ்புக் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களில் யாரேனும் மன சோர்வில் இருக்கும் போது அவருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்து வருகிறது என பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் புரோஆக்டிவ் டிடெக்ஷன் அம்சத்தின் அங்கமாக உடனடி பதில் அளித்தவர்களுடன் இணைந்து பேஸ்புக் பணியாற்றியுள்ளது. அதன்படி பேஸ்புக் பதவுகளில் உதவி கோரும், அல்லது பிரச்சனைகளை குறிக்கும் சில வார்த்தைகளை கொண்டவை கண்டறியப்படுகிறது.
இந்த அம்சத்தின் கீழ் சில இடங்களில் யாரும் அறியாத சில வீடியோக்களையும் தொழில்நுட்ப உதவியுடன் பேஸ்புக் கண்டறிந்துள்ளது என ரோசென் செரிவித்துள்ளார். தற்கொலை தடுப்பு மற்றும் சுய தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழிகாட்டுவதில் அனுபவம் மிக்க குழுவினர் பேஸ்புக்கில் பணியாற்றி வருகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் சவால்கள், சுய தீங்கு மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் வார்த்தைகள், ஹேஷ்டேக் மற்றும் குரூப் பெயர்களை இந்தியாவில் இயங்கி வரும் தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து சேகரிப்பதாக தெரிவித்தது. உலக தற்கொலை தடுப்பு தினமான செப்டம்பர் 10-ம் தேதி துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தற்கொலை தடுப்பு மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் குழுவினர் சார்ந்த டூல்களை இந்திய பயனர்களின் நியூஸ் ஃபிடில் பேஸ்புக் வழங்க துவங்கியது.

பேஸ்புக் தளத்தில் கமெண்ட்களில் நண்பர்களை டேக் (tag) செய்ய புதிய ஷார்கட் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
பேஸ்புக் பதிவுகளின் கமெண்ட்களில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கமெண்ட்களில் நண்பர்களின் பெயரை டைப் செய்யும் முன் @ எனும் குறியீடை டைப் செய்து டேக் செய்யும் படி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய தகவல்களின் படி பேஸ்புக் கமெண்ட்களில் மென்ஷன் ஏ ஃபிரெண்ட் என்ற பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கிளிக் செய்தால் பயனர்களின் நண்பர்கள் பட்டியல் தோன்றும், இதை ஸ்கிரால் செய்து டேக் செய்ய முடியுமாம்.

முழுமையான பெயர்களை டைப் செய்து அதன்பின் பரிந்துரைகளின் படி டேக் செய்வதை தவிர்த்து பிரத்யேக பட்டன் மூலம் டேக் செய்வது பயனுள்ளதாகவும், மிக எளிமையாகவும் இருக்கும். இதேபோன்ற அம்சம் பேஸ்புக் பதிவிடும் போது வழங்கப்பட்டுள்ள நிலையில், கமெண்ட்களில் டேக் செய்யவும் வழங்கப்பட உள்ளது.
தற்சமயம் இந்த அம்சம் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் உண்மையில் வழங்கப்படுமா என்பதும் கேள்வி குறியாகவே உள்ளது.

உலகம் முழுக்க சுமார் 120 கோடி வாடிக்கையாளர்கள் ஷேர்இட் (SHAREit) செயலியை பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் தரவுகளை பரிமாற்றம் செய்ய உதவும் பிரபல செயலியான ஷேர்இட் உலகம் முழுக்க 120 கோடி வாடிக்கையாளர்கள் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மார்ச் 2014-இல் ஒரு கோடி பேர் டவுன்லோடு செய்திருந்த ஷேர்இட் செயலி வெறும் இரண்டறை ஆண்டுகளில் 120 கோடி பயனர்களை பெற்றுள்ளதாக ஷேர்இட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும் ஷேர்இட் செயலி கொண்டு ஸ்மார்ட்போன்களிடையே தரவுகளை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக ஷேர்இட் இருப்பதற்கு எங்களின் சர்வதேச பயனர்களுக்கு நன்றியும், பெருமையாக உணர்கிறோம். பெரும்பாலான சந்தைகளில் சமூக தரவுகளை ஒருங்கிணைந்து பரிமாற்றம் செய்யும் செயலிகளில் அனைத்து வயதினர் பிரிவுகளில் பிரபல செயலியாக இருக்கிறது.
இசை, வீடியோ, புகைப்படம், செயலி உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போன்களிடையே பரிமாற்றம் செய்ய ஷேர்இட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என ஷேர்இட் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜேசன் வாங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் 120 கோடி பயனர்களை கொண்டுள்ள ஷேர்இட் செயலியில் இந்தியாவில் மட்டும் 30 சதவிகிதம் பேர் அதாவது 30 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த செயலியில் பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதியை சேர்த்து வருகிறது. தற்சமயம் 39 நாடுகளில் 200க்கும் அதிகமான மொழிகளில் ஷேர்இட் பயன்படுத்த முடியும்.
ஷேர்இட் மேற்கொண்ட ஆய்வில் இந்த செயலியை 16 முதல் 28 வயதுடைய வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

