பாறை மீது நின்று "செல்பி"- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட புதுமண தம்பதி சடலமாக மீட்பு

மூன்று பேரின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.புதுமண தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாறை மீது நின்று "செல்பி"- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட புதுமண தம்பதி சடலமாக மீட்பு
Published on

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திக் (29) என்பவருக்கும் நவுபியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், புதுமண தம்பியான இவர்கள் பாரிப்பள்ளியை அடுத்த பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக சென்றனர்.

விருந்து முடிந்த நிலையில், சித்திக் மற்றும் நவுபியா அங்குள்ள ஆற்றுப் பகுதிக்கு சென்றனர். இவர்களுடன், உறவினர் அன்சில் என்பவரும் சென்றிருந்தார்.

புதுமண தம்பதி ஆற்றின் கரையோரத்தில் இருந்த பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, நிலைத்தடுமாறிய இருவரும் ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த அன்சிலும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலையில் புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கியபடி சடலமாக மீட்டனர். இதேபோல், அன்சிலும் சடலமாக மீட்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, 3 பேரின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com