என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தகவல்கள்
    X

    சீன நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தகவல்கள்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ZTE கார்ப் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அறிவிப்பை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
    சான்பிரான்சிஸ்கோ:

    சின ஸ்மார்ட்போன் நிறுவனமான ZTE கார்ப் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனினை 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடுகிறது. 

    ZTE கார்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிக்சின் செங் இத்தகவலை வெளியிட்டார். மேலும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் வெளியிடப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2019-ம் ஆண்டின் துவக்கதில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும் நாட்டில் நெட்வொர்க் கிடைப்பதை பொருத்து திட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் 5ஜி வசதி கொண்ட டேப்லெட் அல்லது வயர்லெஸ்-இண்டர்நெட் ஹப் ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.



    ZTE கார்ப் சார்பில் 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் நிலையில், ஹூவாய் மற்றும் ZTE தயாரித்த மொபைல் போன்களை அமெரிக்காவில் பயன்படுத்த அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்வதற்தகான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5ஜி சோதனை செய்ய ZTE நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒப்பந்தமிடப்பட்டது. மேலும் இந்த பிரான்டுகளுடன் இணைந்து ZTE 5ஜி தொழில்நுட்பங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் டிசம்பர் 2017-இல் 5ஜி தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கத்தை எரிக்சன் அளித்திருந்தது. இதில் அந்நிறுவனம் விநாடிக்கு 5.7 ஜிபி வேகம் வழங்கும் தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கமளித்தது.
    Next Story
    ×