search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி வாலிபர்"

    • குடிசைத்தொழில் மூலம் முதுநிலை பட்டதாரி வாலிபர் செயற்கை விறகு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
    • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ். எம்.இ., எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே பின்தங்கிய சிவ கங்கை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் துவங்க வேண்டும் என்று விரும்பி னார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழில் துவங்கி இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று திட்ட மிட்டார். இதற் காக கொல்லங்குடி அழகாபுரி அருகே உள்ள மோர்குழி கிராமத்தை தேர்வு செய்தார்.

    பின்பு தொழில் நிறுவனங்கள், வல்லுனர்களுடன் ஆலோ சித்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமாக வளர்ந்து பயனற்ற நிலை யில் உள்ள வேலிக்கருவை மரங்களை செயற்கை விற காக தயாரிக்கும் முயற்சியில் இறங்கி மாவட்ட தொழில் மையத்தை நாடினார். அபா் போதைய கலெக்டர் ஜெய காந்தன் மூலம் மின்கட்டண சலுகை, மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற்றார்.

    அதனைக்கொண்டு 2 கொதிகலன் எந்திரங்களை வாங்கினார். இந்த செயற்கை விறகானது கருவேல மரம், முந்திரி, கடலை, நெல்பதர் ஆகியவற்றை நன்றாக தூளாக்கி தயாரிக்கப்படுகிறது. எந்த ரசாயன கலவையும் சேர்ப்பதில்லை. இதனால் இந்த செயற்கை விறகை பயன்படுத்துவதால் எத்த கைய உடல் பாதிப்பும் ஏற்படு வதில்லை. இதற்கு சுற்றுப்பு றச்சூழல் அனுமதியும் மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியும் பெற்றுள்ளார்.

    இந்த செயற்கைவிறகு 400 டிகிரி வெப்பம் தாங்குவதாக அமைந்துள்ளது. இவர் இந்த செயற்கை விறகை காரைக் குடி, புதுக்கோட்டையில் உள்ள ஆவின் நிறுவனங்க ளுக்கு அனுப்பி வருகிறார். இது தவிர தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கிறார். திண்டுக் கல் டான்பெட் நிறுவனத்திற் கும் இந்த செயற்கை விறகு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த குடிசைத்தொழிலில் நேரடியாக 20 பேரும், மறை முகமாக 150 முதல் மொத்தம் 200 நபர்கள் வேலை பார்த்து பயனடைந்து வருகிறார்கள். ஒரு டன் செயற்கை விறகு ரூ.7000-க்கு வாங்கப்படுகிறது. தினசரி 20 டன் உற்பத்தி செய்து வருகிறார். இதை விரி வுபடுத்துவது குறித்தும் திட்ட மிட்டு வருகிறார்.

    இந்த செயற்கை விறகை எதிர்கால திட்டத்தில் ஓட்டல் களுக்கு அனுப்பவும், அதற் கான நவீன அடுப்பு தயாரிக் கும் திட்டத்திலும் ஈடுபட்டுள் ளார். இதன் மூலம் சமையல் எரிவாயு பயன்படுத்துவது குறையும். செயற்கை விறகை பயன்படுத்துவதால் எரிபொ ருள் செலவு மிச்சமாகும். புகைஏற்படாது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். இதையும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த உள்ளேன் என்று ராஜேஷ் கூறினார்.

    இத்தகைய செயற்கை விறகு தயாரிப்பு குறித்து வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு இத்தொழில் துவங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளேன். எனவே இதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

    முதல்தலைமுறை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இவரது பணியினை ஊக்கப்ப டுத்தும் வகையில் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் விருதினையும், 2023-ம் ஆண்டில் டெட்கோ விருதி னையும், சிறுகுறு தொழில் சங்கத்தின்பல்வேறு விருதுக ளையும் பெற்றுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் மர்மமான முறையில் பட்டதாரி வாலிபர் இறந்து கிடந்தார்.
    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    மதுரை மகால் 8-வது தெருவை சேர்ந்தவர் ராமகோடி. இவரது மகன் ராமவிக்னேஷ்(வயது27). டிப்ளமோ பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக உறவினரின் புத்தக கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது பாட்டி அருகில் உள்ள பந்தடி பகுதியில் வசித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தினமும் ராமவிக்னேஷ் பாட்டி வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வருவது வழக்கம்.

    இந்தநிலையில் அவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ராமவிக்னேஷ் அதன் பின் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டு பலனில்லை.

    இதனிடையே பந்தடியில் உள்ள பாட்டி வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தெற்கு வாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் ராமவிக்னேஷ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக ராமகோடி தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயம் மீது ஆர்வம் கொண்ட புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்றார்.
    • தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்தார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்.

    இவர் பட்டபடிப்பு முடித்துள்ளார்.

