என் மலர்tooltip icon

    கணினி

    ரிலையன்ஸ் ஜியோபோன் இரண்டாம் கட்ட விற்பனை குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், அமேசான் தளத்தில் ஜியோபோன் விற்பனை செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட் பீச்சர்போன் என அழைக்கப்படும் ரிலையன்ஸ் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் பிரபலமாக இருந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோபோன் விற்பனை மீண்டும் துவங்க பெரும்பாலானோரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அமேசான் வலைதளத்தில் விற்பனையாளர் ஒருவர் ஜியோபோன்களை விற்பனைக்கு பட்டியலிட்டிருந்தார்.

    அமேசான் தளத்தில் ஜியோபோன் விலை ரூ.1,690 என்றும் விநியோகம் செய்ய கூடுதலாக ரூ.100 வரை வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ.1,790 வரை செலுத்த வேண்டும்.

    ஜியோ விKற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூ.1500 மட்டும் செலுத்தி வாங்க முடியும். இத்துடன் ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் செலுத்தும் முன்பணத்தை முழுமையாக திரும்ப பெற முடியும். ஜியோ விதிமுறைகளுடன் முன்பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப பெறுவதோடு வாடிக்கையாளர்கள் ஜியோபோனினை மூன்று ஆண்டுகள் நிறைவுற்றதும் திரும்ப வழங்க வேண்டும்.



    விலை அதிகம் என்பதோடு மட்டுமின்றி அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ள ஜியோபோனில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான ஜியோபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மட்டுமே வழங்கப்பட்டது. அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்த ஜியோபோன் நம்பகத்தன்மை கேள்விகுறியாகவே இருக்கிறது.

    இன்று காலை முதல் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்த ஜியோபோன் தற்சமயம் நீக்கப்பட்டிருக்கிறது. அமேசானில் போலி ஜியோபோன் விளம்பரம் நீக்கப்பட்டு, ஜியோபோன் பேக் கவர் விளம்பரம் காணப்படுகிறது. நீக்கப்பட்ட போலி ஜியோபோன் F90M  என்ற மாடல் பெயர் கொண்டிருந்தது.

    ரிலையன்ஸ் ஜியோபோன் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவன ஆண்டு பொதுகூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஜியோபோனில் ஜியோ செயலிகளும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனத்தின் மேட்புக் டி நோட்புக் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சீன மின்சாதனம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் மேட்புக் டி நோட்புக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள புதிய நோட்புக் டி (2018) 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட GPU கொண்டுள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மேட்புக் டி (2018) இம்முறை பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. முன்னதாக ஹுவாய் நிறுவனம் மேட்புக் X மற்றும் மேட்புக் இ உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்தது. ஹூவாய் புதிய மேட்புக் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்குகிறது.



    ஹூவாய் மேட்புக் டி (2018) சிறப்பம்சங்கள்:


    - 15.6 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i5, i7 பிராசஸர் மற்றும் பிரத்யேக Nvidia GeForce MX150 வழங்கப்பட்டுள்ளது. இதன் GPU முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஹூவாய் நோட்புக் மூன்று மாடல்கள் - விலை குறைந்த மாடல் இன்டெல் கோர் i5-8250U பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி., Nvidia GeForce MX150 GPU கொண்ட மாடல் CNY 5,188  அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மாடல் இன்டெல் கோர் i5-8250U சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. + 1000 ஜிபி எச்.டி.டி. மற்றும் அதே GPU கொண்ட மாடல் CNY 5,488 அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    இதன் பிரீமியம் மாடல் மேட்புக் 2018 இன்டெல் கோர் i7-8550U பிராசஸர், 8 ஜிபி மெமரி, 128 ஜிபி எஸ்.எஸ்.டி. + 1000 ஜிபி எச்.டி.டி, Nvidia GeForce MX150 கிராஃபிக்ஸ் கார்டு கொண்ட மாடல் CNY 6,688 அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மேட்புக் டி மாடலில் 43.3Wh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி முழுமையான சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 10 மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் டால்பி பானரோமிக் ஸ்பீக்கர் சிஸ்டம், இரண்டு யு.எஸ்.பி. 3.0 போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் யு.எஸ்.பி. 2.0 போர்ட் மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு துவங்குவோர் தங்களின் உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆதாரில் உள்ள பெயரை பதிவு செய்யக் கோரும் அம்சத்தினை சோதனை செய்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு துவங்குவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய தங்களது ஆதாரில் உள்ள பெயரையே பதிவு செய்ய கோரும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

