என் மலர்tooltip icon

    கணினி

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    மைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் ( Xbox One X) ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற E3 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் கன்சோலாக இருந்து வந்தது.
     
    புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 8-கோர் AMD சி.பி.யு, 6 TFLOPS ஜி.பி.யு. 12 ஜிபி DDR5 ரேம் மற்றும் 1000 ஜிபி ஹார்டு டிரைவ் கொண்டுள்ளது. இது வழக்கமான எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தை விட அதிக செயல்திறன் கொண்டிருப்பதோடு போட்டி நிறுவனமான சோனியின் பி.எஸ்.4 ப்ரோ-வை விட 50 சதவிகிதம் கூடுதல் சக்திவாய்ந்தது.

    முந்தைய மாடல்களை விட அதிக திறன் கொண்டிருப்பதால் புதிய எக்ஸ் பாக்ஸ்-ஐ கொண்டு 4K தரம் கொண்ட கேம்களையும் 60 fps வேகத்தில் சீராக விளையாட முடியும். பி.எஸ். 4 ப்ரோவுடன் ஒப்பிடும் போது புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி வழங்கப்படவில்லை என்பதால், வாடிக்கையாளர்கள் தனியே விர்ச்சுவல் ரியாலிட்டி கிட் வாங்க வேண்டும்.



    தற்சமயம் வரை ஃபோர்ஸா மோட்டார் ஸ்போர்ட் 7, சூப்பர் லக்கி டேல், அசாசின்ஸ் கிரீட் ஒரிஜின்ஸ், மிடில்-எர்த்: ஷாடோ ஆஃப் வார் மற்றும் ஃபிஃபா 18 உள்ளிட்ட கேம்களை விளையாடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கேம்களிலும் 4K UHD மற்றும் HDR வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரும்பாலான எக்ஸ் பாக்ஸ் ஒன் கேம்களில் இலவச அப்டேட் வழங்கப்படுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவு சிறப்பான அனுபவம் வழங்கும் கன்சோலாக இருக்கும் படி புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிநவீன கிராஃபிக்ஸ் உலகின் தலைசிறந்த கேம் கிரியேட்டர்களை உண்மையான 4K கேம்களை புதிதாக உருவாக்க வழி செய்யும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் விலை ரூ.44,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் டிரைலர் வீடியோவை கீழே காணலாம்..,


    வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்அப் ஏற்கனவே சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அடுத்த மாத வாக்கில் வழங்கப்படலாம் என்றும், பிப்ரவரி மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் பரிமாற்றம் செய்யும் ஆப்ஷனில் வாட்ஸ்அப் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

    பணம் பரிமாற்றம் செய்யும் வசதிக்கென வாட்ஸ்அப் வங்கிகளுடன் இணைந்திருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை அறிந்து கொள்ளும் என கூறப்படுகிறது. பணம் பரிமாற்றத்தை ஒருங்கிணைந்த பேமெண்ட் இன்டர்ஃபேஸ் கொண்டு நிறைவு செய்யும். வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் UPI சார்ந்த வழிமுறையை செயல்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பணம் பறிமாற்றம் செய்ய UPI  அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது. டிசம்பர் 2017-இல் மட்டும் 14.5 கோடி பறிமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

    அதன் படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை வாட்ஸ்அப் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வழங்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் பணம் பரிமாற்றம் செய்ய மத்திய அரசின் அனுமதியை வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெற்றது. 