    விவசாயம் மீது ஆர்வம் கொண்ட இவர் புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்று தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கோழிக்கொண்டை பூவினை சாகுபடி செய்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறும்போது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்து உள்ளேன்.

    இந்த பூ கிலோ ரூ. 75 முதல் 100 வரை சந்தையில் விற்ப்பனையாகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள கோழி கொண்டை பூ நான்கு மாத அறுவடையில் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்.

    என எதிர்பார்க்கிறேன் மண்ணையும் மக்களையும் காக்க இந்த முயற்சியில் இப்பகுதியில் முதன்முதலாக ஈடுபட்டுள்ளேன் என்றார்.

    • தாராபுரம் உடுமலை சாலையில் காங்கயம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.
    • குடிமங்கலத்தை சேர்ந்த கவுதம் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் :

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா குமார பாளையம் மேற்கு வீதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ஜெயக்குமார் (வயது 22). பி.இ.பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த வேலையாக தாராபுரம் வந்தார். பிறகு மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் செல்வ தற்காக தாராபுரம் உடுமலை சாலையில் காங்கயம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கி எதிரே அதிவேகமாக வந்த பால் மினிவேன் ஜெயக்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்குபதிவு செய்து மினிவேனை ஓட்டி வந்த குடிமங்கலத்தை சேர்ந்த கவுதம் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
    • மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர்.

    நீலாம்பூர்

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் இவரது மகன் கவுதம் (வயது 22). விக்னேஷ் (22).

    நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் கணியூர் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் கவுதம், விக்னேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விக்னே ஷ் பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்சு ஊழி யர்கள் உயிருக்கு போராடிய கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள். பலியான விக்னேஷ் நாமக்கல் எஸ்.பி. புதூரை சேர்ந்தவர். 

    • சுதந்திர போராட்ட வீரர்கள், பறவைகள், விலங்குகள், நடனம், இயற்கை காட்சிகளையும் சிறிய பென்சில் மூலம் வடிவமைத்து உள்ளார்.
    • 21 நாட்கள் அங்குலம் அங்குலமாக ரசித்து படத்துக்கு உயிரோட்டமான உருவம் கொடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தம் நகரை சேர்ந்தவர் சவித்ரு (வயது 30) . பி.டெக்கில் ஆடை வடிவமைப்பாளர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

    சிறு வயது முதலே சிற்பக்கலை மீது ஆர்வம் உடையவர். படிக்கும் காலத்திலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சோப்பு, பென்சில், களிமண் உள்ளிட்ட பொருட்களில் சிற்பம் வடிவமைத்து வந்தார். எழுதுவதற்கு பயன்படுத்தும் பென்சிலில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செய்துள்ளார்.

    சுதந்திர போராட்ட வீரர்கள், பறவைகள், விலங்குகள், நடனம், இயற்கை காட்சிகளையும் சிறிய பென்சில் மூலம் வடிவமைத்து உள்ளார்.

    இந்த நிலையில் இவர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவல் படித்தார். அதில் ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பொக்கிஷ தகவல்களை தெரிந்து கொண்டார். செவி வழி செய்தியாக மட்டுமே ராஜராஜ சோழன் வரலாறு அறிந்திருந்த சவித்ரு பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு ராஜராஜ சோழன் பெரிய கோவில் கட்டிய விதம், அவரது ஆட்சியின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்களை தெரிந்து கொண்டார்.

    இதன் தாக்கத்தால் பென்சில் முனையில் ராஜராஜ சோழனாகிய பொன்னியின் செல்வன் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். 21 நாட்கள் அங்குலம் அங்குலமாக ரசித்து படத்துக்கு உயிரோட்டமான உருவம் கொடுத்தார். முடிவில் தத்ரூபமாக ராஜராஜசோழன் உருவத்தை பென்சில் முனையில் கொண்டு வந்தார்.

    இதனை அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள், சமூக அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பென்சில் முனையில் வரையப்பட்ட மாமன்னர் உருவத்தை பார்த்து ரசித்தனர். சவித்ருவை பாராட்டி அவரை மேலும் ஊக்கப்படுத்தினர்.

    இதுகுறித்து சவித்ரு கூறும்போது:-

    நான் பி.டெக் படித்தாலும் எனக்கு சிற்பக்கலை மீது அதிக அளவில் நாட்டமிருந்தது. இதன் காரணமாக சிறுவயதில் இருந்தே சோப்பு, பென்சில் உள்ளிட்ட பொருட்களில் சிற்பங்களை செதுக்கி வந்தேன். பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு அதன் தாக்கத்தால் பென்சில் முனையில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் செதுக்கினேன்.

    இந்த பொக்கிஷ சிற்பத்தை விற்க எனக்கு மனமில்லை. இதனை காட்சிப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் சொந்த ஆர்வத்தில் சிற்பக்கலை செய்து வருகிறேன் என்றார்.

    • சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    டி.என்.பாளையம், செப். 16-

    கோபிசெட்டி பாளையத்தை அடுத்த நாகர்பாளையம் ரோடு, கந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). பி .எஸ்.சி. பட்டதாரி. பிரகாஷ் சரியாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.


    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பிரகாசை உறவினர்கள், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனோஜ்குமார் பி.எஸ்.சி.,பட்டதாரியான இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது.
    • சம்பவத்தன்று மனோஜ்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தாங்கமுடியாத அவர், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி, அருகே ராமநத்தம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்மகன் மனோஜ்குமார்(வயது 26) பி.எஸ்.சி.,பட்டதாரி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மனோஜ்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தாங்கமுடியாத அவர், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்தார். உறவினர்கள்அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனோஜ்குமார், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உதவியுடன் முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்தனர்
    • எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் சென்னையில் பணிபுரிந்தபோது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளார்

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக சுற்றித் திரிந்தார். கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள வங்கி களின் நடை பாதையில் பெரும்பாலும் இவர் அமர்ந்திருப்பது வழக்கம். எப்பொழுதும் ஆங்கில பத்திரிகைகளை கையில் வைத்து படித்துக் கொண்டிருப்பார். அந்தப்பகுதியில் உள்ள மக்கள் வழங்குகின்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அப்போது மன நலம் பாதித்த நிலையில் அந்த பகுதியில் அழுக்கு துணியுடன், வருடக் கணக்காக வெட்டப்படாத சடை முடியுடன் காணப்பட்ட அந்த நபரை கண்டதும் காணாமல் போன தமது உறவினராக இருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர் அருகில் சென்று பேச்சுக் கொடுத்து உள்ளார். முதலில் பேச மறுத்த அவர் பின்னர் முருகனிடம் பேசத் தொடங்கி உள்ளார். அவரது ஊர் மற்றும் பெயர் குறித்து விசாரித்ததில் அவர் சந்தேகம் அடைந்த அதே நபர் என்று தெரிந்தது. உடனடியாக அவர் அந்தப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உதவியுடன் அவரை அருகில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகளை வாங்கி அணிவித்தனர். பின்னர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள தென்மலையில் உள்ள அவரது உறவினர்களுக்கு முருகன் தகவல் கொடுத்தார்.மனநலம் பாதிக்கப்பட்டு 3ஆண்டுகளாக கன்னியாகுமரியில் இருந்த அந்த நபர் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முத்து (வயது35) என்பது தெரியவந்தது. அவர் ராஜபாளையத்தில் தனது பி.காம் பட்டப்படிப்பையும் அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பையும் முடித்துஉள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துஉள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து "திடீர்"என்று காணாமல் போனார். இதுகுறித்து அவரதுஉறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதனால் சென்னை போலீசில் புகார் செய்தனர்.தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் உறவினர்கள் அவரை தேடும் முயற்சியைக் கைவிட்டனர். இந்த நிலையில்தான் நேற்று "திடீர்"என்று கன்னியாகுமரியில் அவர் இருப்பது தெரியவந்தது. அவரது உறவினர்கள் உடனடியாக கன்னியாகுமரி வந்தனர். பின்னர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விவரங்களை தெரிவித்தனர். போலீசார் உரிய விசாரணைக்கு பின்னர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து முத்துவின் சகோதரர் அய்யனார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது சகோதரர் முத்து கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் காணாமல் போனார். அவர் தன்னுடன் பயின்ற ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் தோல்வியின் காரணமாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் இருந்தது. அவரை காணாமல் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வந்தோம். கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற எங்கள் உறவினர் ஒருவர் மூலம் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டு நாங்கள் அழைத்து வந்துள்ளோம் என்றார். அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடந்தே வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது உடன் பயின்ற ஒரு மாணவியை காதலித்ததாகவும் அந்த காதல் கைகூடாத தால் மனநலம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு ஆளானதாகவும் தெரிகிறது.

    எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் சென்னையில் பணிபுரிந்தபோது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளார். இவரது தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு உடன் பிறந்த 3 சகோதரர்களும் 3சகோதரிகளும் உள்ளனர் கன்னியாகுமரிக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வந்திருந்த தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் கடையாலுமூடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், கொற்றிகோடு தலைமை காவலர் ஜஸ்டின் ராஜ் மேலும் அந்தப்பகுதியை சேர்ந்த முஹம்மது, பாபு ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரை மீட்டு அவரை முடிவெட்டி, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த மனித நேய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    குடும்ப பிரச்சினையில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

    மேலசொக்கநாதபுரம் :

    போடி அருகே தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சூர்யா(23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டும் என தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சொந்த ஊரிலேயே தொழில் செய்ய வேண்டும் என்றும், வெளியூர் செல்ல கூடாது என்றும் கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த சூர்யா விஷமாத்திரை தின்று மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் ராமர்(65). இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் தங்காமல் வீதிகளிலேயே சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பெரியாற்று பாலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×