search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமண தம்பதி"

    • மூன்று பேரின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • புதுமண தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திக் (29) என்பவருக்கும் நவுபியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், புதுமண தம்பியான இவர்கள் பாரிப்பள்ளியை அடுத்த பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக சென்றனர்.

    விருந்து முடிந்த நிலையில், சித்திக் மற்றும் நவுபியா அங்குள்ள ஆற்றுப் பகுதிக்கு சென்றனர். இவர்களுடன், உறவினர் அன்சில் என்பவரும் சென்றிருந்தார்.

    புதுமண தம்பதி ஆற்றின் கரையோரத்தில் இருந்த பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, நிலைத்தடுமாறிய இருவரும் ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த அன்சிலும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேற்று காலையில் புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கியபடி சடலமாக மீட்டனர். இதேபோல், அன்சிலும் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து, 3 பேரின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம் :

    திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் வித, விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. மணமகனின் வீட்டில் கால் வைப்பதற்கு முன் மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது, அரிசி நிரப்பப்பட்ட நாழியை காலால் தட்டி விடுவது உள்பட பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சடங்குகள் தவிர மணமக்களை மனதளவிலும், உடல் ரீதியாகவும் வேதனைப்படுத்தும் சில சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து மணமகனின் வீட்டுக்குள் செல்வதற்கு முன் புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சினுக்கும், கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்த சஜ்லாவுக்கும் திருமணம் நடந்தது. மணமகனின் வீட்டின் முன்பு வைத்து புதுமண தம்பதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அதன் பிறகு சஜ்லா வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது திடீரென மணமக்களின் பின்னால் இருந்த ஒரு நபர் 2 பேரின் தலையையும் பிடித்து பலமாக முட்ட வைத்தார். இதில் 2 பேருக்கும் கடும் வேதனை ஏற்பட்டது. சஜ்லாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சஜ்லாவுக்கு ஆறுதல் கூறி மணமகனின் தாய் உள்பட உறவினர்கள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மணமகள் சஜ்லா கூறும்போது, 'திடீரென நடந்த இந்த சம்பவத்தால் தலையில் கடும் வலி ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்.

    மணமகன் சச்சின் கூறும்போது, 'இப்படி ஒரு சம்பிரதாயம் குறித்து கேள்விப்பட்டதே இல்லை' என்றார். இதுபோன்ற சம்பிரதாயம் பாலக்காட்டில் இருக்கிறது என்று வேறு சிலரும் கூறினர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
    • திருமண வீட்டில் நடந்த கொலை சம்பவம் கிராம மக்களிடையே பரவியது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மெயூன்பூர் மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். இவர் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தம்பி சோனு (வயது21)வுக்கும், சோனி (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவ்வீர் யாதவ் சொந்த கிராமத்துக்கு வந்து இருந்தார். திருமணத்தில் ஏராளமான உறவினர்களும் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டதுடன் இந்த திருமண விழா விமரிசையாக நடந்தது.

    சில உறவினர்கள் திருமண வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று இரவு அனைவரும் தூங்கிகொண்டு இருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் சிவ்வீர் யாதவ் எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ஆவேசத்துடன் தூங்கி கொண்டிருந்தவர்களை வெட்டினார். மேலும் அவர்கள் தலையையும் துண்டித்தார்.

    இந்த கொடூர கொலை வெறி தாக்குதலில் அவரது சகோதரர்கள் புல்லான் (25) புதுமணத் தம்பதியான சோனு-சோனி மற்றும் மைத்துனர் சவுரப்(23) நண்பர் தீபக் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி டோலி(24) அத்தை சுஷ்மா (35) ஆகியோருக்கும் கோடாரி வெட்டு விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் 5 பேரை கொன்ற சிவ்வீர் யாதவ் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. அவர் பயன்படுத்தியது அனுமதி இல்லாத துப்பாக்கி ஆகும்.

    திருமண வீட்டில் புதுமணத்தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பரவியது. இதையடுத்து அவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பிணமாக கிடந்தவர்கள் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • காதலுக்கு முதலில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
    • ஒரே சட்டியில் உணவை வைத்து இருவரையும் சாப்பிட வைத்து மகிழ்ந்தனர்.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை புங்கறை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). பி.காம் பட்டதாரியான இவர், ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான பிரியா (24) என்பவரும் கடந்த பத்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலியை கரம்பிடிக்க முறைப்படி விக்னேஷ், பெண் கேட்டு உள்ளார்.

    இந்த காதலுக்கு முதலில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் சமாதானமடைந்த அவர்கள், திருமணத்திற்கு சம்மதித்தனர். தொடர்ந்து விக்னேஷ்-பிரியா திருமணம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.

    விக்னேசின் காதல் திருமணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய அவரது நண்பர்கள், மணமக்களை செண்டை மேளம் முழங்க குத்தாட்டம் போட்டு அழைத்து சென்று மண் சட்டியில் விருந்து படைத்தனர்.

    ஒரே சட்டியில் உணவை வைத்து இருவரையும் சாப்பிட வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பெண் வீட்டில் கொடுத்த சீர் வரிசைகளை சுமந்தபடி நண்பனை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.

    • பொதுமக்கள் பாராட்டு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் வினோத்குமார் (வயது 30) இவருக்ககும் லேகாஸ்ரீ என்பவருக்கும் நேற்று காலையில் பள்ளிகொண்டாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்த இளைஞரான புது மாப்பிள்ளை வினோத்குமார் தனது திருமணத்தின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார். அதன்படி தான் வசிக்கும் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.

    நேற்று திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வினோத்குமார்-லேகா ஸ்ரீ ஆகியோர் அவர்கள் வசிக்கும் விநாயகபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றியகுழு துணை தலைவர் அருண்முரளி, கே. வி.குப்பம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.சீதாராமன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார், கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    மரக்கன்றுகளை நட்ட புதுமண தம்பதிகளை அப்பகுதி பொதுமக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் வெகுவாக பாராட்டினர்.

    கர்நாடகாவைச் சேர்ந்த ஜேசிபி டிரைவர் தனது திருமணத்தின் போது ஜேசிபி வாகனத்தில் அமர்ந்து ஊர்வலமாக சென்றது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #JCBride
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சேட்டன். இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சேடனுக்கும், மமதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தனது ஜேசிபி இயந்திரத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவரான இவர் புதிய முயற்சியில் ஈடுபட்டார்.


    திருமணம் முடிந்த பின் மனைவியை ஜேசிபி இயந்திரத்தின் முன்னாள் உள்ள தூக்கியில் உட்கார வைத்தார். பின்னர் வீடு வரை அந்த வாகனத்தில் இருவரும் ஊர்வலமாக சென்றனர். அதனை கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.


    தனது பணி மீது உள்ள மரியாதையினாலும், கஷ்டப்பட்டு வாங்கிய ஜேசிபி மீது கொண்ட அன்பினாலும் இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டதாக சேட்டன் தெரிவித்தார்.  #JCBride

    ×