    செயலியில் இந்த அம்சத்தை செயல்படுத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். எஸ்.எம்.எஸ். போன்று அதிவேகமாக பணம் அனுப்ப பல்வேறு நிலைகளில் என்க்ரிப்ஷன் செய்ய வேண்டும் என மூத்த வங்கி அதிகாரி தெரிவித்தார்.
    ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் அம்பலமான குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்திருக்கிறது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளில் சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்கள் நடைபெறுவதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒன்பிளஸ் 40,000 பேர் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 

    ஒன்பிளஸ் வலைத்தளத்தில் இருந்த மால்வேர் கோடு இதற்கு காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களது கம்ப்யூட்டர்களில் ஒன்று பாதிக்கப்பட்டிருக்கிறது, இதில் இணைக்கப்பட்டிருக்கும் கோட் வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடியுள்ளது. என ஒன்பிளஸ் அதிகாரி அந்நிறுவன வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    நவம்பர் மாத மத்தியில் இருந்து ஜனவரி 11-ம் தேதி வரை ஒன்பிளஸ் வலைத்தளத்தில் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சேமிக்கப்பட்ட கிரெடிட் கார்டு தகவல் அல்லது பேபால் கிரெடிட் கார்டு கொண்டோ அல்லது பேபால் கணக்கில் இருந்து பணம் செலுத்தியவர்கள் இந்த பாதிப்பில் சிக்கயிருக்க வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளது.   

    இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கோர முடியாது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு எங்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. விவரம் அறிந்து, விழிப்புடன் இருக்கும் இத்தகைய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதற்கு நன்றியுடன் இருப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, உள்ளூர் அதிகாரிகளுடன் விவரத்தை அறிந்து கொண்டு பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது. 

    இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், வங்கியை தொடர்பு கொண்டு தங்களது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழையை கண்டறிந்த பொறியாளருக்கு சுமார் ரூ.71 லட்சம் தொகையை கூகுள் நிறுவனம் வழங்கியிருக்கிறது.
    புதுடெல்லி:

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழையை கண்டறிந்த ஆராய்ச்சியாளருக்கு கூகுள் நிறுவனம் 112,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,83,300) வழங்கியுள்ளது. 

    ஆண்ட்ராய்டு பாதுகாப்பு விருதுகள் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குவாங் கோங் என்பவர், தான் கண்டறிந்த பிழையை சமர்பித்தார். இவரது பிழையை உறுதி செய்த கூகுள் கோங்-க்கு 1,05,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.66,90,075) சன்மானம் வழங்கியுள்ளது. 

    கூகுள் வரலாற்றில் இத்தகைய சன்மானம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இத்துடன் குரோம் ரிவார்ட்ஸ் திட்டத்தில் கூடுதலாக 7500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,78,900) வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைப்பக்கத்தில் இந்த பிழையின் தொழில்நுட்ப விவரங்களை கூகுள் பதிவிட்டிருக்கிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பிழையை கண்டறிந்து, கூகுளிடம் தெரிவித்தமைக்கு கோங் மற்றும் கியூஹூ 360 டெக்னாலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆல்பா குழுவினருக்கு கூகுள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட்டில் மட்டும் 42 பிழைகள் சரி செய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

    ஆண்ட்ராய்டு இயங்குதள பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு ரிவார்ட்ஸ் திட்டத்தில் பிழைகளை கண்டறியும் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு கூகுள் சார்பில் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2017-இல் கூகுள் பிக்சல் 2, கூகுள் பிக்சல், பிக்சல் XL மற்றும் கூகுள் பிக்சல் சி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ரிவார்ட்ஸ் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
    சியோமி நிறுவனம் 50 இன்ச் திரை கொண்ட Mi டி.வி. 4A மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைகாட்சியில் ஹெச்.டி.ஆர். தொழில்நுட்பம், 4K மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் புதிய Mi டி.வி. 4A 50 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சியோமி Mi டி.வி. 4A சீரிஸ் இன் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். புதிய 50 இன்ச் டி.வி. அந்நிறுவனத்தின் ஆறாவது மாடல் ஆகும்.