    புதிய அம்சத்தின் மூலம் ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்படும் போலி கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் பயன்படுத்திப்பட்டு வருகிறது. உலகளவில் ஃபேஸ்புக் பயனாளிகள் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

    ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் புதிய கணக்கு துவங்குவோருக்கு ஆதாரில் உள்ள பெயர் ('name as per Aadhaar') என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆதாரில் உங்களது பெயர் என்ன? ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்தும் போது நண்பர்களால் உங்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். ரெடிட் மற்றும் ட்விட்டர் பயனர்களால் முதலில் கண்டறியப்பட்டது.  

    எனினும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை, ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் மட்டும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் காணப்பட்டது.



    'மக்கள் தாங்கள் நன்கு அறியப்படும் பெயர்களை ஃபேஸ்புக்கில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். புதிதாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போது கூடுதல் மொழிகளை வழங்கும் சோதனையில், மக்கள் தங்களது ஆதார் பெயரை பயன்படுத்துவதன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அறியப்பட உதவியாக இருக்கும்' என ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மக்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளும் வசதியுடன் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது, எனினும் மக்கள் தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கட்டாயமாக்கப்படவில்லை. ஃபேஸ்புக் சேவையை மொபைலில் பயன்படுத்தி வரும் சிறிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் அதிகாரி வழங்கியுள்ள தகவல்களின் படி ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதில் ஃபேஸ்புக் கவனமாக உள்ளது.
    உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டர் சாதனத்தை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டரை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 49-இன்ச் அல்ட்ரா-வைடு வளைந்த கேமிங் மாணிட்டர் (LC49HG90) 32:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 3840x1080 இரட்டை ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

    இந்த மாணிட்டர் 1800R கர்வேச்சர், அல்ட்ரா-வைடு 178 கோணத்தில் பார்க்கும் வசதி மற்றும் ஆக்சிலரேடெட் ரீஃப்ரெஷ் ரேட் மற்றும் 1 ms மோஷன் பிக்சர் ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் மேம்படுத்தப்பட்ட நான்கு-சேனல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணிட்டர் மோஷன் பிளர் டிடெடர் மற்றும் அதிக துல்லியமான புகைப்படங்களை திரை முழுக்க ஒளிர செய்யும்.

    இத்துடன் எச்டிஆர் (ஹை டைனமிக் ரேன்ஜ்) தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வீடியோ மற்றும் புகைப்படங்களை அதிக துல்லியமாக பார்க்க முடியும். இத்துடன் குவாண்ட்டம் டாட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால் சிறப்பான ஒளி செயல்திறன் மற்றும் அகலமான கலர் ஸ்பெக்ட்ரம் வழங்குகிறது.



    ஐ சேவர் மோட் மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும். இந்த மாணிட்டரின் ஐ தேவர் மோட் திரையில் உள்ள நீல நிற ஒளிகற்றைகளை கருவிழிக்கு நிறங்களை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தும், இதனால் திரையை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கண் சோர்வு ஏற்படாமல் இருக்கும்.

    சாம்சங் 49-இன்ச் அல்ட்ரா-வைடு வளைந்த கேமிங் மாணிட்டர் இந்தியாவில் ரூ.1,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதனை சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் ஆஃப்லைன் முறையில் அனைத்து விற்பனையகங்களிலும் விரைவில் விற்பனைக்கு வரயிருக்கிறது.
    ஒபேரா மினி மற்றும் ஓபேரா பிரவுசர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒபேரா சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நவம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் 10 கோடியை கடந்துள்ளது. ஓபேரா மினி மற்றும் ஓபேரா பிரவுசர் சேவைகளை வழங்கி வரும் ஓபேரா விரைவில் செய்தி மற்றும் தரவுகளை வழங்குவதற்கென பிரத்யேக செயலியை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஒபேரா வெளியிட இருக்கும் புதிய சேவைகள் செய்திகள் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ஓபேராவின் சொந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்குகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு இன்ஜின் வாடிக்கையாளர்கள் அதிகம் வாசிக்கும் தரவுகளை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு விருப்பமான செய்திகளை வழங்கும்.



    இதன் மூலம் செய்திகள் மற்றும் இதர தகவல்களை மிக வேகமாக பெறுவதோடு வாடிக்கையாளர்கள் விரும்பும் செய்திகள் மற்றும் வீடியோக்களை பெற முடியும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஓபேரா மினி பிரவுசர் அந்நிறுவனத்திற்கு 50% வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக ஓபேரா தெரிவித்துள்ளது.