பேஸ்புக் மெசன்ஜர் செயிலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனையை போக்கியுள்ளது.
புதுடெல்லி:
பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் புதிய அப்டேட் 4K ரெசல்யூஷன் தரத்தில் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி, திரும்ப பெறும் வசதியை வழங்கியுள்ளது. இத்துடன் பேபால் சப்போர்ட், புதிய ஃபில்ட்டர்கள், ஸ்டிக்கர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட் புகைப்படங்களை அதிக தரத்தில் பரிமாற்றம் செய்யும் என்பதால் முந்தைய அப்டேட்டில் குறைந்த தரமுள்ள புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரச்சனை இனி இருக்காது.
தகவல் பரிமாற்றத்திற்கு எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் புகைப்படங்கள் மற்றும் எமோஜி என பல நிறங்களில் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். புதிய அப்டேட் மூலம் மெசன்ஜர் செயலியில் 4K ரெசல்யூஷன் புகைப்படங்கள் அல்லது 4096x4096 தர படங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
தற்தமயம் விற்பனையாவதில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான ரெசல்யூஷன் இதுவாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மெசன்ஜர் செயலியில் 1700 கோடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.

குறைந்த தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்பும் போது மெசன்ஜரில் இருந்த அதே வேகத்திலேயே 4K புகைப்படங்களும் அனுப்பப்படுகின்றன. வழக்கமான வேகத்தில் அதிக தரமுள்ள புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் புகைப்படத்தை சூம் செய்து தெளிவாக பார்க்க முடியும்.
மெசன்ஜர் செயலியில் 4K தரத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முதலில் மெசன்ஜர் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். புதிய அப்டேட் பெற்ற செயலியில் முன்பை போன்றே புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மெசன்ஜர் அப்டேட் முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஹாங் காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மேலும் பல நாடுகளில் இந்த அம்சம் வழங்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் வாட்ச் வீடியோ சேவை அமெரிக்காவில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வாட்ச் வீடியோ சேவையை வெளியிட்ட பேஸ்புக், இந்த சேவையை இந்தியாவிலும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பேஸ்புக்கின் வாட்ச் வீடியோ சேவை வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. வாட்ச் வீடியோ ஸ்டிரீமிங் சேவையில் நேரலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வீடியோ தரவுகளை பார்க்க முடியும்.
ஜூலை மாத நிலவரப்படி இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24.1 கோடியாக உள்ளது. இந்தியாவில் 40 கோடி இண்டர்நெட் பயனர்கள் உள்ளதால், பேஸ்புக்கின் வீடியோ சேவை இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கின் வீடியோ சேவையில் நகைச்சுவை, வாழியல், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பிரிவுகளில் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். ஒவ்வொரு பிரிவிலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் படி கஸ்டமைஸ் செய்ய முடியும். பேஸ்புக்கின் வீடியோ டேப் ஆப்ஷனில் வழங்கப்படும் இந்த அம்சம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பேஸ்புக்கின் பிரபல தன்மையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் விரும்பும் தரவுகளை பெற முடியும். இத்துடன் வீடியோ தயாரிப்பாளர்களுக்கு இந்த சேவையை கொண்டு தங்களது வீடியோவை பெரும்பாலானோருக்கு கொண்டு செல்ல முடியும். வாட்ச் சேவையை மட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற வட்டார மொழி தரவுகளை வழங்கும் சேவையை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் குரோம்புக் லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல்புக் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் கழற்றக்கூடிய வசதி கொண்ட குரோம்புக் லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் குரோம்புக் பார்க்க சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல்புக் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
குரோம் அன்பாக்ஸ்டு வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த சாதனம் அடுத்த ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கும் நுகர்வேர் மின்சாதன விழாவில் (CES 2018) அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே வெளியாகலாம் என்ற வகையில் இந்த சாதனத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவுற்றிருக்கலாம் என எதிரிபார்க்கப்படுகிறது. எனினும் இந்த சாதனம் செப்டம்பர் மாதம் முதல் உருவாக்கப்படுவதாகவும், இதில் இன்டெல் 7-ம் தலைமுறை கேபிலேக் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி புக் என அழைக்கப்படும் இந்த சாதனத்தில் கழற்றக் கூடிய கீபோர்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் குறியீட்டு பெயர் நௌடிலஸ் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இதுபோன்ற குரோம்புக் சாதனங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.