    புதிய 50 இன்ச் Mi டி.வி. 4A விலை CNY2399 அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சியோமி சாதனங்களை போன்று புதிய தொலைகாட்சி பெட்டி இந்தியாவில் வெளியிடுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    ஏற்கனவே ஐந்து தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் சியோமி நிறுவனத்தின் ஆறாவது மாடலாக புதிய 50 இன்ச் Mi டி.வி. 4A அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தொலைகாட்சியில் 4K UHD 3840x2160 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் ஹெச்.டி.ஆர்.10+HLG சப்போர்ட் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் ஃபிரேம்லெஸ் வடிவமைப்பு, இன்டகிரேடட் Mi டி.வி. பார், 10 ஸ்பீக்கர்கள், 2 வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-ஊஃபர்கள் வழங்கப்ட்டுள்ளது. புதிய மாடலில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொலைகாட்சியில் 3D ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இத்துடன் புதிய சியோமி தொலைகாட்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பேட்ச்வால் என அழைக்கப்படுகிறது. இந்த யூசர் இன்டர்ஃபேஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்து இயங்குகிறது. 

    புதிய Mi டி.வி. 4A 50 இன்ச் மாடலில் 64-பிட் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை, ப்ளூடூத், டால்பி மற்றும் டி.டி.எஸ். ஆடியோ (DTS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் தொலைகாட்சியை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கண் சோர்வு ஏற்படாமல் இருக்க ஏதுவாக திரை நிறம் பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் Mi ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல், ப்ளூடூத், குரல் அங்கீகாரம் (Speech Recognition), Mi டச் மற்றும் இன்ஃப்ராரெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    யூடியூப் டெஸ்க்டாப் போன்றே ஐ.ஓ.எஸ். மொபைல் செயலியிலும் டார்க் மோட் எனும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    யூடியூப் ஐ.ஓ.எஸ். மொபைல் செயலியில் டார்க் மோட் எனும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இத்தகவலை உறுதி செய்யும் வகையில் ரெடிட் வாடிக்கையாளர் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

    மேலும் புதிய டார்க் மோட் அம்சம் யூடியூப் செயலி 13.01.4 பதிப்பில் சில வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்படுவதால் இந்த அம்சம் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் யூடியூப் 13.01.4 பதிப்பிற்கு அப்டேட் செய்திருந்தாலும் இந்த அம்சம் வழங்கப்படவில்லை.

    யூடியூப் சார்பில் சர்வெர் மூலம் ஆக்டிவேட் செய்யப்படுவதே இதற்கு காரணம் ஆகும். மேலும் யூடியூப் 13.01.4 பதிப்பில் ஆப் ஸ்டோரில் டார்க் மோட் சார்ந்த தகவல் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக யூடியூப் டார்க் மோட் அம்சம் டெஸ்க்டாப் பதிப்புகளில் வழங்கப்பட்டது. இந்த அம்சத்தை யூடியூப் தளத்தின் வலதுபுறத்தில் கிளிக் செய்து ஆக்டிவேட் செய்ய முடியும். ஸ்மார்ட்போன்களுக்கு தற்தமயம் சோதனை செய்யப்படும் டார்க் மோட் அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ZTE கார்ப் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அறிவிப்பை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
    சான்பிரான்சிஸ்கோ:

    சின ஸ்மார்ட்போன் நிறுவனமான ZTE கார்ப் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனினை 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடுகிறது. 

    ZTE கார்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிக்சின் செங் இத்தகவலை வெளியிட்டார். மேலும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் வெளியிடப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2019-ம் ஆண்டின் துவக்கதில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும் நாட்டில் நெட்வொர்க் கிடைப்பதை பொருத்து திட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் 5ஜி வசதி கொண்ட டேப்லெட் அல்லது வயர்லெஸ்-இண்டர்நெட் ஹப் ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.



