வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர்

வீட்டில் மர்மமான முறையில் பட்டதாரி வாலிபர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர்
Published on

மதுரை

மதுரை மகால் 8-வது தெருவை சேர்ந்தவர் ராமகோடி. இவரது மகன் ராமவிக்னேஷ்(வயது27). டிப்ளமோ பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக உறவினரின் புத்தக கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவரது பாட்டி அருகில் உள்ள பந்தடி பகுதியில் வசித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தினமும் ராமவிக்னேஷ் பாட்டி வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வருவது வழக்கம்.

இந்தநிலையில் அவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ராமவிக்னேஷ் அதன் பின் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டு பலனில்லை.

இதனிடையே பந்தடியில் உள்ள பாட்டி வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தெற்கு வாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் ராமவிக்னேஷ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக ராமகோடி தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com