அந்த வகையில் புதிய சாம்சங் குரோம்புக் சாதனம் விற்பனைக்கு வருவது குறித்த அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல்புக் சாதனம் வெளியிடப்பட்டது. இந்த லேப்டாப் இன்டெல் கோர் i5 பிராசஸர் + 128 ஜிபி எஸ்எஸ்டி கொண்ட மாடலின் விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று 650 டாலர்களுடன் 200 மற்றும் 650 டாலர்கள் அதிகமான விலையில் இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 360 கோணத்தில் திரும்பும் வசதி வழங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் விரும்பும் கோணங்களில் சாதனத்தை பயன்படுத்த முடியும்.
சில சிறப்பம்சங்களை பொருத்த வரை கூகுள் பிக்சல்புக் சாதனத்தில் 12.3 இன்ச் ஸ்கிரீன் மற்றும் ரெசல்யூஷன், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூகுள் அசிஸ்டண்ட், குரோம் இயங்குதளம் மற்றும் 10 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய சாம்சங் குரோம்புக் சாதனத்தில் எஸ் பென் போன்ற ஸ்டைலஸ் மற்றும் கழற்றக்கூடிய கீபோர்டு உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒ.எல்.எக்ஸ். போன்றே பயன்படுத்திய பழைய பொருட்களை விற்பனை செய்யும் சேவையை இந்தியாவில் பேஸ்புக் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
பேஸ்புக் இந்திய செயலியில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக் செயலியின் மார்கெட்பிளேஸ் (Marketplace) என்ற அம்சத்திற்கான சோதனை மும்பையில் துவங்கியுள்ள நிலையில், விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கிறது.
பேஸ்புக்கில் உள்ள மார்கெட்பிளேஸ் அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யவும், மற்றவர்கள் விற்பனைக்கு பதிவிட்ட பொருட்களை வாங்கவும் முடியும். இந்த அம்சம் இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். மற்றும் குவிக்கர் போன்ற தளங்கள் வழங்கும் சேவையை போன்றே இருக்கிறது.
பேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் சேவை அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த சேவை ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டது. இந்தியாவில் குவிக்கர் போன்றே மார்கெட்பிளேஸ் வேலை செய்யும்.

ஒவ்வொரு மாதமும் 200 கோடி பயனர்களுடன் பேஸ்புக் குரூப்களை கொண்டு பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் செயலியில் ஷாப் ஐகான் விற்பனைக்கு உள்ள பொருட்களை பட்டியலிடும். இதில் நீங்கள் விற்பனை செய்ய வேண்டிய பொருளின் புகைப்படத்தை அப்லோடு செய்து முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று வெவ்வேறு பிரிவுகளில் கிடைக்கும் பொருட்களை வாங்க முடியும்.
இந்தியாவில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்கவும் ஓ.எல்.எக்ஸ். போன்ற தளங்கள் பிரபலமாக இருக்கும் நிலையில் பேஸ்புக் தளத்திலும் இதேபோன்ற சேவை பரபலாக வழங்கப்பட இருக்கிறது. ஐரோப்பாவில் பேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் கிரைக்ஸ்லிஸ்ட் மற்றும் ஈபே உள்ளிட்ட சேவைகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.