    நவம்பர் மாத நிலவரப்படி ஓபேரா பிரவுசரில் வாடிக்கையாளர்கள் தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் தினசரி அடிப்படையில் சராசரியாத 65 முதல் 81 செய்திகளை வாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல் வழங்குவோரும் அதிகப்படியான தகவல்களை ஓபேராவில் வழங்க முடியும்.

    தற்சமயம் வரை 800க்கும் அதிகமான வலைத்தளம் மற்றும் பதிப்பக நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. ஓபேரா ஹபாரி செயலியும் ஓபேரா பிரவுசர் போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யம் மற்றும் வித்தியாச தகவல்களை வழங்க வணிக ரீதியாக 800க்கும் அதிகமான வலைத்தளங்கள் மற்றும் பதிப்பகங்களுடன் இணைந்துள்ளது.
    பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. புதிய அம்சம் கொண்டு பல்வேறு ட்விட்களை ஒரு ஸ்லைடுஷோ போன்று உருவாக்க முடியும்.

    அந்த வகையில் ட்விட்டர் பயன்படுத்துவோர் தங்களது ட்விட் மற்றும் அவர்களை பின்தொடர்வோரின் ட்விட், டிரென்டிங் ஹேஷ்டேக் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து தனி ஸ்டோரி போன்று பதிவிடலாம். மேலும் மொமன்ட்ஸ்களை ட்விட் செய்யும் போது தனி நபர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும்.  

    முன்னதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய மொமன்ட்களை பார்க்கும் வசதி மட்டும் வழங்கப்பட்ட நிலையில், பயனர்கள் தங்களது மொமன்ட்களை உருவாக்க முடியும். ட்விட்டர் அல்லது ட்விட்டர் லைட் செயலியில் உள்ள எக்ஸ்ப்ளோர் டேப் கிளிக் செய்து மொமன்ட்ஸ் உருவாக்க முடியும்.



    அமெரிக்காவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொமன்ட்ஸ் அம்சத்தில் பல்வேறு பிரிவுகளில் புதிய தகவல்களை பார்க்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தினசரி நடவடிக்கைகளை மொமன்ட் வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    முன்னதாக ட்விட்டர் த்ரெட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. த்ரெட்ஸ் (threads) என அழைக்கப்படும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக ட்விட்டர் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் மூலம் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய த்ரெட்ஸ் அம்சம் மூலம் வழக்கத்தை விட இருமடங்கு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய முடியும்.

    ட்விட்ஸ்டார்ம் என்ற அம்சம் நீணட காலமாக சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அந்த வகையில் ட்விட்டர் இணை நிறுவனர் மார்க் ஆண்டர்சன் அவ்வப்போது நீண்ட ட்விட்களை பதிவிடுவார். பின் இந்த அம்சத்திற்கான தேவை பயனர்களிடையே அதிகரித்த நிலையில் ட்விட்டரில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த 140 வார்த்தைகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐமேக் ப்ரோ டெஸ்க்டாப் விற்பனை அமெரிக்காவில் துவங்கியுள்ளதை தொடர்ந்து விரவைில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக டெஸ்க்டாப் கணினியான ஐமேக் ப்ரோ விற்பனை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. புதிய ஐமேக் ப்ரோ விலை 4,999 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,20,760 முதல் துவங்குகிறது.

    முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐமேக் ப்ரோ விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.4,15,000 முதல் துவங்கும் என்றும் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர் அமர்வில் ஐமேக் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐமேக் ப்ரோ சாதனத்தில் 27 இன்ச் ரெட்டினா 5K (5120x2880 பிக்சல்) டிஸ்ப்ளே, 100 கோடி நிறங்கள், 500 நிட்ஸ் பிரைட்னஸ், வைடு கலர், 8-கோர், 10-கோர் அல்லது 18-கோர் சியோன் பிராசஸர் மற்றும் 8 ஜிபி ரேடியான் ப்ரோ வீதா 56GPU, 16 ஜிபி ரேடியான் ப்ரோ வீகா GPU, 32 ஜிபி 2666 மெகாஹெர்ட்ஸ் மெமரி, 1000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்படுகிறது.