    ZTE கார்ப் சார்பில் 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் நிலையில், ஹூவாய் மற்றும் ZTE தயாரித்த மொபைல் போன்களை அமெரிக்காவில் பயன்படுத்த அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்வதற்தகான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5ஜி சோதனை செய்ய ZTE நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒப்பந்தமிடப்பட்டது. மேலும் இந்த பிரான்டுகளுடன் இணைந்து ZTE 5ஜி தொழில்நுட்பங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் டிசம்பர் 2017-இல் 5ஜி தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கத்தை எரிக்சன் அளித்திருந்தது. இதில் அந்நிறுவனம் விநாடிக்கு 5.7 ஜிபி வேகம் வழங்கும் தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கமளித்தது.
    பிராஜக்ட் லிண்டா மற்றும் ஹைப்பர்ஃபிளக்ஸ் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை ரேசர் நிறுவனம் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
    லாஸ் வேகாஸ்:

    ரேசர் நிறுவனம் பிராஜக்ட் லிண்டா மற்றும் ஹைப்பர்ஃபிளக்ஸ் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    பிராஜக்ட் லிண்டா என்பது 13.3 இன்ச் அளவு கொண்ட லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் ரேசர் போன் மூலம் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் சாதனங்களின் ஹைப்ரிட் கான்செப்ட் போன்று உருவாகியிருக்கும் பிராஜக்ட் லிண்டா, லேப்டாப்பில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்குகிறது. 

    ஹைப்பர்ஃபிளக்ஸ் என்பது முழுமையான வயர்லெஸ் தொழிலநுட்பம் மூலம் இயங்கும் மவுஸ் ஆகும். இந்த மவுஸ் இயங்குவதற்கான முழு மின்திறனையும் இதனுடன் வழங்கப்படும் மவுஸ் பேடில் இருந்தே எடுத்து கொள்கிறது. இந்த தொழில்நுட்பம் மவுஸ் மற்றும் அதற்கான மவுஸ் பேட் சாதனத்துடன் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வயர்லெஸ் மவுஸ் சாதனத்தை தனியே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.



    பிராஜக்ட் லிண்டா லேப்டாப்பில் மற்ற லேப்டாப்களில் வழங்கப்படும் டச்பேட் இருக்கும் பகுதியில், ரேசர் போனினை பொருத்த வழி செய்கிறது. இவ்வாறு செய்யும் போது ஒற்றை பட்டனை கிளிக் செய்து பிராஜக்ட் லிண்டாவை ஆண்ட்ராய்டு லேப்டாப் போன்று மாற்றி விடுகிறது. ஸ்மார்ட்போனின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் சாதனத்தை சீராக இயங்க வழி செய்கிறது.

    இந்த லேப்டாப் 15 மில்லிமீ்ட்டர் மெல்லிய யுனிபாடி CNC அலுமினியம் சேசிஸ் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் டாக் செய்யப்பட்ட நிலையில் பிராஜக்ட் லிண்டாவின் எடை 1.25 கிலோவாக உள்ளது. இத்துடன் 13.3 இன்ச் குவாட் எச்டி தொடுதிரை வசதி மற்றும் பில்ட்-இன் கீ-போர்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரேசர் போனினை டச்பேட் அல்லது இரண்டாவது திரை போன்று பயன்படுத்திக் கொள்ள முடியும். லேப்டாப் கீபோர்டில் ரேசர் க்ரோமா பேக்லைட் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு நிறங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    புதிய கான்செப்ட் லேப்டாப் 53.6Whr பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி டாக் செய்யப்பட்ட போனினை முழுமையாக மூன்று முறை சார்ஜ் செய்யலாம் என ரேசர் தெரிவித்துள்ளது. 200 ஜிபி மெமரி கொண்ட லேப்டாப் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்- ஏ போர்ட், யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட், 720 பிக்சல் திறன் கொண்ட வெப்கேமரா, டூயல்-அரே மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிராஜக்ட் லிண்டா சந்தையில் விற்பனைக்கு வருவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



    ஹைப்பர்ஃபிளக்ஸ் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட கொர்சேர் டார்க் கோர் RGB மவுஸ் மற்றும் கொர்சேர் MM1000 Qi வயர்லெஸ் சார்ஜிங் மவுஸ் பேட் போன்றதாகும். இந்த சாதனமும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் Qi தர சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ரேசர் ஹைப்பர்ஃபிளிக்ஸ் மவுஸ் பேடில் காந்த திறன் மூலம் மவுஸ்-க்கு நேரடியாக மின்சக்தியை பரிமாற்றம் செய்கிறது. 

