search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notebook"

    • எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார்.

    திருப்பரங்குன்றம்

    எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் 16-வது ஆண்டு நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஹார்வி பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சக்தி வேல், அண்ணாமலை, வள்ளியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மன்ற செயற்குழு உறுப்பினர் வேட்டையார் வரவேற்றார். பாண்டியராஜன் தொடக்க உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், பாண்டியன் நகர் குடி யிருப்போர் நல சங்க தலைவரும், சமூக ஆர்வலரு மான வ.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

    இதில் மாமன்ற உறுப்பி னர்கள் இந்திரா காந்தி, விஜயா, தென் மண்டல ெரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொன்.மனோகரன், மன்ற துணைத் தலைவர் காளிதாஸ், ஹார்விபட்டி அரவிந்தன், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரு வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் நிலையில் நோட்டுகள் எப்போது கிடைக்கும் என தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • பல ஆண்டுகளாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் 168 அரசு தொடக்க பள்ளிகள், 39 நடுநிலை பள்ளிகள், 16 உயர்நிலைப் பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, சீருடை, காலணி, வண்ணப்பென்சில், கணித உபகரண பெட்டி, பஸ் பயண அட்டை, புவியியல் வரைபட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கடந்த மாதம் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் நோட்டு உள்ளிட்ட பிற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. இரு வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் நிலையில்நோட்டுகள் எப்போது கிடைக்கும் என தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் சொந்த செலவில் நோட்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

    இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-

    அவ்வப்போது துறை ரீதியான அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது மாணவர்களின் நோட்டுகளை சரிபார்க்க கோரி மாணவர்களிடம் கேள்வி எழுப்பினால், இன்னும் நோட்டுகள் தரவில்லை என்கின்றனர். அதே பதிலை ஆசிரியர்களும் தெரிவிக்கும்போது கடிந்து கொள்கின்றனர். பல ஆண்டுகளாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது.சில பள்ளிகளில் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சொந்த செலவில் எழுது பொருட்களையும் நோட்டுகளையும் விலைக்கு வாங்கி மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். விரைந்து நோட்டுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சோழவந்தானில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
    • ரூ.25ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள், எழுதுபொருட்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார்.பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஆதிபெருமாள் முன்னிலை வைத்தார். ரூ.25ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருட்களை முன்னாள் மாணவர்களான கரூர் எல்.ஐ.சி. துணை மேலாளர் முத்துராமன்,சொக்கலிங்கபுரம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜோயல்ராஜ், இல்லம் தேடிகல்வித் திட்ட மாநில கருத்தாளர் ராணிகுணசீலி ஆகியோர் வழங்கினர்.

    தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஒருங்கிணைத்தார். ஆசிரியை பிரேமாஅன்னபுஷ்பம் வரவேற்றார். ஆசிரியைகள் வனிதாசாந்தகுமாரி, திவ்யா, கிறிஸ்டிஜெயஸ்டார் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். ஆசிரியை பிரேம்குமாரி நன்றி கூறினார்.

    ×