    புதிய ஐமேக் ப்ரோ புதிய ரேடியன் ப்ரோ வீகா GPU மற்றும் 16 ஜிபி வரை ஹை-பேண்ட்வித் மெமரி, 3D ரென்டரிங், ஹை ஃபிரேம் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் லெர்னிங், உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 ஜிபி எஸ்.எஸ்.டி. மற்றும் 128 ஜிபி இசிசி மெமரி, நான்கு தன்டர்போல்ட் 3 போர்ட், இரண்டு உயர் ரக RAID அரே மற்றும் இரண்டு 5K டிஸ்ப்ளேக்களுடன் ஒரே சமயத்தில் இணையும் வசதி கொண்டுள்ளது.

    மேலும் 10 ஜிபி ஈத்தர்நெட், 10 மடங்கு வேகமான நெட்வொர்க்கிங் வசதியை முதல் முறை வழங்குகிறது. அமெரிக்காவில் 8-கோர் மற்றும் 10-கோர் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் 14-கோர் மற்றும் 18-கோர் பதிப்புகள் 6 முதல் 8 வாரங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் 18-கோர் மாடல் 13,199 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,46,910 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் சமீபத்தில் சோதனை செய்து வந்த த்ரெட்ஸ் என்ற அம்சத்தை அதன் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    ட்விட்டர் தளத்தில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கத்திற்கு மாற்றாக ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும். நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட இந்த அம்சம் பயன் தரும்.  

    த்ரெட்ஸ் (threads) என அழைக்கப்படும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக ட்விட்டர் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் மூலம் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய த்ரெட்ஸ் அம்சம் மூலம் வழக்கத்தை விட இருமடங்கு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய முடியும்.

    ட்விட்ஸ்டார்ம் என்ற அம்சம் நீணட காலமாக சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அந்த வகையில் ட்விட்டர் இணை நிறுவனர் மார்க் ஆண்டர்சன் அவ்வப்போது நீண்ட ட்விட்களை பதிவிடுவார். பின் இந்த அம்சத்திற்கான தேவை பயனர்களிடையே அதிகரித்த நிலையில் ட்விட்டரில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த 140 வார்த்தைகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ட்விட்டர் த்ரெட்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது கருத்துக்களை முன்பை விட இருமடங்கு அதிக வார்த்தைகளில் பதிவிட முடியும். ட்விட்டரில் தினமும் ஆயிரக்கணக்கான த்ரெட்கள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



    ட்விட்டரில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 280 வார்த்தைகள் என்ற அளவு மாற்றப்படாமல் புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அம்சத்தை பயன்படுத்த ஒரு ட்விட் செய்ததும் கீழே காணப்படும் (+) குறியை கிளிக் செய்து தொடர்ச்சியான ட்விட் பதிவிட முடியும்.

    ஒவ்வொரு த்ரெட் நிறைவு செய்ததும், ஸ்பேஸ் பார் தட்டினால் புதிய த்ரெட் கிடைக்கும். கணினியில் + குறியை பயன்படுத்தி புதிய த்ரெட்களில் கருத்துக்களை பதிவிட முடியும். அந்த வகையில் தொடர்ச்சியாக 25 முறை புதிய த்ரெட்களை உருவாக்க முடியும். இதை தொடர்ந்து பயன்பாடுகளுக்கு ஏற்ப இந்த அம்சம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய அம்சத்திற்கான அப்டேட் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் கணினிகளில் வழங்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் ஒரு வார காலத்தில் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப், ஸ்ன்படிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜிகாபிட் எல்டிஇ வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றுள்ளது.
    தைபே:

    தாய்வானில் நடைபெற்று வரும் ஸ்னப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய அசுஸ் நோவாகோ (TP370) ஜிகாபிட் எல்டிஇ வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றுள்ளது. அசுஸ் நோவாகோ லேப்டாப் 4 ஜிபி ரேம், 64 ஜிபி UFS 2.0 கொண்ட மாடல் 599 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,662 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,571 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அசுஸ் கன்வெரிடிபிளி லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், ஜிகாபிட் ஸ்னாப்டிராகன் X16 எல்இடி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வீட்டு வைபை இணைப்பை விட அதிவேக டவுன்லோடு வேகத்தை வழங்கும் என அசுஸ் தெரிவித்துள்ளது.

    இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள நான்கு ஆன்டெனாக்கள் அதிவேக கனெக்டிவிட்டியை எல்டிஇ மேம்படுத்தப்பட்ட கேட் 16 செல்லுலார் நெட்வொர்க்கிங் மூலம் வழங்குகிறது. இந்த சாதனத்தில் 22 மணி நேர பேக்கப் மற்றும் 30 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் பில்ட்-இன் இசிம் வழங்கப்பட்டுள்ளதால் சீரான கனெக்டிவிட்டியை பெற முடியும்.