    மவுஸ்-க்கு நேரடியாக மின்சக்தியை வழங்கும் முதல் சாதனமாக ஹைப்பர்ஃபிளிக்ஸ் இருக்கிறது என ரேசர் தெரிவித்துள்ளது. ரேசர் ஹைப்பர்ஃபிளிக்ஸ் வயர்லெஸ் வன்பொருள் காம்போ 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அமெரிக்காவில் ஹைப்பர்ஃபிளிக்ஸ் வன்பொருள் சாதனம் 249 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
    ஹெச்.பி. நிறுவனத்தின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    லாஸ் வேகாஸ்:

    ஹெச்.பி. நிறுவனம் புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 கன்வெர்டிபிள் லேப்டாப் மற்றும் ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட் லேப்டாப் சாதனங்களை லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறு்ம சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    ஸ்பெக்டர் X360 15 லேப்டாப் மட்டுமின்றி ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட் லேப்டாப் மற்றும் பல்வேறு இதர சாதனங்களை ஹெச்.பி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 லேப்டாப் 8-ம் தலைமுறை கோர் i7-8705G பிராசஸர் மற்றும் ரேடியான் RX வேகா M கிராஃபிக்ஸ் கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும். ஸ்பெக்டர் X360 லேப்டாப் 12 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. 



    இதன் மற்றொரு மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் என்விடியா ஜீஃபோர்ஸ் MX 150 டிஸ்கிரீட் கிராபிக்ஸ் வழஙஅகப்பட்டுள்ளது. இந்த மாடல் 13.5 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.  

    புதிய 2 இன் 1 லேப்டாப் அலுமினியம் CNC மெஷின்டு சேசிஸ், 19.5 மில்லிமீட்டர் ப்ரோஃபைல் வழங்கப்பட்டிருக்கிறது. ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 மாடல் டார்க் ஆஷ் சில்வர் மற்றும் காப்பர் லூக்ஸ் அக்சென்ட் என ஒற்றை நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.  

    15.6 இன்ச் 4K 2160x3840 பிக்சல் UHD தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை IR கேமரா, விண்டோஸ் ஹெல்லோ மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2.1 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த லேப்டாப் அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை 1369.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.87,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட்:

    ஹெச்.பி. என்வி X2 மாடல் ஆல்வேஸ் கனெக்டெட் கணினி ஆகும். இதில் ஃபேன்லெஸ் CNC மெஷின்டு அலுமினியம் ஷெல் கொண்டுல்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆல்வேஸ் கனெக்டெட் விண்டோஸ் கணினியின் லேப்டாப் மாடல் ஆகும். 

    ஹைப்ரிட் மாடலில் 12.3 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த லேப்டாப் 7-ம் தலைமுறை இன்டெல் கோர் Y-சீரிஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஹைப்ரிட் மாடல் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும். 

    இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி 17 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வைஃபை, மேம்படுத்தப்பட்ட எல்.டி.இ. சப்போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஹெச்.பி. என்வி X2 766 கிராம் எடை கொண்டுள்ளது.
    சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர், 8 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    18.5 எம்.எம். தடிமனாக இருக்கும் நோட்புக் 7 ஸ்பின் (2018) 1.53 கிலோ எடை கொண்டிருக்கிறது. 13.3 இன்ச் ஃபுல் எச்டி PLS தொடுதிரை கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் சாதனத்தை வழக்கமான கணினி அல்லது டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும்.

    256 ஜிபி எஸ்.எஸ்.டி. டிரைவ், விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டிருப்பதோடு லாக்இன் செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலம் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஆக்டிவ் பென் சப்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும்.  



