என் மலர்
செய்திகள்

அமேசானில் ஜியோபோன் விற்பனை?
ரிலையன்ஸ் ஜியோபோன் இரண்டாம் கட்ட விற்பனை குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், அமேசான் தளத்தில் ஜியோபோன் விற்பனை செய்யப்பட்டது.
புதுடெல்லி:
ஸ்மார்ட் பீச்சர்போன் என அழைக்கப்படும் ரிலையன்ஸ் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் பிரபலமாக இருந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோபோன் விற்பனை மீண்டும் துவங்க பெரும்பாலானோரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அமேசான் வலைதளத்தில் விற்பனையாளர் ஒருவர் ஜியோபோன்களை விற்பனைக்கு பட்டியலிட்டிருந்தார்.
அமேசான் தளத்தில் ஜியோபோன் விலை ரூ.1,690 என்றும் விநியோகம் செய்ய கூடுதலாக ரூ.100 வரை வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ.1,790 வரை செலுத்த வேண்டும்.
ஜியோ விKற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூ.1500 மட்டும் செலுத்தி வாங்க முடியும். இத்துடன் ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் செலுத்தும் முன்பணத்தை முழுமையாக திரும்ப பெற முடியும். ஜியோ விதிமுறைகளுடன் முன்பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப பெறுவதோடு வாடிக்கையாளர்கள் ஜியோபோனினை மூன்று ஆண்டுகள் நிறைவுற்றதும் திரும்ப வழங்க வேண்டும்.

விலை அதிகம் என்பதோடு மட்டுமின்றி அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ள ஜியோபோனில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான ஜியோபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மட்டுமே வழங்கப்பட்டது. அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்த ஜியோபோன் நம்பகத்தன்மை கேள்விகுறியாகவே இருக்கிறது.
இன்று காலை முதல் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்த ஜியோபோன் தற்சமயம் நீக்கப்பட்டிருக்கிறது. அமேசானில் போலி ஜியோபோன் விளம்பரம் நீக்கப்பட்டு, ஜியோபோன் பேக் கவர் விளம்பரம் காணப்படுகிறது. நீக்கப்பட்ட போலி ஜியோபோன் F90M என்ற மாடல் பெயர் கொண்டிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோபோன் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவன ஆண்டு பொதுகூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஜியோபோனில் ஜியோ செயலிகளும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

Next Story