search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் பிக்சல்"

    கூகுள் நிறுவனம் மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. கூகுள் வழக்கப்படி இந்த ஆண்டும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ரோலன்ட் குவான்ட் வெளியிட்டிருக்கும் தகவலில் கூகுள் நிறுவனம் பட்ஜெட் விலையில் பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மே 2019-இல் வெளியிடப்படும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.



    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான பணிகளை ஒரு மாதத்திற்கு முன் கூகுள் துவங்கியுள்ளதாகவும், இதுவரை சிப்செட் தவிர மற்ற விவரங்கள் அறியப்படவில்லை. முன்னதாக இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போனினை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. 

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் மீண்டும் வெளியாக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் குறித்த மற்ற விவரங்கள் இதுவரை அறியப்படாத நிலையில், வரும் நாட்களில் மேலும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    ×