    ஆக்டிவ் பென் வழங்கப்பட்டிருப்பதால் மிக எளிமையாக குறிப்புகளை எடுக்க முடியும். இத்துடன் ஸ்டூடியோ பிளஸ் வசதி வழங்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும். 

    இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி, யு.எஸ்.பி. 3.0x1, யு.எஸ்.பி. 2.0x1, எச்.டி.எம்.ஐ மற்றும் எச்பி / மைக் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் வீடியோ சாட் மேற்கொள்ள வி.ஜி.ஏ. கேமரா ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு, அதன் பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் கேலக்ஸி டேப் A7.0 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனம் பட்ஜெட் ரக டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கேலக்ஸி டேப் A 2017 அறிமுகம் செய்த சாம்சங் இந்த ஆண்டு கேலக்ஸி டேப் A7.0 மாடலை ரூ.9,500 விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

    ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும் புதிய கேலக்ஸி டேப் A7.0 கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய சாதனத்தை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சாம்சங் கேலக்ஸி டேப் A7.0 ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு வீடியோ பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    சாம்சங் கேலக்ஸி டேப் A7.0 சிறப்பம்சங்கள்:

    - 7.0 இன்ச் கேலக்ஸி டேப் A7.0 எச்டி ரெசல்யூஷன்
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 1.5 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு இயங்குதளம்
    - 5 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 4000 எம்ஏஎச் பேட்டரி
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்

    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேலக்ஸி டேப் A 2017 சாதனத்தை ரூ.17,990க்கு வெளியிட்டது. 8.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    பிக்ஸ்பி ஹோம் சப்போர்ட், சாம்சங் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.
    இந்தியர்களின் மொபைல் டேட்டா பயன்பாடு பன்மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களின் சராசரி டேட்டா பயன்பாடு தினமும் 70 எம்.பி.யாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் சராசரியாக 1.6 ஜிபி அளவு டேட்டாவினை தினமும் பயன்படுத்தி இருக்கின்றனர் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாகத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
     
    டேட்டா பயன்பாடு மட்டுமின்றி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் சேவைகளின் மின்னணு விநியோக முறையும் அதிகரித்து இருப்பதாக மக்களவைக்கு ரவி ஷங்கர் பிரசாத் அனுப்பிய பதிலில்ல குறிப்பிட்டிருக்கிறார். 

    ஜூன் 2014-ம் ஆண்டில் டேட்டா பயன்பாடு மாதம் 70.10 எம்.பி.யாக இருந்தது. இந்த எண்ணிக்கை செப்டபம்ர் 2017 ஆண்டில் 1600 எம்.பி.யாக அதிகரித்திருக்கிறது என அவர் தெரிவித்தார். ஜூன் 201-இல் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25.94 கோடியாக இருந்தது. செப்டம்பர் 2017-இல் இந்த எண்ணிக்கை 42.9 கோடியாக அதிகரித்திருக்கிறது.

    டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் டிசம்பர் 2015-இல் 60.7 கோடியாக இருந்து, அக்டோபர் 2017-இல் 153 கோடியாக அதிகரித்திருக்கிறது. பொது சேவை மையங்கள் டிஜிட்டல் சேவைகளை நாட்டு அனைத்து பகுதிகள் குறிப்பாக ஊரக பகுதிகளை சேர்த்து கொண்டு செல்கின்றன என பிரசாத் தெரிவித்தார்.

    நவம்பர் 30, 2017 வரை 2,71,311 பொது சேவை மையங்கள் இயங்கி, நாடு முழுக்க இ-சேவைகளை வழங்கி வருகின்றன, இவற்றில் 1.73 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இயங்கி வருகின்றன. 2013-இல் இணைய பரிவர்த்தனைகள் 241 கோடியாக இருந்த நிலையில், 2017-இல் 3013 கோடியாக அதிகரித்திருக்கிறது.
    ×