    இசிம் என்பது இன்டகிரேட் செய்யப்பட்ட சிப் என்பதால் எந்நேரமும் இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும், இதனால் அடிக்கடி நெட்வொர்க் மாறும் வாடிக்கையாளர்கள் சிம் கார்டுகளை கழற்றி மாற்ற வேண்டிய அவசியத்தை வழங்காது. வாடிக்கையாளர்கள் விண்டோஸ் ஸ்டோப் மூலம் தங்களிடம் உள்ள சிம் கார்டினை மிக எளிமையாக ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

    இசிம் வசதி மட்டுமின்றி கூடுதலாக 4ஜி மற்றும் 5ஜி பேண்ட் மூலம் அனுப்பப்படும் தரவுகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படுவதால், பொது வைபை இணைப்பை விட பாதுகாப்பான இணைய வசதியை பயன்படுத்தலாம் என அசுஸ் தெரிவித்துள்ளது.

    விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட அசுஸ் நோவாகோ லேப்டாப் விண்டோஸ் இன்க், விண்டோஸ் ஹெல்லோ மற்றும் கார்டனா போன்ற அம்சங்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 178 கோணத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
    சர்வதேச சந்தையில் பிரபலமான சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
    ஹூவாய்:

    சர்வதேச சந்தையில் பிரபலமான சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது புதிய பிராசஸரை ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

    சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டதோடு மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களில் குவால்காம் செய்து வரும் மேம்படுத்தல்கள் சார்ந்த அறிவிப்புகளை குவால்காம் வெளியிட்டது. கடந்த ஆண்டு குவால்காம் வெளியிட்ட ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட பிராசஸராக ஸ்னாப்டிராகன் 845 வெளியிடப்பட்டுள்ளது.



    புதிய சிப்செட் மேம்படுத்தப்பட்ட செயல்திறன், சிறப்பான திறன் பயன்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட இமேஜ் பிராசஸிங் திறன் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அடுத்த ஆண்டு (2018) வெளியாக இருக்கும் உயர்-ரக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஸ்னாப்டிராகன் 845 ஃபவுன்ட்ரி என்ற வகையில் சிலிகான் தயாரிப்பு பணிகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுவோம் என சாம்சங் நிறுவனத்தின் ஃபவுன்ட்ரி பிரிவின் தலைவர் மற்றும் பொது மேளாலர் இ.எஸ். ஜங் தெரிவித்துள்ளார். இத்துடன் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படுவதை சியோமி நிறுவனர் உறுதி செய்துள்ளார்.

    அழகிய வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை சியோமி உருவாக்கி வருகிறது. அத்தனை அம்சங்களையும் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் வழங்கி வரும் சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படும் என லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.
    குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்ப ஃபேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் கிட்ஸ் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    குழந்தைகள் பயன்படுத்துவதற்கென பிரத்யேக செயலியை ஃபேஸ்புக் வெளியிடுகிறது. குறுந்தகவல் அனுப்பும் வசதி கொண்ட புதிய செயலி குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் அவர்கள் அங்கீகரித்த நண்பர்களுடன் குறுந்தகவல் அனுப்பி சாட் செய்ய முடியும்.

    ஃபேஸ்புக் விதிகளின்படி சேவையை பயன்படுத்த முடியாத 13-வயதிற்கும் குறைவான குழந்தைகள் புதிய செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும். பெற்றோர் கட்டுப்படுத்தக் கூடிய அம்சங்கள் நிறைந்த மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் குழந்தைகளால் தங்களது நண்பர்களை சேர்க்கவோ, குறுந்தகவல்களை அழிக்கவோ முடியாது.



    குழந்தைகள் விரும்பும் நண்பர்களை செயலியில் அனுமதிப்பது, குறுந்தகவல்களை அழிப்பது போன்றவற்றை பெற்றோர் மட்டுமே செய்ய முடியும். மேலும் குழந்தைகளுக்கு என ஃபேஸ்புக் அல்லது மெசன்ஜர் கணக்கு வழங்கப்பட மாட்டாது, மாற்றாக இந்த செயலி பெற்றோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் கணக்கிலேயே எக்ஸ்டென்ஷன் போன்று வழங்கப்படும்.

    புதிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் முதற்கட்டமாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மெசன்ஜர் கிட்ஸ் செயலி ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மெசன்ஜர் கிட்ஸ் செயலி அமேசான் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் குழந்தைகளுக்கு கிடைக்கும் அம்சங்கள்:

    வீடியோ சாட்: பெற்றோர் அனுமதித்த நண்பர்களுடன் குழந்தைகளால் வீடியோ சாட் செய்ய முடியும். பெற்றோர் அனுமதித்த நண்பர்கள் மட்டுமே குழந்தைகளுக்கான செயலியின் ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.

    ஃபில்ட்டர்: இந்த அம்சம் கொண்டு குழந்தைகளால் பல்வேறு மாஸ்க், எமோஜி மற்றும் சவுண்டு எஃபெக்ட்களை பயன்படுத்தி மகிழ முடியும்.

    சாட்: மெசன்ஜர் கிட்ஸ் செயலியை கொண்டு குழந்தைகளால் புகைப்படம், வீடியோ மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை தங்களது பெற்றோர் அனுமதித்த காண்டாக்ட்களுக்கு மட்டும் அனுப்ப முடியும்.

    குழந்தைகளுக்கான சாதனத்தில் மென்ஜர் கிட்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்ததும், பெற்றோர் தங்களது ஃபேஸ்புக் கணக்கு மூலம் அங்கீகரிக்க வேண்டும். எனினும் குழந்தைகளுக்கு என தனி கணக்கு எதுவும் உருவாக்கப்பட மாட்டாது, மேலும் பெற்றோர் கணக்குகளை பயன்படுத்தும் வசதியை குழந்தைகளுக்கு வழங்காது.

    புதிய செயலியில் குழந்தைகளுக்கு என புதிய கணக்கு மட்டுமே துவங்கப்படும், மற்றபடி குழந்தைகளின் பயன்பாடு முழுவதையும் பெற்றோர் கட்டுப்படுத்த முடியும்.



    மெசன்ஜர் கிட்ஸ் மற்ற தகவல்கள்:


    புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலி குழந்தைகள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், அனைத்து டூல்கள் மற்றும் ஃபில்ட்டர்களும் குழந்தைகளுக்கான ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஃப்களும் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

    மெசன்ஜர் செயலியில் வரம்பு மீறும் நடவடிக்கைகளை குழந்தைகள் தெரிவிக்கும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து பெற்றோருக்கும் நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.

    முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான செயலி என்பதால் மெசன்ஜர் செயலியில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்யும் நோக்கில் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் திடீரென ஏற்பட்ட ரூட் லாக்-இன் எனப்படும் பாதுகாப்பு பிழை அனைத்து பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்பட்ட பிழை அடிக்கடி சாதனத்தை ரீபூட் செய்தது.

    டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை சரியாக 12.15 மணிக்கு ஏற்பட்ட பிழை அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த விடாமல், ரீஸ்டார்ட் செய்ததோடு, ஹோம் ஸ்கிரீன் தொடர்ந்து லோடு ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிழை ஐ.ஓ.எஸ். 11.1.2 இயங்குதளத்தை பயன்படுத்தும் சாதனங்களில் மட்டும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் சாதனங்களில் ஏற்பட்ட பிழையை தற்காலிகமாக சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. வழக்கமான அப்டேட்கள் செவ்வாய் கிழமைகளில் வெளியிடும் நிலையில் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட் சனி கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது.



    ஆப்பிள் ஐபோன், ஐபேட் மற்றும் ஐபாட் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செட்டிங்ஸ் சென்று அனைத்து செயலிகளிலும் நோட்டிபிகேஷன்களை இயக்க அனுமிதிக்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அப்டேட் பாதுகாப்பு பிழைகள் மட்டுமின்றி புதிய ஆப்பிள் பே கேஷ் அம்சத்தை வழங்குகிறது. இந்த அம்சம் மூலம் ஐமெசேஜ் அல்லது சிரி கமாண்ட் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பணத்தை அனுப்பவோ அல்லது பெறவும் முடியும். தற்சமயம் இந்த அம்சம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இத்துடன் ஐபோன் X, ஐபோன் 8 அல்லது ஐபோன் 8 பிளஸ் சீரிஸ்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மேம்படுத்தப்பட்டுவதோடு, வீடியோ கேமரா தரம் மேம்படுத்தப்பட்டு, மின்னஞ்சல் சார்ந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது. புதிய ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதளத்தில் கீபேட் ஆட்டோகரெக்ட் பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.
    ×